வாட்டர் பாட்டில் மூடிகளின் நிறம் அர்த்தம் தெரியுமா?

Mineral water caps
Lifestyle article
Published on

வெளியே செல்பவர்கள் தண்ணீர் பாட்டிலை எடுத்து செல்ல மறந்துவிட்டால் கடைகளில் விற்கப்படும் மினரல் வாட்டரை வாங்கி குடிப்போம். 1970களில் முதல் முதலாக வாட்டர் பாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது பெரும்பாலான மக்கள் இதனை பயன்படுத்துகிறார்கள். அப்படி வாங்கும் மினரல் வாட்டர் பாட்டில் மூடியில் ஐந்து நிறங்கள் உள்ளன. அந்த நிறம் நிறம் வேறுபட்டிருப் பதற்கான காரணம் குறித்து இப்பதிவில் காண்போம்.

நீலநிற மூடி

மினரல் வாட்டர் பாட்டிலின் மூடியின் நிறமானது நீல நிறத்தில் இருந்தால், அந்த தண்ணீர் ஒரு ஊற்றில் இருந்து நிரப்பப்பட்ட தண்ணீர் என்று அர்த்தம். இந்த வகையான நீர் மினரல் வாட்டர் என்று அர்த்தம். இப்படிப்பட்ட நீர் பாட்டில்தான் பெரும்பாலான சிறிய கடைகளில் அதிகம் விற்கப்படுகிறது.

பச்சை நிற மூடி

சில வாட்டர் பாட்டிலின் மூடியின் நிறம் பச்சை நிறத்தில் இரீக்கும் இப்படி பச்சை நிறமூடியைக் கொண்ட வாட்டர் பாட்டிலானது, அந்த நீரில் சுவைகள் சேர்க்கப் பட்டிருப்பதைக் குறிக்கிறது. இதனால்தான் பச்சை நிற மூடி கொண்ட பாட்டில் நீரை குடித்தால், அந்த நீரில் ஒருவித வித்தியாசமான சுவையை அனுபவிக்க நேரிடுகிறது.

இதையும் படியுங்கள்:
மின்னணு சாதனங்களை பராமரிப்பது (பாதுகாப்பது) குறித்து சில முக்கியமான குறிப்புகள்!
Mineral water caps

வெள்ளை நிற மூடி

வெள்ளை நிற மூடியைக்கொண்ட வாட்டர் பாட்டிலில் இருக்கும் நீர், இயந்திரம் மூலம் சுத்திகரிக்கப்பட்டது என்பதைக் குறிக்கிறது.

கருப்பு நிற மூடி

பெரிய கடைகளில் அதிகம் விற்கப்படும் கருப்பு நிற மூடியைக் கொண்ட நீர் பாட்டிலில் உள்ள தண்ணீர் காரத்தன்மையைக் கொண்டுள்ளது என்று அர்த்தம். இந்த வகையான பாட்டில் நீரின் விலை சற்று அதிகமாக இருக்கும். மேலும் இந்த பாட்டில் நீர் சாதாரண பாட்டில் நீரை விட ஆரோக்கியமானது.

மஞ்சள் நிற மூடி

மஞ்சள் நிற மூடியை கொண்ட வாட்டர் பாட்டிலில் உள்ள நீரில் வைட்டமின்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் போன்றவை கலந்துள்ளன என்று அர்த்தம்.

எவ்வகை நிறத்தைக் கொண்ட பாட்டில் மூடியாக இருந்தாலும் சரி ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதை அவசியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com