முதுமையின் வலிகள் எப்படி இருக்கும் தெரியுமா?

முதுமையின் வலிகள்
முதுமையின் வலிகள்
Published on

முதுமை என்பது குழந்தை பருவத்துக்கு சமம் என்பார்கள். உடல், மன வேதனைகளை குழந்தைகளுக்கு எப்படி சொல்ல தெரியாதோ, அதேமாதிரிதான் முதியவர்களுக்கும். 2020ல் உலகில் ஆயிரம் மில்லியன் முதியவர்கள் இருப்பார்கள். அதில் இந்தியாவில் மட்டுமே 142 மில்லியன் பேர்  என்கிறது உலக சுகாதார நிறுவனம். வயதானவர்கள் அதிகமாக, ஆக அவர்களின் உடல் நலப் பிரச்னைகளும் அதிகரிக்கவே செய்யும்.

அதிலும் முதுமையில்தான் வியாதிகள் மட்டுமல்ல, பொருளாதாரத்திலும் சரிவு ஏற்படும், ஆரோக்கியத்திலும் சரிவு ஏற்படும். ஒரு மனிதனுக்கு முதுமை என்பது கடினம்தான். முதுமையின் வலிகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

“65 வயசுக்குப் பிறகு ஆண்களும், பெண்களும் அதிக வலிகளால் அவதிப்படுகிறார்கள். அவங்களின் வலிகள், மற்றவர்களின் வலிகளிலிருந்து முற்றிலும்  மாறுபட்டது. அதற்கான அணுகுமுறை, சிகிச்சை என்று எல்லாமே வேறு.

வயோதிகத்தால் வரக்கூடிய வலி திசுக்களின் தேய்மானம் மற்றும் பலவீனத்தால் வரக்கூடியது. இரத்த அழுத்தம், நீரிழிவு, எலும்பு மூட்டுப் பிரச்னை என்று வேறு நோய்களின் விளைவால் வரக்கூடியது, தனிமை, வாழ்க்கையை பற்றிய பயம்,  வருமானம் இல்லாதது என்று மற்ற காரணங்களால உணரப்படும் வலி, புற்றுநோயால் வரக்கூடிய வலி இப்படி வயதானவர்களின் வலிக்கான  காரணங்கள் பல வகைகள் ஆகும்.

இவர்களுக்கு சிகிச்சை கொடுப்பது அத்தனை சுலபம் இல்லை. முக்கியமாக, சிகிச்சைக்கு இவர்களால் பெரும்பாலும் ஒத்துழைக்க முடியாது. காது கேட்காதது, கவனமின்மை, மறதி,  மன ரீதியான பிரச்னைகள் என்று பல காரணங்களால் சிகிச்சைகள் குறித்து புரிந்துகொள்ளும் சக்தி அவர்களுக்கு இருக்காது. உடற்பயிற்சி, பிசியோதெரபி மாதிரியான விஷயங்களுக்கும் ஒத்துழைக்க மாட்டார்கள். மிகவும் பொறுமையாகத்தான் இவர்களை அணுக வேண்டும் என்கிறார் வலி நிர்வாக சிறப்பு மருத்துவர் குமார். மேலும் இவர், “மூட்டு வலி,  தோள்பட்டை வலி, முதுகு வலி, கழுத்து வலி, கால் எரிச்சல், புற்றுநோய் வலி ஆகியவையே முதியவர்களிடம் காணப்படுகிற முக்கியமான வலிகள்.

இதையும் படியுங்கள்:
பழைய வீட்டை இடிக்க சரியான நாள் எது?
முதுமையின் வலிகள்

ஏற்கெனவே இவர்களுக்கு வேறு ஏதாவது நோய் இருந்தால், வலிகளுக்கான மருந்துகளை கொடுப்பதில், அதிகபட்ச கவனம் தேவை. எல்லா மருந்துகளும்  அவர்களுக்கு ஒத்துக்காது. நோயின் தன்மை, இவர்களின் உடல் மற்றும் மனநிலையை தெரிந்துகொண்டுதான் மருந்துகள் கொடுக்க வேண்டும். 60 வயசுக்கு  மேல் உள்ளவர்கள் எக்காரணம் கொண்டும், எந்த வலிக்கும் சுய மருத்துவம் செய்யவே கூடாது.

மருந்து கொடுத்து சரி செய்ய முடியாத வலிகளுக்கு கவுன்சிலிங்கும், உளவியல் ரீதியான தெரபிகளும் தேவைப்படலாம். பிசியோதெரபி  செய்வது மூலமாக வலியின் தீவிரம் அதிகமாவதைத் தவிர்க்கலாம். சில வலிகளுக்கு அறுவை சிகிச்சைதான் தீர்வாக இருக்கும். ஆனால், வயோதிகம்  காரணமாக அறுவை சிகிச்சை செய்ய முடியாது, மருந்துகளும் தர முடியாது என்கிற நிலையில் உள்ளவர்களுக்கு, வலி நிர்வாக கிளினிக்கை  அணுகி, சிறப்பு வலி நிவாரண சிகிச்சைகள் கொடுக்கிறது பலன் தரும்” என்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com