மேலைநாட்டினர் 13ம் எண்ணைத் தவிர்ப்பதன் காரணங்கள் தெரியுமா?

அதிர்ஷ்டமில்லாத 13ம் எண்
அதிர்ஷ்டமில்லாத 13ம் எண்
Published on

மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பல பகுதிகளில் உள்ள மக்கள் மூடநம்பிக்கையின் காரணமாக 13 என்ற எண்ணைத் தவிர்க்கின்றனர். மேற்கத்திய கலாசாரங்களில் வாழ்க்கை மற்றும் தொழில்களின் பல்வேறு அம்சங்களில் இந்த 13வது எண் எப்படி அவர்களை ஆட்டுவிக்கிறது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

13 என்ற எண்ணைப் பார்த்து அஞ்சுவது டிரிஸ்கைடேகாபோபியா (Triskaidekaphobia) என்று அழைக்கப்படுகிறது. அவர்கள் இந்த எண்ணைத் தவிர்ப்பதன் பின்னால் கலாசார மற்றும் வரலாற்று காரணங்கள் வேரூன்றியுள்ளன.

வரலாற்று நிகழ்வுகள்: இயேசு கிறிஸ்து தன்னுடைய 13 சீடர்களுடன் கடைசி இரவு உணவு விருந்தில் கலந்து கொண்டார். அப்போது இயேசுவை காட்டிக்கொடுத்த யூதாஸ் 13ஆவது உறுப்பினராக மேசையில் அமர்ந்திருந்தார் என்கிறது வரலாறு.

நார்ஸ் புராணம்: நார்ஸ் புராணங்களில் இதேபோன்ற நிகழ்வு நடந்தது. இதில் தந்திரக் கடவுளான லோகி ஒரு விருந்தில் 13வது விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது குழப்பம் மற்றும் துரதிர்ஷ்டத்திற்கு வழிவகுக்கும் சம்பவங்கள் நிகழ்ந்தன என்கிறது அந்தப் புராணம்.

கலாசார நம்பிக்கைகள்: 12 பெரும்பாலும் ஒரு முழுமையான எண்ணாக கருதப்படுகிறது. ஒரு வருடத்தில் 12 மாதங்கள், 12 ராசிகள் ஒரு கடிகாரத்தில் 12 மணி நேரம். எனவே, அது முழுமைத்தன்மை பெற்றிருப்பதாகவும், ஆனால் 13 என்பது ஒழுங்கற்றதாகவும் அதிர்ஷ்டமற்றதாகவும் கருதப்படுகிறது.

வெள்ளிக்கிழமையும் 13ம்: மேலைநாட்டில் வெள்ளிக்கிழமையும் 13வது எண்ணும் சேர்ந்தாற்போல வந்தால் அது துரதிர்ஷ்டவசமாகக் கருதப்படுகிறது. இந்த மூடநம்பிக்கை பல்வேறு நிகழ்வுகள் மற்றும் திகில் திரைப்படங்கள் உட்பட பிரபலமான கலாசாரத்தால் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

13 நோ: இதன் விளைவாக பல நாடுகளில் கட்டடங்கள் பெரும்பாலும் 13வது தளத்தை தவிர்த்து அதற்கு பதிலாக 12க்கு பின்பு 13ஐ 14வது மாடி அமைத்திருக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
தாலி சரடை மாற்ற நல்ல நாள் எது தெரியுமா?
அதிர்ஷ்டமில்லாத 13ம் எண்

விமானப் போக்குவரத்து: விமானப் போக்குவரத்து துறையிலும் சில விமான நிறுவனங்கள் வரிசைகள் மற்றும் வாயில்களுக்கு 13வது எண்ணை பயன்படுத்துவதைத் தவிர்க்கின்றன. இதனால் பயணிகள் 13 என்ற எண்ணைப் பற்றிக் கவலைப்படுவது தவிர்க்கப்படுகிறது என்று நம்புகிறார்கள்.

விளையாட்டு: சில அணிகளில் விளையாட்டு வீரர்கள் 13 என்ற எண்ணை தங்கள் அணிந்திருக்கும் உடையில் பயன்படுத்துவதை தவிர்க்கிறார்கள். குறிப்பாக, மேற்கத்திய விளையாட்டுகளில் இந்த நம்பிக்கை அதிகமாக உள்ளது.

ஹோட்டல்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள்: கட்டடங்களைப் போலவே ஹோட்டல்களிலும் அடுக்குமாடி குடியிருப்புகளிலும் 13வது தளம் அல்லது 13வது அறை எண் என்பதைத் தவிர்த்து விடுகின்றனர். இது அங்கு தங்கும் விருந்தினர்கள் மூடநம்பிக்கையின் காரணமாக அந்த அறையை தவிர்த்து விடுவார்கள் என்று எண்ணியே இவ்வாறு செய்யப்படுகிறது.

பொருளாதாரத் தாக்கம்: 13 என்ற எண்ணைச் சுற்றியுள்ள மூடநம்பிக்கையின் காரணமாக அது பொருளாதார விளைவுகளையும் ஏற்படுத்தும். உதாரணமாக, வெள்ளிக்கிழமை அன்று 13ம் தேதியும் வந்தால் குறைவான நபர்களே பயணம் செய்கிறார்கள். அன்று குறிப்பிடத்தக்க கொள்முதல் குறைவாக  நடைபெறுகிறது. அந்த நாட்களில் பொருளாதார நடவடிக்கை மிக மிக மந்தமாகவும் சரிவையும் ஏற்படுத்துகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com