காது குத்திக்கொள்வதன் நன்மைகள் பற்றி ஆயுர்வேதம் சொல்வது என்ன தெரியுமா?

காது குத்துதல்
காது குத்துதல்https://www.onindianpath.com
Published on

யுர்வேதத்தில், ‘கர்ண வேதா’ என்று அழைக்கப்படும் காது குத்துதல் நிகழ்வு உடல், மனம் மற்றும் ஆன்மிக நன்மைகளை வழங்குவதாகக் கூறுகிறது. ஆயுர்வேத கொள்கைகளின்படி காது குத்துவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

மூளையின் செயல்பாடு மற்றும் நுண்ணறிவு மேம்பாடு: காது குத்தும்போது மூளையுடன் இணைக்கப்பட்டுள்ள காதுகளில் சில குத்தூசி மருத்துவம் புள்ளிகளை தூண்டுகிறது. இந்த தூண்டுதல் அறிவாற்றல் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. நினைவகத்தை மேம்படுத்துகிறது மற்றும் புத்திசாலித்தனத்தை அதிகரிக்கிறது.

உடலின் ஆற்றலை சமநிலைப்படுத்துகிறது: ஆயுர்வேதத்தின்படி உடலில் நாடிகள் என்று அழைக்கப்படும் நுட்பமான ஆற்றல் சேனல்கள் உள்ளன. காதில் குறிப்பிட்ட புள்ளிகளை துளைப்பது இந்த ஆற்றல் சேனல்களை சமநிலைப்படுத்துவதாக நம்பப்படுகிறது. இது ஒட்டுமொத்த நல்வாழ்வையும் ஆன்மிக வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது.

கண் பார்வை மேம்பாடு: காதுகளில் குத்தப்படும் புள்ளிக்கும் கண்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆயுர்வேதம் கூறுகிறது. இந்தப் புள்ளியை தூண்டும்போது கண் பார்வை மேம்பாட்டிற்கும் பல்வேறு கண் தொடர்பான நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.

செவித்திறன் மேம்பாடு: செவிப்புல அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள சில அழுத்த புள்ளிகளை செயல்படுத்துவதன் மூலம் ஒருவரின் கேட்கும் திறன் மேம்பாடு அடைகிறது என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

இனப்பெருக்க ஆரோக்கியம்: பெண்களைப் பொறுத்தவரை காது குத்துவது இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்று ஆயுர்வேதம் கூறுகிறது. இது மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவுகிறது. மகளிரின் மாதவிலக்கு தொடர்பான நோய் பிரச்னைகளை தடுக்கிறது. ஆண்களுக்கு ஆரோக்கியமான உடலை பராமரிக்க உதவுகிறது. குடல் இறக்கத்தைத் தடுக்கவும் உதவுகிறது.

மன அமைதி: காது மடல்களை துளைப்பது மனதை அமைதிப்படுத்தும். பதற்றம் மன அழுத்தம், மனச்சோர்வு, அமைதியின்மை ஆகியவற்றை குறைக்கும் என்று கருதப்படுகிறது. இது அமைதி உணர்வை ஊக்குவிக்கும் என்று நம்பப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
உடலில் நல்ல கொழுப்பின் அளவை உயர்த்த உதவும் 8 வகை உணவுகள்!
காது குத்துதல்

நோய் எதிர்ப்பு மேம்பாடு: ஆயுர்வேத பாரம்பரியத்தின்படி காது குத்துதல் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டி விடுகிறது. உடலை நோய்களை எதிர்க்கும் திறனுக்கு உள்ளாக்குகிறது.

ஆன்மிக வளர்ச்சியை ஊக்குவிக்கிறது: பல ஆன்மிக மரபுகளில் காது குத்துதல் என்பது ஆன்மிக ஒழுக்கத்தின் தொடக்கத்தை குறிக்கும் ஒரு சடங்காக கருதப்படுகிறது. இது மனதை உயர்ந்த உணர்வு மற்றும் ஆன்மிக ஞானத்திற்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது.

கெட்ட பழக்கங்களைத் தடுக்கிறது: காது குத்தும் நிகழ்வு குழந்தைகளுக்கு நல்ல விளைவுகளைத் தருகிறது. காதில் சில குறிப்பிட்ட புள்ளிகளை தூண்டுவதால் அவர்களது கெட்ட பழக்கங்களை தடுக்கிறது. உதாரணமாக, படுக்கையில் சிறுநீர் கழித்தல், கட்டை விரலை உறிஞ்சுவது போன்ற கெட்ட பழக்கங்களைத் தடுக்க உதவுகிறது.

அழகியல் நன்மைகள்: ஆரோக்கிய நலன்களைத் தவிர காது குத்துவது அழகியல் ரீதியாகவும் மதிப்பு மிக்க செயலாகக் கருதப்படுகிறது. பெண்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அழகான காதணிகளை அணிந்து தங்களது முக அழகை அதிகரித்துக் கொள்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com