கணவன், மனைவி உறவிலோ அல்லது காதலர்களின் இடையிலோ உள்ள நம்பிக்கையில் மெலிதாக ஏற்படும் விரிசலைதான் Micro cheating என்று சொல்வார்கள். இதைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
ஒருவர் ரிலேஷன்ஷிப்பில் இருந்தாலுமே வெளியிலே நான் Single என்று சொல்லிக்கொள்வது, முன்னாள் காதலரிடம் பேசுவது, போனில் இருப்பதை Delete செய்வது, மற்றவர்களிடம் Flirt செய்து பேசுவது, இது தெரிந்தால் என்னுடைய பார்ட்னர் கோபப்படுவார் என்று அவர்களிடமிருந்து இதையெல்லாம் மறைப்பது... இதற்குப் பெயர்தான் Micro cheating என்று கூறுவார்கள்.
Micro cheating செய்வதற்கு பல காரணங்கள் இருக்கிறது. Self esteem குறைவாக இருப்பதால், புதிதாக ஒரு நபரிடமிருந்து கிடைக்கும் காதல், தற்போது இருக்கும் ரிலேஷன்ஷிப் போர் அடிப்பது, இருவருக்கும் நடுவே புரிதல் இல்லாமல் போவது போன்ற பல காரணங்கள் இருக்கின்றன.
Micro cheating செய்பவர்களிடம் நிறைய ரகசியம் இருக்கும். போனை பயன்படுத்தும்போது உங்களிடம் காட்டாமல் மறைப்பது, உங்களுடன் இருக்கும்போதும் வேறு ஏதோ சிந்தனையில் இருப்பது, உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று தெரிந்தும் அந்த நபருடன் பழகுவது போன்றவை நடக்கும்.
தற்போது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் Micro cheating அதிகரித்துவிட்டது. இதை ஏமாற்றுதல் என்று முழுமையாக கூறிவிட முடியாது. எனினும், இது உங்கள் பார்ட்னருக்கு தெரியவரும்போது அதையும் துரோகமாகவே கருதுவார்கள். சின்னச் சின்னதாக ஆரம்பிக்கும் இதுபோன்ற பிரச்னைகள் காலப்போக்கில் அந்த உறவே உடைவதற்குக்கூட காரணமாகிவிடும்.
இதற்கான தீர்வு உங்கள் பார்ட்னரிடம் நேர்மையாகவும், உண்மையாகவும், தெளிவான புரிதலுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். ஆரோக்கியமான ரிலேஷன்ஷிப்பில் இருவருமே அது உடைந்து போகாமல் காப்பதற்கான முயற்சியைப் போட வேண்டியது மிகவும் அவசியமாகும். ஒருவர் மட்டுமே அந்த ரிலேஷன்ஷிப்பை காப்பதற்கான எல்லா முயற்சிகளையும் போட்டுக்கொண்டிருக்க, இன்னொருவர் அதைப்பற்றி கவலையில்லாமல் இருந்தால் அந்த உறவு நீண்ட காலம் நீடிப்பது கடினமாகும்.
இது போன்ற இடங்களில் Micro cheating வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம். எனவே, கணவன்-மனைவி உறவோ அல்லது காதலர்கள் உறவோ ஒருவரை மற்றொருவர் நன்றாக புரிந்து வைத்திருப்பதும், பிரச்னைகள் ஏற்படும்போது மனம் விட்டுப் பேசிவிடுவதும் மிகவும் அவசியமாகும். அவ்வாறு இருந்தால் அந்த உறவு வெகுகாலம் மகிழ்ச்சியாக நீடிக்கும் என்பதில் ஐயமில்லை.