அதிகமாகத் தூங்கினால் என்னாகும் தெரியுமா?

Do you know what happens if you sleep too much?
Do you know what happens if you sleep too much?https://www.vettimani.com/
Published on

ப்போது அதிக பேர் தனது வேலைகளை இரவில் செய்துவிட்டு பகல் முழுவதும் தூங்கி விடுகிறார்கள். வேலை எப்போது முடியுமோ அதற்கு ஏற்றவாறு தூங்கும் நேரத்தை மாற்றிக்கொள்கிறார்கள். சிலர் இரவில் மூன்று மணி வரை மொபைல் பார்த்துவிட்டு காலையில் சூரியனைப் பார்க்காமலே தூங்குவார்கள். அதேபோல், வேலை இல்லையென்றால் தூங்கிக்கொண்டே இருப்பார்கள். சரியான தூக்கம் இல்லையென்றாலும் அதிக நேரம் தூங்கினாலும் குறைவான நேரம் தூங்கினாலும் அல்லது தூக்கத்தைத் தவிர்த்தாலும் உடலுக்குக் கேடுதான்.

ஒருவர் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்தை விட அதிகமாகத் தூங்கினால் என்ன ஆகும் என்பதை இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.

சோர்வு அதிகரிக்கும்: பொதுவாக ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்தை விட அதிகமாகத் தூங்கினால், நாம் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவோம் எனக் கூறுவார்கள். ஆனால், அது உண்மை இல்லை. அதிக நேரம் தூங்கினால் அந்த நாள் முழுவதும் சோர்வாகவும் தெளிவாக இல்லாமலும் இருப்போம்.

தலைவலிக்கு காரணம்: அதிகப்படியான தூக்கம் உடல்வலி மற்றும் மன அழுத்தத்தையும் உண்டாக்கும். மேலும் நாள் முழுவதும் உறக்க நிலையிலும் உடலுக்கு தேவையான காற்றோட்டம் இல்லாதது போலவும் உணர்வோம். எழுந்தவுடன் உற்சாகமாக உணர்வதற்கு பதிலாக விரக்தியாக உணர்வோம். எந்த எண்ணங்களும் இல்லாமல் மனம் ஒரு வெற்றிடமாக இருப்பது போலவே இருக்கும். தூக்கத்தைவிட்டு எழுந்த பிறகு உற்சாகம் இல்லாமல் இருந்தால் எப்படி வேலைகளை மட்டும் சரியாகச் செய்ய முடியும்?

கவனமின்மை ஏற்படும்: முக்கியமாக இது உங்கள் ஞாபக சக்தியை குறைக்கும். சரியான நேரத்தில் தூங்காமல் இருந்தால் தாமதமாக எழுவது வழக்கம். அப்படி தாமதமாக எழும்போது நமக்கு கண்களை முழிக்கவே கடினமாக இருக்கும். மேலும் இது உடம்பின் மெட்டபாலிஸத்தைக் குறைத்து உடல் எடையை அதிகரிக்கும். வயதாகும்போது உடலின் மெட்டபாலிஸம் குறையும் என்பது அறிவியல் உண்மை. அதனுடன் சேர்ந்து சரியான தூக்கம் இல்லாமல் மெட்டபாலிஸம் குறைந்தால் உடல் எடை சட்டென்று அதிகரிக்கும். மேலும் இது கவனமின்மையையும் அதிகரிக்கும்.

அதிகப்படியான தூக்கத்தை குறைக்கும் வழிகள்:

1. அலார நேரத்தை சரியாக வைத்துக்கொள்ளுங்கள். உறக்கம் களைந்த பின்னும் படுக்கையை விட்டு எழுவதற்கு நேரம் எடுத்தீர்கள் என்றால், சற்று நேரம் முன்னதாக அலாரம் வைப்பது நல்லது. அதேபோல் அலாரத்தை நிறுத்திவிட்டு மீண்டும் தூங்குவதைத் தவிர்க்கவும்.

2. வார இறுதியில் அதிகப்படியான ஓய்வு நேரம் இருக்கிறது என்று அதிகமாக தூங்கிவிடக் கூடாது. பின் இதுவே வழக்கமாகிவிடும்.

இதையும் படியுங்கள்:
மலச்சிக்கல் போன்றதே மனச்சிக்கல்!
Do you know what happens if you sleep too much?

3. இரவில் தூங்கிவிட்டு, மீண்டும் பகலில் தூங்குவது சோர்வை உண்டாக்கும். உறக்க நேரம் 7 முதல் 9 வரை எப்படி உடலுக்கு நல்லதோ அதேபோல் 15 முதல் 17 மணி வரைத் தூங்கினால் பலவீனமாகவே உணர்வீர்கள்.

4. தூங்குவதற்கு முன்னர் என்ன செய்கிறோம் என்பது சரியான நேரத்தில் தூங்குவதற்கு முக்கியமானது. தூங்குவதற்கு முன்னர் குளிக்க வேண்டும். அல்லது பிடித்த புத்தகம் படித்தல், தேநீர் அருந்துதல், பாடல்கள் கேட்டல் போன்றவற்றை செய்தல் வேண்டும்.

5. தூங்கும் இடத்தில் ஊதா நிற லைட் தவிர்ப்பது நல்லது. மொபைல் போனிலும் டார்க் மோட் வைத்து பார்க்கலாம். ஆனால், அதுவும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே பார்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com