நிட்பிக்கிங் என்றால் என்ன தெரியுமா? ஜாக்கிரதை! 

Do you know what nitpicking is? Beware!
Do you know what nitpicking is? Beware!
Published on

நம் வாழ்வில் பலர் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். அவர்களில் சிலர் நம்மை ஊக்குவிப்பார்கள், சிலர் நமக்கு வழிகாட்டுவார்கள், சிலர் நம் குறைகளை கண்டுபிடித்து சுட்டிக்காட்டி அவற்றை திருத்த உதவுவார்கள். ஆனால் சிலர், சின்னச் சின்ன விஷயங்களில் கூட குறை கண்டுபிடித்து அதை பெரிதாக விமர்சிப்பார்கள். இப்படி செய்வதற்கு பெயர்தான் நிட்பிக்கிங் (Nitpicking). 

நிட்பிக்கிங் என்றால் என்ன? 

நிட்பிக்கிங் என்பது ஒருவரின் நடத்தை, செயல், தோற்றம் போன்றவற்றில் உள்ள சிறு சிறு குறைகளைக் கூட கவனித்து அவற்றில் உள்ள தவறுகளை கண்டுபிடித்து விமர்சிப்பதாகும். இது பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனமாகவே இருக்கும். நிட்பிக்கிங் செய்பவர்கள் சிறிய விஷயங்களில் கூட குறை கண்டுபிடித்து அதை பெரிதாக்கி விவாதிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். 

நிட்பிக்கிங் செய்பவர்களின் குணங்கள்: 

  • எப்போதும் குறை கண்டுபிடிக்கவே முயற்சிப்பார்கள்.

  • சிறிய விஷயங்களில் கூட கவனம் செலுத்தி குறை கூறுவார்கள். 

  • தவறுகளை சுட்டிக்காட்டுவதில் மகிழ்ச்சி அடைவார்கள். 

  • எதிர்மறையான விமர்சனங்களை வழங்குவார்கள். 

  • மற்றவர்களை விட தாங்கள் சிறந்தவர்கள் என்று நினைப்பார்கள். 

நிட்பிக்கிங் ஒருவரின் சுயமரியாதையை வெகுவாக பாதிக்கும் வாய்ப்புள்ளது. அதனால், மன அழுத்தம், பதட்டம், கோபம் போன்ற உணர்ச்சிகள் வெளிப்படும். மேலும், இவ்வாறு நிட்பிக்கிங் செய்யும் நபர்களுக்கிடையேயான உறவு பாதிக்கப்படலாம். நட்பு, குடும்ப உறவுகள் போன்றவற்றில் விரிசல் ஏற்படக்கூடும். 

எப்படி எதிர்கொள்வது? 

நிட்பிக்கிங் செய்பவர்களை நாம் எப்போதும் தவிர்க்க முடியாது. அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நாம் அமைதியாக இருப்பதுதான் சிறந்த வழி. தேவையில்லாமல் உங்களைப் பற்றி விமர்சித்து குறை கூறினால் அமைதியாக இருங்கள். 

சில சமயங்களில் நிட்பிக்கிங் செய்பவர்கள் நம்மை விமர்சித்து மேம்படுத்த விரும்பலாம். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அவர்களின் கண்ணோட்டத்தை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். அது உங்களது நன்மைக்காக இருந்தால் அவற்றை ஏற்றுக்கொள்ளுங்கள். 

இதையும் படியுங்கள்:
சீஸ் உணவை அதிகம் சாப்பிடுவதால் உடல் என்னென்ன பாதிப்புக்குள்ளாகும் தெரியுமா?
Do you know what nitpicking is? Beware!

ஒருவேளை குறை கூறும் நபர் உங்களை தவறாக புரிந்து கொண்டிருந்தால், அவர்களுக்கு விளக்கம் அளிக்கவும். அதையும் மீறி அவர்கள் ஏளனம் செய்தால் கடந்து சென்று விடுங்கள். 

நிட்பிக்கிங் செய்பவர்கள் நம் கவனத்தை ஈர்க்கவே அதிகம் முயற்சி செய்வார்கள். அப்படிப்பட்டவர்களை தொடர்ந்து புறக்கணிப்பது நல்லது. அவர்களிடம் சண்டைக்கு நிற்காமல், அவர்களின் மனநிலை அப்படிப்பட்டது என்பதைப் புரிந்து கொண்டு, நீங்கள் உங்களது வேலைகளில் கவனம் செலுத்துங்கள். 

இவ்வாறு செய்வதன் மூலம் உங்களை குறை கூறி கஷ்டப்படுத்த நினைப்பவரின் ஆசை நிறைவேறாமல் போகும். எல்லா சூழ்நிலைகளிலும் நீங்கள் அவர்களைக் கடந்து செல்லும்போது, அவர்களாகவே அதை படிப்படியாக நிறுத்திக் கொள்வார்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com