ஒரு மாதம் மதுவுக்கு ‘நோ’ சொல்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் தெரியுமா?

Changes in the body after saying 'no' to alcohol for a month
Changes in the body after saying 'no' to alcohol for a month
Published on

சிலர் தன்நிலை மறந்து, குடும்பத்தை மறந்து, தனக்குள்ள ஒரு அற்புதமான வாழ்க்கையை மறந்து உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொண்டு நித்தம் நித்தம் மது அருந்தும் பழக்கத்தில் சிக்கித் தவிக்கின்றனர். கட்டுப்பாடோடு ஒரே ஒரு மாதம் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள் எவ்வளவு பெரியது தெரியுமா? அதுபற்றி இந்தப் பதிவில் அறிவோம்.

பசி: மதுவை 28 நாட்கள் தடை செய்து வைத்திருந்தால் பசி அதிகரிக்கக் கூடும். மதுவிற்கு பதிலாக சாப்பாட்டை அதிகம் விரும்பத் தொடங்குவீர்கள். மேலும், எதையாவது சுவையாக சாப்பிட வேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்குள் உண்டாகும்.

கனவு: மது அருந்தி விட்டு தூங்கினால் மிக மோசமான கனவுகளே ஏற்படும். ஆனால், மது அருந்தாமல் இருந்தால் இத்தகைய கனவுகள் உண்டாகாது. மாறாக, கனவுகள் எல்லாமே சுகமானதாக மாறும். ஆனால், தொடர்ந்து மது அருந்தி வந்தவர்களுக்கு நடுவில் 28 நாட்கள் இதைத் தவிர்த்தாக வேண்டும் என்றால் சற்று கடினம்தான். இது பலருக்கு தூக்கமின்மையைக் கூட உண்டாக்கி விடும்.

தலை வலி: மதுவை ஒதுக்கிய முதல் வாரத்தில் தலைவலி உண்டாக வாய்ப்புகள் உள்ளது. மேலும், சிலருக்கு உடலிலும் வலி உண்டாகும். மது அருந்தும்போது அசுத்தமாக மாறிய கல்லீரல், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சுத்தம் பெறத் தொடங்கும்.

செரிமானம்: குடிப்பதை நிறுத்திய பிறகு செரிமான மண்டலம் முன்பை விட தற்போது சீராக செயல்பட ஆரம்பிக்கும். அத்துடன் வயிற்றில் இருக்கக்கூடிய அமிலத்தின் அளவும் சீராக இருக்கும். இந்த மாற்றம், சரக்கை நிறுத்திய 2 வாரங்களில் இருந்துதான் தொடங்கும்.

ஆரோக்கியம்: மது பழக்கத்தை நிறுத்திய பின்னர் உங்களது உடல் பழைய நிலைக்கே திரும்பத் தொடங்கும். அந்த வகையில் இது நல்ல தூக்கத்தைத் தந்து, உங்களை காலையில் விரைவாக எழுந்துகொள்ளச் செய்யும். மேலும், உடல் உறுப்புகளும் சீராக வேலை செய்யும்.

இதையும் படியுங்கள்:
நீங்கள் ஒரு பீப்பிள் பிளீசராக இருந்தால் என்னென்ன இழப்புகள் ஏற்படும் தெரியுமா?
Changes in the body after saying 'no' to alcohol for a month

பற்கள்: முன்பை விட தற்போது பற்களும் பழைய நிலைக்கே மாறி விடும். குடி பழக்கத்தை விடுவதால் பற்சிதைவு ஏற்படாமல் தடுக்கலாம். மேலும், பற்களை உறுதிப்படுத்தி பற்களை வெண்மையாக்கும். மேலும், வாய் மற்றும் உடல் துர்நாற்றமும் குறையத் தொடங்கும்.

முகம்: இத்தனை நாட்களாக மது அருந்தி வந்த உங்களின் முகத்திலும் மதுவை நிறுத்தியதால் பலவித மாற்றங்கள் உண்டாகத் தொடங்கும். மது அருந்தும்போது முகத்தில் சீராக இரத்த ஓட்டம் இல்லாமல் இருந்திருக்கும். ஆனால், மதுவை நிறுத்திய முதல் வாரத்திற்கு பிறகு சீராக இரத்த ஓட்டம் இருக்கும். இது முக சுருக்கங்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றையும் தடுக்கும்.

மன அழுத்தம்: மது பழக்கத்தை நிறுத்துவதால் ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாக இருந்தாலும், இதைத் தொடர்ந்து 28 நாட்கள் கடைபிடித்து வந்தால் நிச்சயம் உடல் நலம் முன்பை விட பல மடங்கு மாற்றம் பெறும். இரத்த ஓட்டம் தடையில்லாமல் இருப்பதால் மன அழுத்தமும் குறையும்.

இமேஜ்: மது அருந்தும்போது சமூகத்தில் உங்களுக்கு இருந்த இமேஜையும் தற்போது மது அருந்தாமல் இருக்கும்பொழுது உங்களுக்கு இருக்கும் இமேஜையும் கவனித்துப் பாருங்கள். ஒரு மாதம் மது அருந்துவதை நிறுத்திப் பாருங்கள். இந்த மாற்றங்கள் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். பிறகு நீங்கள் மதுக் கோப்பையை பிடிக்க மாட்டீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com