பணக்காரர்கள் தங்கள் வீடுகளில் அதிகமாக இந்த செஸ்டர்பீல்ட் சோபாவையே பயன்படுத்துவார்கள். இந்த சோபாவை பயன்படுத்தும்போது வீடும் பார்ப்பதற்கு ஆடம்பரமாகத் தெரியும். இத்தகைய செஸ்டர்பீல்ட் சோபா உருவான கதையைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
செஸ்டர்பீல்ட்சோபா உலகிலேயே மிகவும் பிரபலமான சோபாவாகக் கருதப்படுகிறது. இதை அதிகமாக பணக்காரர்களே ஸ்டேட்டஸிற்காக வாங்குகிறார்கள். இந்த சோபா அதனுடைய Rolled Armsக்கு பெயர் பெற்றதாகும். இதனுடைய கை வைக்கும் பகுதி மற்றும் சாய்ந்து கொள்ளும் பகுதி இரண்டுமே ஒரே உயரத்தில்தான் இருக்கும். இந்த சோபாவை லெதரால் செய்வார்கள். இந்த சோபாவில் Button tufted ஆக இருக்கும்.
1700ம் ஆண்டு காலக்கட்டத்தில் Lord Philip Stanhope என்பவர் அவருக்குப் பிடித்தமான ஒரு சோபாவை பார்த்து, ரசித்து செய்தார். அதுதான் இந்த செஸ்டர்பீல்ட் சோபாவாகும். இதில் அமரும்போது போட்டிருக்கும் துணி கசங்கக்கூடாது. ஆனால், அமரவும் வசதியாக இருக்க வேண்டும் என்று எண்ணினார். அதற்காக உருவாக்கப்பட்டதே செஸ்டர்பீல்ட் சோபாவாகும்.
Lord Philip Stanhopeதான் Fourth earl of chesterfield. அதனால்தான் ‘செஸ்டர்பீல்ட்’ என்ற பெயர் இந்த சோபாவிற்கு வந்தது. பிறகு பணக்காரர்களும் செஸ்டர்பீல்ட் சோபாவை தங்களுடைய Statusஐ காட்டுவதற்காக வாங்கத் தொடங்கினர்.
19ம் நூற்றாண்டில் விக்டோரியா மகாராணியின் காலக்கட்டத்தில் இந்த வகை சோபா மிகவும் பிரபலம் அடைந்தது. செஸ்டர்பீல்ட் சோபாவை குதிரை முடியை வைத்தே செய்தார்கள். அப்போதுதான் அந்த சோபாவிற்கு சரியான உருவம் கிடைக்கும்.
விக்டோரியா மகாராணி காலக்கட்டத்தில் இந்த சோபா ஒருவருடைய ஸ்டேட்டஸை காட்டுவதற்காகப் பயன்பட்டது. அப்போது இந்த சோபாவை பணக்காரர்கள் வீடுகளில் மட்டுமே காண முடியும். இந்த சோபா ஆடம்பரத்திற்காகவும், வசதிக்காகவும், தனித்துவத்திற்காகவும் வாங்கப்பட்டது. தற்போது வரை இந்த வகை சோபா மிகவும் பிரபலமாகவே உள்ளது. இப்போது இந்த சோபா எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. எனவே, உங்கள் வீட்டையும் ஆடம்பரமாகக் காட்ட வேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பாக இந்த சோபாவை வாங்கிப் பயன்படுத்துங்கள்.