மக்களுக்கான இலவச சட்ட சேவைகள் என்னென்ன என்பது தெரியுமா?

நவம்பர், 9 தேசிய சட்ட சேவைகள் தினம்
free legal services
free legal services
Published on

வ்வொரு ஆ ண்டும் இந்தியாவில் நவம்பர் 9 அன்று, தேசிய சட்ட சேவைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நாடு முழுவதும் உள்ள மாநில சட்ட சேவை ஆணையங்கள், மக்களுக்காக இலவச சட்ட உதவி கிடைப்பது பற்றிய சட்ட விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்துகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சட்ட சேவைகள் அதிகாரிகளால் வழங்கப்படும் பல சேவைகளை பொதுமக்களுக்கு தெரிவிக்க நாடு முழுவதும் பிரச்சாரங்கள் நடத்தப்படுகின்றன.

சமூகத்தின் ஏழை மற்றும் நலிந்த பிரிவினருக்கு இலவச சட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. பணமில்லாத ஏழை மக்கள், தங்கள் வழக்கை நடத்த சட்ட உதவி அளிக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகின்றது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையினால் எந்தவொரு இந்திய குடிமக்களுக்கும் நீதி மறுக்கப்படக் கூடாது. மேலும், குடிமக்கள் அனைவரும் சட்டத்திற்கு முன் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்துகின்றது.

யாரெல்லாம் இலவச சட்ட உதவி பெறத் தகுதியானவர்கள்?

1. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்,

2. பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள்,

3. மலைவாழ் மற்றும் பழங்குடி மக்கள்,

4. விவசாய மக்கள்,

5. எல்லையில் நெடுங்காலம் பணியாற்றும் இராணுவ சிப்பாய்கள்,

6. சமூகத்தில் பின்தங்கிய மகளிர் மற்றும் குழந்தைகள்,

7. தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட மக்கள் ஆகியோர்.

இதையும் படியுங்கள்:
பொய் சொல்பவர்களை மூன்று வழிகளில் எப்படி கண்டுபிடிப்பது?
free legal services

எந்த வழக்குகளுக்கு சட்ட உதவி பொருந்தாது?

அவதூறு வழக்கு, பழிவாங்கும் வழக்கு, நீதிமன்ற அவமதிப்பு, உறுதி மொழியில் பொய் கூறுதல், தேர்தல் தொடர்பான வழக்குகள், அபராதம் 50 ரூபாய்க்கு மேல் இல்லாத வழக்கு, பொருளியல் சார்ந்த குற்றங்கள் போன்றவற்றை புரிந்தவருக்கு இலவச சட்ட உதவி பொருந்தாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com