சீஸ் உணவை அதிகம் சாப்பிடுவதால் உடல் என்னென்ன பாதிப்புக்குள்ளாகும் தெரியுமா?

சீஸ் உணவுகள்
cheese foodhttps://tasty.co
Published on

ற்போது ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரம் அதிகரித்து வருகிறது. அதனுடன் பால் பொருட்களை வைத்து செய்யப்படும் ஸ்வீட்ஸ் ஸ்நாக்ஸ் வகையறாக்களும் குழந்தைகளை மிகவும் கவர்கிறது. அப்போதெல்லாம் பால் என்றால் பால்கோவா மட்டுமே இனிப்பு என்ற நிலை மாறி, தற்போது பால் சேர்த்து விதவிதமான இனிப்புகள் மற்றும் அப்படியே சாப்பிட என்று பாலாடைக்கட்டிகளும் எளிதாகக் கிடைக்கின்றன.

சீஸ் வைத்து செய்யப்படும் பர்கர், பிஸா போன்றவற்றை குழந்தைகள் அதிகம் சாப்பிடலாமா? எனும் சந்தேகம் பலரிடமும் உள்ளது. காரணம், பால் கால்சியம் நிறைந்தது என்றால் அதிலிருந்து பெறப்படும் பாலாடைக்கட்டிகளும் சத்துக்கள் நிறைந்தவைதானே? ஆனாலும், எதையும் அளவோடு பயன்படுத்துவதுதானே ஆரோக்கியம். அந்த வகையில் சீஸ் அதிகம் சாப்பிடுவது எந்தெந்த வகையில் ஆரோக்கியக் குறைபாட்டைத் தரும் தரும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

நூற்றுக்கணக்கான வகைகளில், உலகம் முழுதும் சீஸ் தயாரிக்கப்படுகிறது. சரியான பொருட்கள் மற்றும் உபகரணங்கள் கொண்டு சீஸ் தயாரிப்பது அந்தக் காலத்திருந்தே உலக நாடுகள் சிலவற்றில் இருந்து  வந்துள்ளது என்கிறார்கள். பாலாடை கட்டி தரம் மற்றும் சுவை உற்பத்தி செயல்முறையும் ஒவ்வொரு படி நிலையையும் சார்ந்துள்ளது. பொதுவாக, சீஸ் என்பது அமிலமயமாக்கல், உரைதல், மோரில் இருந்து தயிரை பிரித்தல், உப்பு சேர்த்தல், வார்ப்பு , பேக்கேஜிங் போன்ற செயல்முறைகள் மூலம் உருவாகிறது.

உலகெங்கும் நூற்றுக்கணக்கான சீஸ் வகைகள் இருந்தாலும், ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான அமைப்பு மற்றும் சுவையுடன் இருக்கிறது. இவை அனைத்திற்கும் பொதுவானதுதான் பால். பசுவின் பாலில் இருந்து அதிக கொழுப்பு மற்றும் புரத உள்ளடக்கம் காரணமாக இது சீஸ் தயாரிப்புக்கு முன்னுரிமை பெறுகிறது. ஆடுகளின் பாலில் லாக்டோஸ் அதிகம் இருப்பதால் பெரும்பாலான மக்கள் அதை பானமாக அருந்தாமல் ஒரு சிறந்த சீஸாகப் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக, செம்மறி ஆட்டின் பாலாடைக்கட்டிகள் பிரபலமாக உள்ளன. எருமை பால் அரிதாக இருந்தாலும் சீஸ் தயாரிப்பில் எருமை பால் பாரம்பரிய தேர்வாக உள்ளது. கராகேனா என்பது தென்னாப்பிரிக்காவின் ஒட்டகப் பாலில் இருந்து தயாரிக்கப்படும் சீஸ் ஆகும். மேலும், குதிரை பால் மற்றும் யாக் பாலில் இருந்தும் பல நாடுகளில் சீஸ் தயாரிக்கிறார்கள்.

பால் அடிப்படை என்றாலும், இது முழுக்க முழுக்க இயற்கையான ஒரு பொருள் அல்ல என்பதை நாம் நம்பியே ஆக வேண்டும் . செயல்முறைகளில் செயற்கையான நொதிப்பொருட்களைக் கொண்டிருப்பதால் இதன் அதிகப் பயன்பாடுகள் நீண்டகால ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது உண்மை. சீஸ் சேர்த்து தயாரிக்கப்படும்  சீஸ் பர்கர் , கிரீமி கேசரோல்கள் போன்ற அதிக சோடியம் கொண்ட உணவுகளை உட்கொள்வது நிச்சயம் நீர் இழப்புக்கு வழிவகுக்கும். இவற்றை எடுத்துக்கொள்ளும்போது போதிய அளவு நீர் அருந்துவது அவசியம்.

இதையும் படியுங்கள்:
அடிக்கடி வாய் மற்றும் நாக்கில் புண் ஏற்படுகிறதா? வைட்டமின் பி6 குறைபாடாக இருக்கலாம்; ஜாக்கிரதை!
சீஸ் உணவுகள்

உங்களுக்கு லாக்டோஸ் ஒவ்வாமை இருந்தால் குறிப்பிட்ட அளவில் மட்டுமே சீஸ் எடுக்க வேண்டும். சீஸ் உள்ளே சென்று குடலால் பதப்படுத்தப்பட்டு உறிஞ்சப்படுவதற்கு பதிலாக உங்கள் குடல் விரிவடைந்து வாயு தொல்லை, மலச்சிக்கல் போன்றவை ஏற்பட வாய்ப்பு உண்டு.

சீஸில் கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளதால் சமச்சீர் உணவை பராமரிக்கவும், இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இருதய பிரச்னை உள்ளவர்கள் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் முடிந்தவரை இதை அவசியம் தவிர்க்க வேண்டும். சீஸை குறைந்த கலோரி, அதிக புரத உணவு என்று நினைப்பது தவறான கருத்து. சீஸ் அதிகம் சாப்பிடுவதால் உண்மையில் எடை அதிகரிப்பை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது  என்று மருத்துவர் கூறுகிறார்கள்.

நாவை சுண்டி இழுக்கும் சீஸில் அதிகக் கொழுப்பு மற்றும் நார்ச்சத்து குறைவாக இருப்பதால் அதிக சீஸ் சாப்பிடுவது செரிமானப் பிரச்னைக்கு வழிவகுத்து   மலச்சிக்கலை ஏற்படுத்தும். ஆகவே, குழந்தைகள் முதல் பெரியவர் வரை அதிக அளவு பாலாடைக்கட்டியை உட்கொள்வது வயிற்று உப்புசம், மலச்சிக்கல் போன்ற உடனடி வயிற்றுப் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதை  கவனத்தில் கொள்வது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com