இந்தியாவில் பிரபலமாகி வரும் ‘Grey Divorce’: என்ன காரணம் தெரியுமா?

Grey Divorce
Grey Divorce
Published on

மீப காலமாக பிரபலங்கள் நிறைய பேர் விவாகரத்து செய்துகொள்ளும் செய்தியைக் கேட்கும்போது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. இத்தனைக்கும் அவர்கள் பல காலங்களாக தங்கள் திருமண பந்தத்தை பேணிப் பாதுகாத்து வந்தவர்கள்தான். இப்படிப் பல காலங்கள் திருமண பந்தத்தில் நன்றாக வாழ்ந்தவர்கள் விவாகரத்து என்னும் முடிவு எடுப்பதற்கான ஆரம்பப்புள்ளி எதுவாக இருக்கும்.

இந்தியாவில் தற்போது Grey divorce பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. தற்போது 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் கூட விவாகரத்து செய்துக் கொள்கிறார்கள். இதைத்தான் ஆங்கிலத்தில் Grey divorce என்று கூறுவார்கள். இருப்பினும், இது ஆச்சர்யம் அளிக்கக்கூடியதாக உள்ளது. இத்தனைக் காலங்கள் சேர்ந்து வாழ்ந்துவிட்டு வயதான பிறகு எதற்கு விவாகரத்து செய்துக் கொள்கிறார்கள்? என்ற கேள்வி பலரின் மனதிலும் எழும். இதற்கான காரணங்கள் என்னவென்பதை குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

1. Empty Nest Syndrome: குழந்தைகள் இருக்கும் வரை குடும்பத்தை கண்ணும் கருத்துமாக பார்த்து வந்தவர்கள், குழந்தைகள் அவர்களை விட்டுப் பிரிந்து திருமணம் செய்துக் கொண்டு சென்ற பிறகு ஒரு பெரிய வெறுமையை உணர்கிறார்கள். இதனால், தம்பதியினரிடம் நெருக்கம் இல்லாமல் போவது முக்கிய காரணமாக இருக்கிறது. பெரும்பாலான தம்பதியினர் குழந்தைகளுக்காகவே வாழ்கிறார்கள். அவர்கள் சென்ற பிறகு தங்களுக்குள் எந்த நெருக்கமும் இல்லாததை உணர்வதே காரணமாகும்.

2. பணப்பிரச்னை: விவாகரத்திற்கான முக்கியமான காரணமாக பணம் இருக்கிறது. பண விஷயங்களில் செய்யும் துரோகங்கள் தனக்கென்று தனியாக வைத்திருக்கும் வங்கிக் கணக்குகள், கடன்கள் போன்றவை நிலையான திருமண வாழ்க்கையை உடைத்து விடுகிறது.

3. வேறு ஒருவருடனான தொடர்பு: எந்த வயதாக இருந்தாலுமே, திருமண பந்தத்தில் தன்னுடைய பார்ட்னரை ஏமாற்றுவது என்பது மணமுறிவிற்கான முக்கியமான காரணமாகும். பல காலம் ஒன்றாக அனைத்தையும் பகிர்ந்து தாம்பத்திய வாழ்க்கை வாழ்ந்தவர்கள் செய்யும் துரோகமானது இதுவரை சேர்த்து வைத்திருந்த நம்பிக்கையை உடைத்துவிடுகிறது. அதை திரும்பவும் சரிசெய்வது என்பது கடினமாகும்.

4. உடல் நலக்குறைவு: வயதானவர்களுக்கு ஏற்படும் நீடித்த நோய்கள் காரணமாகக் கூட விவாகரத்து ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. இதுபோன்ற நோய் வருவதை தம்பதியினர்களால் கையாள முடியாதது முக்கியக் காரணமாகும். அதிலும் பாலின பாகுபாடு இருக்கிறது. பெண்ணுக்கு நீடித்த நோய் ஏற்படும் பொழுதே விவாகரத்து அதிகமாக நிகழ்கிறது. இதுவே ஆணுக்கு நீடித்த நோய் ஏற்படும்போது பெரிதும் விவாகரத்து ஏற்படுவதில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன.

இதையும் படியுங்கள்:
ஆண்களின் Sperm Count அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!
Grey Divorce

5. பிரிவினை வளர்தல்: வயதான காலங்களில் இருவருக்குமான பிரிவினை அதிகரிக்கிறது. தம்பதியினருக்கு இடையே உள்ள புரிதல் சிலருக்குக் கூடும், சிலருக்குக் குறையும். இருவருக்குமான எதிர்பார்ப்புகள், முக்கியத்துவம், குணங்கள் ஆகியவை மாறுபடுவது வெவ்வேறு வழியை தேர்ந்தெடுக்கக் காரணமாக அமைகிறது.

முன்பெல்லாம் திருமணம் ஆன பிறகு விவாகரத்து செய்து கொள்வது என்பது ஒரு தவறான செயலாகவே கருதப்பட்டது. குழந்தைகளுக்காக, சமூகத்திற்காக என்று பொறுத்துக்கொண்டு வாழ வேண்டிய கட்டாயம் இருந்தது. தற்போது உள்ள காலக்கட்டத்தில் அவரவர்களுக்கான கனவுகள், நிதி சுதந்திரம், வாழ்வின் தேடல், சுதந்திரம் போன்ற காரணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரிவது என்பது ஆரோக்கியமான மாற்றமேயாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com