சாணக்ய நீதி கூறும் கணவன் - மனைவி உறவு... வயது வித்தியாசம் எவ்வளவு இருக்க வேண்டும்?

Chanakiya nithi
Chanakiya nithi
Published on

சாணக்கியர் இந்தியாவில் வாழ்ந்த ஒரு சிறந்த அரசியல்வாதி மற்றும் ராஜதந்திரி ஆவார். இவர், அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் ஆழ்ந்த அறிவைக் கொண்டவர். பலரும் வாழ்க்கையில் சாணக்கியரின் நெறிமுறைகளை பின்பற்றுகின்றனர். அப்படி கணவன் மனைவிக்குள் எவ்வளவு வயது வித்தியாசம் இருக்க வேண்டும், எது வாழ்க்கைக்கு சிறந்தது என்பது பற்றி அவர் கூறிய கருத்துக்களை பார்க்கலாம்.

குடும்பத்தில் முக்கிய உறவு என்றால் அது திருமண பந்தம் தான். பலரும் தங்கள் வாழ்க்கையில் கணவன் - மனைவி உறவு நீடிக்க என்ன செய்ய வேண்டும் என கருத்து கேட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் டைவர்ஸ் கலாச்சாரமும் அதிகரித்து வருகிறது. இப்படி ஒரு சூழலில் இந்த பிரச்சனைகளுக்கு வயது வித்தியாசம் காரணமாக இருக்கலாமா என்ற பேச்சுக்களும் எழுந்து வருகிறது. குடும்பம் என்றாலே கணவன் - மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் இருக்க தான் செய்யும். ஆனால் சிலர் வீடுகளில் அது அதிகமாக இருப்பதால் என்ன செய்வதென தெரியாமல் இருப்பார்கள்.

இதையும் படியுங்கள்:
கணவன் மனைவி இந்த 7 விஷயங்களில் வெளிப்படையாக இருக்க வேண்டும்! 
Chanakiya nithi

சாணக்கியர், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு கணவன் மனைவிக்கு இடையே வயது வித்தியாசம் அதிகமாக இருக்கக்கூடாது என்றும், இருவருக்கும் இடையே பெரிய வயது வித்தியாசம் இருந்தால், திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படும் எனவ்ம் தெரிவித்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையிலான உறவு மிகவும் புனிதமானது என்றும், இந்த பந்தத்தைப் பேணுவதற்கு, கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் தேவைகளைப் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், கணவன் - மனைவி இடையே அன்பும் நல்லிணக்கமும் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்றும் சாணக்கியர் கூறுகிறார்.

இதையும் படியுங்கள்:
கணவன், மனைவி சண்டையை சமாதானத்துக்குக் கொண்டுவரும் எளிய 5 ஆலோசனைகள்!
Chanakiya nithi

அறிவியல் ரீதியாக, இந்திய சமுதாயத்தில், கணவன் - மனைவியின் வயதில் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் இடைவெளி ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆண் குழந்தைகளை விட பெண்ணின் வயது குறைவாக இருக்க வேண்டும் என்று சமூகமும் கூறுகிறது. அதுதான் இந்திய திருமண கட்டமைப்பில் உருவாக்கி வைத்துள்ளது. ஆனால், சில நேரங்களில் இந்த இடைவெளி 10 முதல் 15 ஆண்டுகள் வரை இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com