வாழ்க்கையில் மிகப்பெரிய ஞானம் அடைய வழிமுறை என்ன தெரியுமா?

Do you know what is the way to achieve the greatest wisdom in life?
Do you know what is the way to achieve the greatest wisdom in life?https://tv.joycemeyer.org

ம்முடைய வாழ்க்கையில் எத்தனையோ விருப்பு, வெறுப்புகளை தாண்டித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கோபப்பட வேண்டிய இடத்தில் சிரிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். பேச வேண்டிய இடத்தில் அமைதியாக போக வேண்டிய நிலையிருக்கும். எனினும், அவற்றையெல்லாம் கடந்து போவதுண்டு. இருப்பினும் அதனால் ஏற்படும் கோபம், பொறாமை, வெறுப்பு இவை அனைத்தும் நம் மனதிலேயே தங்கி விடுகின்றன. அது நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே போவது மிகவும் ஆபத்தாகும். அது நம் மனதிற்கும், நிம்மதிக்கும் கேடாகும்.

உங்களுக்கு யாரோ தீங்கு செய்து விட்டார்கள் என்று தெரிய வருகிறதா? நீங்கள் யாரையேனும் அடியோடு வெறுக்கிறீர்களா? உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த பிரச்னைக்கு யார் மீதேனும் பழி போட நினைக்கிறீர்களா? உங்களுக்குப் பிடிக்காத ஒருவரை உங்கள் வாழ்க்கையில் இருந்து ஒழித்துக்கட்ட வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

இப்படி நம் வாழ்க்கையில் ஏகப்பட்டவர் மீது வெறுப்பும், கோபமும், பொறாமையும் இருக்கலாம். ஆனால், அவ்வாறு உங்கள் மனதில் இதுபோன்ற எண்ணங்கள் தோன்றும் போதெல்லாம் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான்.

அமைதியாக மூச்சை இழுத்து விட்டு, கண்களை மூடிக் கொண்டு அந்த நபரை பற்றி யோசியுங்கள். அந்த நபர் இதுவரை உக்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்திருக்கிறார் என்று யோசித்துப் பாருங்கள்.

அப்படி யோசித்துப் பார்க்கையில், அந்த நபரிடம் 0.001 சதவீதம் நல்ல குணம் இருக்குமாயின், அவரை மன்னித்து விடுங்கள். அந்த நபர் இப்போது வேண்டுமானால் உங்களுக்கு துரோகமோ, தீங்கோ இழைத்திருக்கலாம். ஆனால் எப்போதோ ஒரு காலத்தில் உங்களுக்கு ஏதோ ஒரு நல்லது செய்திருக்கிறார். அதனால்தான் அது இன்னும் உங்கள் நினைவில் இருக்கிறது. உங்கள் மனதை தொடுமளவிற்கு ஏதோ ஒரு காரியத்தை அந்த நபர் செய்திருக்கிறார். அதுவே போதுமானது அவர் மீது இருக்கும் கோபத்தையும், வெறுப்பையும் தூக்கி போட்டுவிட்டு அவரை மன்னிப்பதற்கு.

ஏனெனில், அந்த நபரை வெறுக்க வேண்டும் என்று முயற்சித்து வெறுப்பது உங்களுக்கே கடினமாகும். அதற்கு பதில் மன்னித்துவிட்டு போவது சுலபமாகும்.

இதையும் படியுங்கள்:
தைராய்டு பிரச்னைக்கு நிவாரணம் தருவதில் முக்கியப் பங்காற்றும் 8 உணவுகள்!
Do you know what is the way to achieve the greatest wisdom in life?

அப்படி மன்னிப்பதால் உங்கள் மனதில் உள்ள கோபம், வெறுப்பு, பொறாமை குணம் எல்லாம் அடியோடு விலகிவிடும். அதை மனதில் போட்டு தேக்கி வைத்துக்கொண்டு இருக்க தேவையில்லை. அப்படி வெறுப்பையெல்லாம் மனதில் போட்டு தேக்கி வைத்தால் அது நம் குணத்தையே அடியோடு மாற்றக்கூடிய வாய்ப்பிருக்கிறது.

இப்போது நான் சொன்ன வழி சுலபமானதில்லை. நமக்கு தீங்கு விளைவித்தவரை மன்னிப்பது என்பது சுலபம் இல்லை. ஆனால், இவ்வழியை முயற்சித்தால், அதுவே உங்கள் மனதில் இருக்கும் வலியைப் போக்கும் அருமருந்தாக இருக்கும்.

‘மன்னிப்பு கேட்பவன் மனிதனென்றால், மன்னிக்க தெரிந்தவன் மாமனிதன்’ என்பதை மறந்து விடாதீர்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com