
குழந்தைகளின் கருத்துக்கள் மறுக்கப்படும்போது அதை வெளிப்படுத்த எதிர்த்துப்பேசி தங்களை அவர்கள் மீது கவனம் கொள்ளவைப்பார்கள்.
குழந்தைகள் சில சமயம் வீட்டில் உள்ளவர்கள் எதிர்த்துப் பேசுவதைப் பார்த்து அதை காப்பி அடிக்க நினைப்பார்கள். மீடியாக்களில் வரும் காட்சிகள் பார்த்து அந்த மாதிரி பேசலாம் என்று தவறாக புரிந்து கொள்வார்கள்.
சில சமயம் மன அழுத்தத்தாலோ, பதட்டத்தாலோ அல்லது சோர்வினாலோ சரியாக பேசமுடியாத காரணத்தால் விரக்தியில் இப்படி எதிர்த்துப் பேசுவார்கள்.
சில குழந்தைகளுக்கு பெரியவர்கள் பிசியாக இருப்பதன் காரணமாக இடைவெளி ஏற்பட்டு பெரியவர்களின் கவனத்தை ஈர்க்க இப்படி எதிர்த்துப் பேசுவார்கள்.
குழந்தைகளுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை நீங்கள் அடிக்கடி மாற்றினால் அவர்கள் குழம்பி இப்படி எதிர்த்துப்பேசுவார்கள்.
தங்களைப் பற்றி குறைவான மதிப்பீடு உடைய குழந்தைகள் இப்படி எதிர்த்துப் பசி தங்கள் பலமின்மையை வெளிப்படுத்துவார்கள்.
குழந்தைகளின் பொழுது போக்குகளை கண்டித்தால், விவாகரத்து விஷயம் மற்றும் பள்ளி விஷயங்களில் குழந்தைகளிடம் தங்கள் கட்டுப்பாட்டைக்காட்ட அவர்கள் எதிர்த்துப் பேசி தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவார்கள்.
தங்கள் சுதந்திரத்தை நிலைநாட்ட இப்படி எதிர்த்துப் பேசுவார்கள்.
குழந்தைகள் எதிர்த்துப் பேசுவதற்கு காரணம், அவர்கள் வளரும்போது தங்கள் சுதந்திரம் பறிபோவதாக நினைக்கிறார்கள். இது அவர்களின் தனித்தன்மையை நிலைநிறுத்தும் வெளிப்பாடாக இருக்கலாம்.
அடுத்தவர்களோடு அவர்களை ஒப்பிட்டுப் பேசும்போதும், அவர்களின் செயலில் குற்றம் கண்டுபிடிக்கும்போதும் எதிர்த்துப்பேசி தங்களை காக்க நினைப்பார்கள்.
பச்சை மிளகாய் அரிந்தால் ஏற்படும் கை எரிச்சல் போக்க சில தீர்வுகள்!
பச்சை மிளகாயை அரிந்த பிறகு உங்கள் கையில் எரிச்சல் ஏற்படும். இதற்குக் காரணம் மிளகாயில் உள்ள கேப்சைசின் என்ற பொருள்தான். மிளகாய் அரியும்போது கேப்சைசின் கையில் படுவதால் எரியும் உணர்வு ஏற்படுகிறது. மேலும் பச்சை மிளகாய் அரிந்த பிறகு கையை கண் மூக்கு வாய் பகுதிகளில் வைத்தால் அப்பகுதிகளில் எரிச்சல் ஏற்படும். இந்த எரிச்சலைப் போக்குவதற்கான வழிகள் பார்ப்போம்.
பால் அல்லது தயிர்
மிளகாய் அரிந்த பிறகு கைகளில் எரிச்சல் நீங்க பால் அல்லது தயிரை கைகளில் தடவி சில நிமிடங்கள் கழித்து கழுவவும். பால் மற்றும் தயிரில் இருக்கும் புரதம் கேப்சைசின் தீவிரத்தை குறைக்க உதவும்.
கேப்சைசின் எண்ணையில் எளிதாக கரைந்துவிடும். எனவே ஆலிவ் அல்லது வெஜிடபிள் ஆயிலை எண்ணையை கைகளில் தடவி பிறகு கழுவ எரிச்சல் தீரும்.
ஆல்கஹால்
மிளகாயின் கேப்சைசின் ஆல்கஹாலில் ளிதாக கரைந்து விடும். உங்களிடம் ஆல்கஹால் இருந்தால் கைகளை அதைக்கொண்டு கழுவலாம்.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவில் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் ஆக்கி கைகளில் தடவி பிறகு சோப்பு போட்டுக்கழுவ எரிச்சல் நீங்கும். எரிச்சலை போக்கும் பண்பு இதற்கு உண்டு.
வினீகர்
வினீகரின் அமிலத்தன்மை கேப்சைசின் தீவிரத்தை கண் குறைக்க உதவும். இதை கைகளில் தடவி பிறகு சோப் போட்டு கழுவுங்கள்.
மிளகாய் அரியும்போது கையுறை பயன்படுத்தலாம். மேலும் மிக்சியில் அரைக்கும்போது ஸ்பூன் பயன்படுத்தவும்.
கைகளை குளிர்ந்த நீரால் கழுவலாம். ஐஸ்க்யூபுகளைக் கொண்டு கையில் தேய்க்க எரிச்சல் நீங்கும். உப்பைத் தடவ எரிச்சல் குறையும்.