சுற்றுச்சூழலுக்கு உகந்த மட்பாண்டங்களின் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

மட்பாண்டங்கள்
மட்பாண்டங்கள்https://chinnuadhithya.wordpress.com
Published on

ம் நாட்டில் மட்பாண்டங்கள் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை உணவு சமைப்பதற்கும், உணவை சேமித்து வைப்பதற்கும் பயன்படுகின்றன. இவற்றை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

ஆரோக்கிய நன்மைகள்: மண் பானைகள் அவற்றின் நுண்துளை தன்மையால் சேமிக்கப்படும் தண்ணீரை இயற்கையாகவே குளிர்ச்சியாக வைக்கும் தன்மை வாய்ந்தது. இந்தத் தண்ணீர் குளிர்ச்சியாக இருந்தாலும் குளிர்ப்பதன பெட்டியில் வைத்து உபயோகப்படுத்தப்படும் தண்ணீரை போல அதிகமாக குளிர்ச்சி தராது. ஆனால், அருந்துவதற்கு சுவையாகவும் இதமான குளிர்ச்சியும் தரும். ஃப்ரிட்ஜ் தண்ணீர் போல இது சளி, இருமலுக்கு வழிவகுக்காது.

மண் பாத்திரங்களில் உணவோ அல்லது நீரோ சேமிக்கப்படும் போது, அது அவற்றில் இருக்கும் உள்ளடக்கங்களின் அமிலத் தன்மையை நடுநிலையாக்க உதவுகிறது. பிஹெச் அளவை சமநிலைப்படுத்துகிறது. இதனால் செரிமானம் நன்றாக நடக்கிறது

ஊட்டச்சத்துப் பாதுகாப்பு: மண் பானையில் சமைக்கும்போது பெரும்பாலும் குறைந்த வெப்பநிலையில் சமைக்கப்படுகிறது. இதனால் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அழியாமல் பாதுகாக்கப்படுகின்றன. மெதுவான சமையல் செய்முறை அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை தக்க வைத்து சுவையை அதிகரிக்கிறது.

சுற்றுச்சூழல் நன்மைகள்: மண் பானைகள் சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஏற்றவை. இவை இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுவதால் எளிதில் மக்கும் தன்மை வாய்ந்தவை. பிளாஸ்டிக் அல்லது உலோகத்தைப் போல சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக விளங்குகின்றன.

ஆற்றல் திறன்: மண் பானைகள் வெப்பத்தை நன்கு தக்கவைத்து மெதுவாக அதிக ஆற்றல் திறன் உள்ள சமையல் செய்முறையை அனுமதிக்கிறது. சூடானதும் பானை வெப்பத்தை தக்கவைத்துக் கொள்கிறது. இதனால் நீண்ட நேரம் உணவு சூடாக இருக்கும். அதேபோல கெடாமலும் இருக்கும்.

சுவை மேம்பாடு: மண்ணின் நுண்ணிய தன்மை மெதுவாக சமைக்க அனுமதிப்பதால், உணவின் சுவை அதிகரிக்கிறது. பானையின் ஈரப்பதம் மற்றும் வெப்பம் உணவில் சமமாக பரவுவதற்கு அனுமதிக்கிறது. இதனால் சுவைக்கு அங்கீகாரம் அளிக்கிறது. உணவுகளின் நறுமணத்தை அதிகரித்து சுவையை கூட்டுகிறது. குறிப்பாக, உணவில் மசாலா பொருட்களை ஆழமாக கலக்க உதவுகிறது.

கலாசார மற்றும் அழகியல் மதிப்பு: மண்பாண்டங்கள் பெரும்பாலும் கையால் செய்யப்படுபவை. அவை உள்ளூர் கைவினைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்துகின்றன. மேலும், இவை தனித்துவமானவை. சமையலறை மற்றும் சாப்பாட்டு மேசைக்கு கலாசாரம் மற்றும் அழகியல் மதிப்பை சேர்க்கிறது. மட்பாண்டங்களை பயன்படுத்துவது ஒரு பாரம்பரிய அடையாளம். பழங்கால சமையல் மரபுகள் மற்றும் பாரம்பரியத்துடன் இணைக்கிறது. பல தலைமுறைகளைக் கடந்து வந்த கலாசார நடைமுறைகளை பாதுகாக்கிறது.

இதையும் படியுங்கள்:
தொப்பையைக் கரைக்கும் வாழைக்காய்!
மட்பாண்டங்கள்

பல்துறை பயன்பாடுகள்: மட்பாண்டங்கள் பல்வேறு  வகையான பயன்களை அளிக்கிறது. உணவுகளை சமைக்க, பரிமாற, சேமித்து வைக்க மற்றும் புளிக்க வைக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பேக்கிங், கொதித்தல் மற்றும் மெதுவாக சமைத்தல் உள்ளிட்ட பல்வேறு உணவு சமையல் முறைகளுக்கு இது ஏற்றது. மண்பானைகளை திறந்தவெளி அடுப்புகளிலும் மண் அடுப்புகள் கல்லடுப்பு, கேஸ் அடுப்பு போன்றவற்றில் பயன்படுத்தலாம். இவை செலவு குறைந்தவை. உலோகம் அல்லது நான்ஸ்டிக் பாத்திரங்களுடன் ஒப்பிடும்போது மண்பானைகள் விலை மலிவானவை.

வெப்ப ஒழுங்கு முறை: மண் பானைகள் நீண்ட நேரத்திற்கு உணவை சூடாக வைத்திருப்பதால் அவற்றை மீண்டும் சூடுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை. இதனால் உணவில் உள்ள சத்துக்கள் அழியாமல் பாதுகாக்கப்படுகின்றன.

நச்சுக்கள் குறைப்பு: சில நவீன சமையல் பாத்திரங்களைப் போல் அல்லாமல் மண்பானைகளில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் சேர்க்கப்படுவதில்லை. சூடாகும்போது நச்சுக்களை வெளியிடக்கூடிய பிற செயற்கை நான்ஸ்டிக் பூச்சுகள் இல்லாமல் இருப்பதால் பயன்படுத்த மிகவும் ஏற்றவை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com