மனித மனங்களை வெல்லும் சூட்சுமம் தெரியுமா?

Do you know the trick to winning over human minds?
Do you know the trick to winning over human minds?https://ta.quora.com

ணம், பொருள் சம்பாதிக்க எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் மனிதர்கள் பிறரின் அன்பையும் நேசத்தையும் சம்பாதிக்க வேண்டும் என்று அவ்வளவாக நினைப்பதில்லை. அதற்காக மெனக்கெடுவதும் இல்லை. பிறர் மனதில் இடம் பிடிப்பதும், அவர் மனதை வெல்வதும் அப்படி ஒன்றும் கடினமான காரியம் அல்ல. அந்த சூட்சுமம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

பொதுவாகவே, மனிதர்கள் அடிப்படையில் அன்பும் கருணையும் நிறைந்தவர்கள்தான். சூழ்நிலை சில நேரம் அவர்களை மாற்றி இருக்கலாம். ஆனால், மனதின் அடித்தளத்தில் இந்த உணர்வுகள் எப்போதும் இருக்கும். எப்போதும் பாசத்துக்கும் அன்பிற்கும் கட்டுப்பட்டவர்கள் மனிதர்கள். எப்பேர்ப்பட்ட கோபக்காரராக இருந்தாலும் அன்பான வார்த்தைகள் அவர் மனதை அசைக்கவே செய்யும். அன்பிற்கு அவ்வளவு சக்தி உண்டு.

கடவுள் மனிதர்களுக்கு ஒரு வாயும், இரண்டு காதுகளையும் வைத்திருக்கிறார். குறைவாகப் பேசி நிறைய கேட்க வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி ஒரு ஏற்பாடு. ஆனால், நாம் அதிகமாகப் பேசி மிகக் குறைவாகவே கேட்கிறோம். தான் என்ன சொல்ல வருகிறோம் என்பதில் மட்டுமே ஒரு மனிதர் அக்கறை காட்டுகிறாரே தவிர, எதிராளி என்ன சொல்ல வருகிறார் என்பதை காது கொடுத்து கேட்பதே இல்லை.

இன்றைக்கு மனிதனின் மிக முக்கியமான தேவையாக இருப்பது அவன் சொல்வதை காது கொடுத்துக் கேட்க ஆட்கள் வேண்டும் என்பதுதான். வெளிநாடுகளில் தனிமையில் வாழும் பல முதியவர்கள் மற்றும் நடுத்தர வயதினர் பணம் தந்து தங்களுடன் பேசவும் தாங்கள் சொல்வதைக் கேட்கவும் ஆட்களை நியமித்துக் கொள்கிறார்கள் என்பது கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், வருத்தம் தரும் நிஜம்தான். நிறைய மனிதர்கள் ஏங்கிக் கிடப்பதும் இதற்குத்தான்.

தம் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் பேசும்போது எத்தனை பேர் அதை பொறுமையாக காது கொடுத்து கேட்கிறார்கள்? அதேபோல சிறியவர்கள் சொல்வதையும் பெரியவர்கள் கேட்க வேண்டும். ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போது இடையில் குறுக்கிட்டு பேசி, அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை முழுமையாக சொல்ல விடாமல் சிலர் செய்வார்கள். அப்படியே கேட்டாலும் அதை கவனத்துடன் கேட்பதில்லை. அவருடைய கண்கள் மட்டும் எதிராளியின் முகத்தில் நிலைத்திருக்கும். காதுகள் அவர் பேசுவதை உள்வாங்கிக் கொள்வதில்லை.

இதையும் படியுங்கள்:
இரத்தக் குழாய்களின் அடைப்பைப் போக்கும் ஐந்து காய்கறிகள் தெரியுமா?
Do you know the trick to winning over human minds?

எப்பேர்ப்பட்ட மனிதராக இருந்தாலும் அவருடன் மிகக் குறைவாகவே பேசினாலும் அவர் பேசும்போது பொறுமையாக அக்கறையாக காது கொடுத்து கேட்டுப் பாருங்கள். அவர் மீது மிகுந்த அனுதாபத்துடன் அவர் நிலையைப் புரிந்து கொண்டு உண்மையான அக்கறையுடன் கேட்க வேண்டும். அவர் தனது மனதின் அடி ஆழத்திலிருந்து பேசுகிறார் என்றால் கேட்பவரும் தனது மனதைத் திறந்து வைத்து முழு மனதோடு அவர் பேசுவதை கேட்க வேண்டும். தேவைப்பட்டால் ஆறுதலோ அறிவுரையோ கூட வழங்கலாம்.

உண்மையான அக்கறையுடன் கவனித்துக் கேட்கும்போது எதிராளியின் முகம் மட்டுமல்ல, அகமும் மலரும். அடுத்த முறை நீங்கள் எப்போது வருவீர்கள் என்று உங்களுக்காக காத்துக் கொண்டிருப்பார். பணம், பொருள் சம்பாதிப்பது மட்டுமே வாழ்வின் வெற்றி அல்ல. பல நல்ல மனிதர்களை சம்பாதிப்பதும் அவர்கள் மனதில் இடம்பிடிப்பதும் வாழ்வின் மிகச் சிறந்த குறிக்கோளாக இருக்கலாம் அல்லவா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com