
தற்போதைய சூழ்நிலையில் அனைத்து பொருட்களின் விலைவாசி உயர்வு மட்டுமல்லாமல் கல்வி செலவுகளும் அதிகரித்து வருகிறது. அதனால் அதிக பணம் சம்பாதிக்கக்கூடிய வேலைகளை மாணவர்கள் செய்ய விரும்புகின்றனர். அந்த வகையில் அதிக சம்பளம் தரக்கூடிய வேலைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
கிராஃபிக் டிசைன் :
விஷுவல் மெட்டீரியல், பிராண்டிங் போன்றவற்றை உருவாக்கும் கிராபிக் டிசைனிங் வேலைகளுக்கு தற்போது தேவை அதிகரித்து உள்ளதோடு மன அழுத்தம் இல்லாத வேலைகளில் ஒன்றாக இருக்கிறது. அலுவலகம் ஏதும் தேவையில்லாத இந்த பணிகளுக்கு கேன்வா, அடோப் சூட் மற்றும் ஃபிக்மா போன்ற டூல்கள் கிராஃபிக் டிசைனிங்கை எளிதாக்குகின்றன.
சமூக ஊடகத் துறைகள், வெளியீட்டு நிறுவனங்கள், விளம்பர நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்களில் கிராஃபிக் டிசைனர்களுக்கு தேவை உள்ள நிலையில் இங்கு ஒரு வேலையை கிரியேட்டிவாக செய்ய சுதந்திரமும் உள்ளது.
கன்டென்ட் ரைட்டிங், காபி ரைட்டிங் :
SEO-க்கு ஏற்ற வலைப்பதிவு இடுகைகள், வெப்சைட் காபி அல்லது சமூக வலைதளங்களுக்கு எழுதுபவர்களுக்கு டிஜிட்டல் மயமாக்கல் காரணமாக கன்டென்ட் ரைட்டிங் வேலைக்கு அதிக தேவை உள்ளது. வீட்டிலிருந்து வேலை செய்தல்(work from home), விருப்ப நேரங்களில் வேலை செய்தல் மற்றும் மன அழுத்தமில்லாத பணி, கலாச்சாரம் ஆகியவை காரணமாக சுதந்திரமாக செயல்பட முடிவதோடு அலுவலகம் மற்றும் காலக்கெடு இல்லாததால் ஸ்டார்ட் அப், ஆன்லைன் ஏஜென்சிகள், ஃப்ரீலான்ஸ் வெப்சைட்டுகளில் கன்டென்ட் ரைட்டிங், காபி ரைட்டிங் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன.
ஊட்டச்சத்து நிபுணர், உணவியல் நிபுணர்:
இந்தியாவில் தற்போது உடல்நலம் மற்றும் நல்வாழ்வு பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், சான்றளிக்கப்பட்ட ஊட்டச்சத்து நிபுணர்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் ஜிம்களில் பயிற்சி எடுப்பதோடு, சான்றிதழ் பெற்ற பிறகு, கன்சல்டென்சியும் அமைக்கலாம்.
வாடிக்கையாளர் ஆலோசனை மற்றும் மற்றவர்களுக்கு சுகாதார குறிப்புகளை வழங்குவது போன்றவற்றால் மன அழுத்தம் இல்லாத பணியாக இது இருக்கிறது .
நூலகர், காப்பக நிபுணர் :
பாரம்பரியம் மற்றும் நவீனத்தை கலக்கும் வேலையாக இருப்பதோடு, ஆரவாரமின்றி பணியாற்றுவது, வழக்கமான பணி நேரங்கள் மற்றும் காலக்கெடு இல்லாதது நூலகர், காப்பக நிபுணர்(Archivist) பணிக்கு ஒரு பிளஸ் பாயிண்ட்டாக அமைந்து மன அழுத்தம் இல்லாத வேலையை கொடுக்கிறது. பல்கலைக்கழகங்கள், தனியார் பள்ளிகள் மற்றும் மெய்நிகர் நூலகங்கள் வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன.
ஆன்லைன் ஆசிரியர்கள் :
கற்பிப்பதற்கான தேவை தற்போது அதிகரித்து பல்வேறு ஆப்ஸ்களில் மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஏஐ வருகையும் இதற்கு உதவியாக இருப்பதால் மன அழுத்தம் இல்லாத வேலைகளில் இதுவும் ஒன்றாக இருக்கிறது . ஆன்லைன் ஆசிரியர்களுடன் சேர்ந்து Vedantu, Unacademy போன்ற தளங்களிலும் கற்பிக்கலாம்.
UX/UI டிசைனர் :
ஆராய்ச்சி, படைப்பு, சுதந்திரம் ஆகியவற்றால் வேலையை மன அழுத்தமற்றதாக மாற்றுவதோடு மொபைல் பயன்பாட்டு நிறுவனங்கள், ஸ்டார்ட் அப்ஸ் மற்றும் IT நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளன.