கல்லுக்குருவி வீட்டிற்குள் வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

Kallukuruvi
Kallukuruvi
Published on

‘பட்சி சொன்னது' என்று ஒரு புகழ் பெற்ற வாசகம் உண்டு. நாம் வெளியில் எங்காவது செல்லும்போது குறிப்பிட்ட பறவைகள் வந்தால் மிகவும் நல்ல சகுனம் என்று கூறுவார்கள். ஒவ்வொரு பட்சிக்கும் ஒரு குறிப்பிட்ட குணம் உண்டு. அதுபோல் கல்லுக்குருவி வீட்டுக்குள் வந்தால் என்ன ஆகும் என்பது பற்றி இப்பதிவில் காண்போம்.

கடல்வாழ் உயிரினங்கள், எறும்பு போன்றவற்றை உற்று நோக்கினால் ஒரு வித்தியாசமான செயல்பாடு ஒருசில தினங்களில் நடப்பதை அறியலாம். அப்படி வித்தியாசமாக நடக்கும் தினங்களில் கடலில் சூறாவளி தாக்கமோ, வீட்டிற்குள் எறும்பு வரும்போது அதிக மழை பெய்வதோ நடக்கும். நாம் எல்லாவற்றையும் உற்று நோக்கிக்கொண்டே இருக்க மாட்டோம். ஆனால், தொடர்ந்து ஒரு பறவை வீட்டிற்குள் வரும்பொழுது அந்த நாளில் என்ன நடக்கின்றது என்பதை கவனிக்கத் தவறுவதில்லை.

இதையும் படியுங்கள்:
உங்களைப் பற்றிய உங்களின் எதிர்மறை சுய விமர்சனங்களை போக்கும் வழிகள்!
Kallukuruvi

அதுபோல்தான் கல்லுக்குருவியும். கல்லுக்குருவிகள் கூட்டமாக வீட்டிற்குள் வந்தால் கட்டாயமாக அன்று கன மழை பெய்யும். ஆஷா, உஷா, நிஷா போன்ற புயல் காற்றுகள் வீசியபோதெல்லாம் கல்லுக்குருவிகள் கிச்சனில் இருக்கும் லாப்டில் ஏறிவிடும். அவற்றை வெளியேற்றுவதற்குள் பெரும் பாடாகிவிடும். இதைத் தொடர்ந்து கவனித்து வந்தால் எப்பொழுதெல்லாம் புயலுடன் சேர்ந்த கனமழை வருகிறதோ அப்பொழுதெல்லாம் இந்த குருவிகள் பால்கனியிலாவது வந்து கூட்டமாக அமர்ந்து விடும்.

சாதாரணமான நாட்களில் இந்தக் குருவிகள் தோட்டத்தில் உள்ள மரங்களில்தான் இருக்கும். வீட்டுப் பக்கம் வரவே வராது. ஆனால், இந்த கன மழைக்கான அறிகுறிகள் தென்படும்பொழுதுதான் அவை இவ்வாறு செய்கின்றன. அன்று அதிக சத்தமும் போடும். சில நாட்களில் காலையில் சுரீர் என்று வெயில் அடிக்கும். மழை வரும் என்று நம்பவே முடியாது. அதுபோன்ற தினங்களில் அக்குருவிகள் வீட்டிற்குள் வந்தாலும் அன்று மழை வரப்போகிறது என்று அர்த்தம். அதேபோல், இயல்பாக செல்லும்பொழுது கிருஷ்ண பருந்து தனது தலைக்கு நேராக வந்தாலோ அல்லது அது பறக்கும் இடத்திற்கு கீழாக நாம் செல்ல நேரிட்டாலோ அது நம்மை ஒரு வட்டம் அடித்துச் சென்றால் நாம் என்ன எதிர்பார்த்து காத்திருக்கிறோமோ அது நிறைவேறும்.

இதையும் படியுங்கள்:
இரவு நேரத்தில் இந்த விஷயங்களை குழந்தைகளிடம் பழக்கினால் உங்க குழந்தையும் ஸ்மார்ட்தான்!
Kallukuruvi

தினசரி ஒன்றாக அமர்ந்து பேசிக்கொள்ளும் குயில்களின் அருகில் நாம் சென்றால் அவை சட்டென்று பறந்து விடுவதில்லை. அவை இரண்டும் க்கும்ம்...ம் என்று ஒரு வித்தியாசமான குரல் எழுப்பி அன்பு மொழி பேசுவதைக் கேட்க முடியும். அது கூவும்பொழுது பெரும்பாலான நேரங்களில் முகத்தை மறைத்துக் கொள்கிறது. மற்ற நேரங்களில் கருங்குயில், புள்ளிக்குயில், செம்போத்து என்று சொல்லப்படும் செங்குயில் அனைத்தும் தோட்டத்திற்கு உலாவும் பொழுது ஒன்றுடன் ஒன்று சேர்வதில்லை. தனித்தனியாகத்தான் வந்து போகிறது. குயில்களை எந்த நேரத்தில் எங்கு சென்றாலும் பார்த்துச் செல்லலாம். எந்தவிதமான சகுனத் தடையும் ஏற்படாது.

வீட்டின் மேற்கு புறமாக காகம் கரைந்தால் கட்டாயமாக அன்று விருந்தினர் வருகை உண்டு. இல்லை என்றாலும் ஏதாவது ஒரு நற்செய்தி வரும். தினசரி நம்முடன் அன்பாக பழகும் காக்கை நாம் இருக்கும் திசையை ஏறெடுத்தும் பார்க்காமல் தெற்கு பக்கம் சென்று அமைதியாக இருந்தால் அல்லது வித்தியாசமான சத்தம் எழுப்பினால் அன்று சரியில்லாத செய்தி எங்கிருந்தாவது வரும்.

வீட்டைச் சுற்றி வரும் பறவைகளை கூர்ந்து கவனிக்கும்பொழுது இதெல்லாம் நடப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com