நீங்கள் பாக்கெட்டிங் உறவில் இருக்கிறீர்களா என்பதற்கான அறிகுறிகள் என்ன தெரியுமா?

pocketing relationship
pocketing relationship
Published on

பாக்கெட் செய்வது என்பது பெரும்பாலும் உறவு தேக்கமடைவதைக் குறிக்கும். உங்களைப் பற்றி உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் சொல்லாமல் மறைத்து வைப்பது. யாரும் உங்களை பார்க்காதபடி எப்போதும் ரகசியமாகவும், வெளியூர் இடங்களிலும் சந்தித்துக் கொண்டிருப்பது உங்களை பாக்கெட் செய்ய முயற்சிக்கிறார் என்று அர்த்தம். அவர் தங்களுக்குத் தெரிந்தவர்கள் முன்பு உங்களுடன் தென்படுவதை விரும்புவதில்லை என்று பொருள்.

1. பாக்கெட்டிங் உறவின் அறிகுறிகள்: தங்களுடைய காதல் உறவைப் பற்றி நண்பர்களுக்கோ, குடும்பத்திற்கோ தெரியக்கூடாது என்று நினைப்பார்கள். எப்போதும் ரகசியமாகவே சந்திக்க விரும்புவார்கள். தங்களுக்குத் தெரிந்த உறவினர்களோ, நண்பர்களோ தாங்கள் ஒன்றாக இருப்பதைப் பார்த்து விடக்கூடாது என்று நினைப்பார்கள்.

பாக்கெட்டிங் உறவில் இருப்பவர்கள் தன்னுடைய காதல் உறவை பற்றி, தங்கள் துணையைக் குறித்து சந்தேகிக்கும் நபராகத்தான் இருக்க வாய்ப்புகள் அதிகம். தன்னுடைய பார்ட்னரை உறுதியாக நம்புபவர் தனது காதல் உறவை வெளி உலகிற்கு தைரியமாகத் தெரியப்படுத்துவார். சமூக ஊடகங்களில் ஒன்றாக இருக்கும் தருணங்களையோ, புகைப்படங்களையோ பகிர விரும்ப  மாட்டார்கள்.

பாக்கெட்டிங் உறவில் இருக்கும் ஒருவர் அவரின் நண்பர்களை சந்திக்க உங்களை விட மாட்டார். அவரது நண்பர்களை நீங்கள் சந்திக்க விரும்பினால் அதற்கு பல்வேறு காரணங்களைக் கூறி மறுத்துவிடுவார். தங்களது வீட்டிற்கு தங்கள் பார்ட்னரை அழைத்துச் செல்ல விரும்பாததுடன், தங்களது குடும்பம் குறித்து எந்தத் தகவலையும் தங்கள் பார்ட்னரிடம் சொல்ல மாட்டார்கள். தங்கள் குடும்பம் குறித்து பார்ட்னருக்கு எதுவும் தெரியக்கூடாது என்று நினைப்பார்கள். அவர்கள் எங்கு வாழ்கிறார்கள் என்பது கூடத் தெரியாமல் மறைத்து வைப்பது, நீங்கள் அவர்களின் வீட்டிற்கு இதுவரை சென்றிருக்கவில்லை என்றால் அவர்கள் உங்களை அவர்களின் உலகத்திலிருந்து பாக்கெட் செய்கிறார்கள் என்பதற்கான அறிகுறியாகும்.

2. இதிலிருந்து வெளி வர என்ன செய்யலாம்: இப்படி உங்கள் பார்ட்னரால் நீங்கள் பாக்கெட்டில் அடைக்கப்படுகிறீர்கள் என்பதை உணர்ந்தால் அவரிடம் இது குறித்து உரையாடுவது அவசியம். ஏன், எதற்கு என்று கேள்வி எழுப்பத் தயங்கக் கூடாது. உங்களுடைய உறவின் எதிர்காலத்தைக் குறித்து அவர்கள் பேசாமல் தொடர்பை மட்டும் வலுப்படுத்த விரும்பினால் உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று கேட்டு விடுவது நல்லது.

இதையும் படியுங்கள்:
Coconut oil Vs Almond oil: முடி வளர்ச்சிக்கு சிறந்த எண்ணெய் எது?
pocketing relationship

வெளிப்படையாகப் பேசுங்கள். அவர் என்ன நினைக்கிறார் என்ற அவருடைய கண்ணோட்டத்தைப் புரிந்து கொள்வது மிகவும் அவசியம். உறவில் ஒருவரை ஒருவர் பாதுகாப்பாக உணர வைக்க வேண்டியது முக்கியம். மூடிய கதவுகளுக்குப் பின்னால் ஜோடியாக இருப்பது மிகவும் தவறான செயல். இப்படிப்பட்டவரை தூக்கி எறியத் தயங்காதீர்கள். உங்களை உண்மையிலேயே விரும்பும் எந்த ஒரு மனிதனும் உங்களைப் பெற்றிருப்பதில் பெருமைப்பட வேண்டும். அப்படி இல்லாமல் மறைத்து வாழ விரும்புபவர்களிடமிருந்து விலகி விடுவதுதான் நல்லது.

உங்கள் பார்ட்னர் அவர் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஏன் உங்களை அறிமுகப்படுத்த விரும்புவதில்லை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். எதற்காக இந்தத் தயக்கம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவர் எந்த வெளிப்படையான பதிலையும் தரவில்லை என்றால் உங்கள் எதிர்காலம் குறித்துக் கவலை கொண்டு அவரை விட்டு ஒதுங்கி விடுவது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com