இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த பைக் எதுவென்று கேட்டால் உடனே நினைவிற்கு வருவது, ராயல் என்பீல்ட் பைக்தான். ‘புல்லட்’ என்று அன்பாக அழைக்கப்படும் இந்த வகை பைக் சாதாரண பைக்குகளை விட அதிக எடை கொண்டதாக இருப்பினும், இந்தியர்களின் உணர்வுகளுடன் கலந்த ஒன்றாக இருக்கிறது. இந்த பைக் உழைக்கும் திறனைக்காட்டிலும் தலைமுறை தலைமுறையாக இந்த பைக்கின் Brand name மட்டுமே இதன் புகழுக்குப் போதுமானதாக இருக்கிறது. அத்தகைய சிறப்புமிக்க ராயல் என்பீல்டின் வரலாறு பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
முதன் முதலில் 1901ம் ஆண்டு ராயல் என்பீல்ட் பைக்குகளை தயாரிக்க ஆரம்பித்தார்கள். உலகப் போரில் பிரிட்டிஷ் தன்னுடைய பைக்கை ரஷ்யாவிற்குக் கொடுத்து உதவி செய்தார்கள். இதற்காகவே மக்கள் மத்தியில் இதற்கு ஒரு நல்ல பெயர் கிடைத்தது.
1955ல் சென்னையில் ஒரு கம்பெனி ஆரம்பித்து அந்த பைக்கை Import செய்து விற்கத் தொடங்குகிறார்கள். என்னதான் அந்த வண்டிக்கு பேரும், புகழும் இருந்தாலும் அந்த வண்டியை வாங்க பெரிதாக யாரும் முன்வரவில்லை. இதனால் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்த ராயல் என்பீல்ட், அந்தக் கம்பெனியை மூடும் அளவிற்கு வந்தார்கள். உலகப் போரில் உதவிய ஹீரோவான ராயல் என்பீல்டை மியூசியத்தில் வைக்கலாம் என்று முடிவு செய்தார்கள்.
அப்போதுதான் Eicher motors Group ராயல் என்பீல்ட் கம்பெனியை வாங்குகிறார்கள். இதற்கு முக்கியமான காரணம் சித்தார்த் லால் ஆகும். இந்த பைக்கை எப்படியாவது ஹிட் ஆக்கிவிட வேண்டும் என்று நினைத்த சித்தார்த் லால், தன்னுடைய 13 பிஸ்னஸ்களை இழுத்து மூடிவிட்டு வெறும் பைக் மற்றும் டிரக்கில் மட்டும் முழு கவனத்தையும் செலுத்தினார்.
‘எனக்கே என் பொருளைப் பிடிக்கவில்லை என்றால் மக்கள் எப்படி வாங்குவார்கள்’ என்று நினைத்த சித்தார்த் லால், அந்த பைக்கில் நிறைய மாற்றங்களைக் கொண்டு வருகிறார். உதாரணத்திற்கு ரைட்டில் இருக்கும் கியர் ஷிப்ட்டை லெப்ட்டிற்குக் கொண்டு வருவது போன்ற குட்டி குட்டி மாற்றங்களை செய்கிறார். அதோடு, அந்த பைக்கை அவரே பயன்படுத்துகிறார்.
இதனால் ஏற்கெனவே மக்கள் மத்தியில் இருந்த Emotion உடன் சேர்த்து ஒரு நம்பிக்கையும் உருவானது. அதற்குப் பிறகு விற்பனை கொஞ்சம் கொஞ்சமாக அதிகமானது. Harley-davidson போன்று வர வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால், தற்போது Harley-davidson பைக்குகளையே தோற்கடித்து விட்டார்கள். இன்றைக்கு 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இவர்களுடைய பைக்குகளை விற்பனை செய்கிறார்கள். இன்றைக்கு ராயல் என்பீல்டின் மார்க்கெட்டிங் கேப்பிடல் (Marketing cap) 1,33,992 கோடி ஆகும்.
ராயல் என்பீல்ட் மற்ற பைக்குகளை மாதிரியல்லாமல், இது சாலையில் வரும்போது மற்ற பைக்குகள் அருகில் நிற்க முடியாத அளவுக்குக் கம்பீரமான தோற்றத்தைத் தரும். இந்த பைக்குகளை பயன்படுத்துவது ஒரு Status symbol ஆகிவிட்டது. பைக்குகளை லேசான எடையில் வடிவமைக்காமல் அதிக எடை கொண்டதாக, உறுதியாகவும் தயாரிப்பது இதனுடைய தனித்துவமாகும். இந்த பைக்களின் Performance அதிக மக்களை கவர்ந்திழுக்கிறது. எல்லாவற்றையும் விட அதிக எடை கொண்டதால் சாலையில் ஓட்டிச்செல்லும்பொழுது அதிக நம்பிக்கையையும், ஓட்டுநரின் ஓட்டும் திறனை அதிகரிக்கும் விதமாகவும் தரமானதாக இருப்பதே ராயல் என்பீல்ட் பைக்கின் வெற்றியின் ரகசியமாகும்.