வயதான பின்பும் மதிப்பு, மரியாதை கிடைக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

Do you know what to do to get value and respect even after old age?
Do you know what to do to get value and respect even after old age?https://vocal.media

மனிதனுக்கு வயது ஆக ஆக அறிவும் பக்குவமும் கூடும். ஆனால் அவை ஒருவருடைய நடவடிக்கைகளில் வெளிப்பட்டால் மட்டுமே பிறரின் நன்மதிப்பையும் மரியாதையும் பெற முடியும். வயதுடன் சேர்ந்து அனுபவமும் முதியவர்களுக்கு கிடைக்கும். தன்னுடைய பேச்சு மற்றும் நடவடிக்கை மூலம், தான் பெற்ற அறிவையும் அனுபவத்தையும் அடுத்த தலைமுறைக்கு அவர்கள் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். முதிய வயதில் இருக்கும் ஒருவர் சில விஷயங்களுக்கு தடா போட்டால் மட்டுமே அவருக்கான மரியாதையும் அங்கீகாரமும் சமூகத்தில் கிடைக்கும். அவை என்ன என்பதை பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

முதியவர்கள் குட் பை சொல்ல வேண்டிய பழக்க வழக்கங்கள்:

1. இணக்கமாக இல்லாமல் இருப்பது: பொதுவாக, வயதாகும்போது அவரவர்க்கு பிடித்த பழக்கமான இலகுவான வகையில் வாழத்தான் பிடிக்கும். அதேசமயம் சில மாற்றங்களை திறந்த மனதுடன் ஏற்றுக்கொண்டு, பிறருடன் இணைந்து நடக்க வேண்டும். புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். இந்த உலகத்தோடு சேர்ந்து அதன் மாற்றங்களுக்கு ஏற்ப சற்றே வளைந்து கொடுத்தால் மட்டுமே உலகம் இவர்களை மதிக்கும்.

2. எதையும் கவனிக்காமல் இருப்பது: இளம் வயதில் இருக்கும்போது தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற மனப்பான்மை இருக்கும். பிறர் பேசும்போது எதையும் கவனிக்காமல், ‘நான் சொல்வதை கேளுங்கள்' என்று இடையில் குறிக்கிட்டு பேசும் பழக்கம் நிறைய பேருக்கு உண்டு. தான் சொல்ல வருவது மட்டுமே சரி என்ற மனப்போக்கு அவர்களிடம் இருக்கும். ஆனால், அதேசமயம் வயதாகும்போது இது சரியான பழக்கம் அல்ல என்பதை உணர வேண்டும். பிறர் சொல்வதை பொறுமையாக காது கொடுத்து கேட்க வேண்டும். அவர்கள் சொல்வதை புரிந்து கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே வீட்டில் உள்ளவர்கள் அந்த வீட்டு பெரியவர்களுடன் நன்றாகப் பேசுவார்கள், பழகுவார்கள்.

3. மதிப்பிடும் குணம்: தனது நம்பிக்கைகள், அனுபவங்கள், கருத்துக்களை பிறர் மீது வலுக்கட்டாயமாக திணிக்கக் கூடாது. அவர்கள் தான் சொல்வதைக் கேட்காவிட்டால் அதற்காக அவர்களை மோசமாக மதிப்பிடக் கூடாது. அது மரியாதை தன்மையை குறைத்து விடும். தான் சொல்வதை இவர்கள் தப்பாகப் புரிந்து கொள்வார்களோ என்ற பயத்தில் பேரன், பேத்திகள் கூட தனது மனதைத் திறந்து பேச மாட்டார்கள்.

4. வெறுப்புணர்வு: பழைய கசப்பான நினைவுகள் சில சமயம் மனதை விட்டு நீங்காமல் இருக்கும். அதை அடிக்கடி நினைத்துக் கொண்டு சம்பந்தப்பட்டவர் மேல் வெறுப்பை காண்பிப்பது சரியாகாது. வயதுக்கேற்ற பக்குவத்துடன் பிறர் செய்த தவறை மன்னித்து ஏற்பதே புத்திசாலித்தனம். இது சம்பந்தப்பட்ட நபருக்கு மன நிம்மதியை தருவதுடன் பிறரிடம் மரியாதையும் பெற்றுத் தரும்.

5. பிறரை விமர்சனம் செய்வது: இந்த உலகில் யாருமே 100 சதவிகிதம் சரியானவர்கள் இல்லை. எல்லோரிடத்திலும் சில குறைகள் இருக்கும். அதை காரணமாக வைத்து அவர்களை இழிவாக நடத்துவது, கேவலமாக விமர்சனம் செய்வது கூடாது. வயதுக்கேற்ற பக்குவத்துடன் பிறரை நடத்த வேண்டுமே தவிர, விமர்சனம் செய்து அவர்களை குற்ற உணர்வில் ஆழ்த்தக்கூடாது. சுற்றி உள்ளவர்கள் அந்த முதியவரை விட்டு விலகி விடுவார்கள். அதனால் பிறர் மனம் புண்படாதவாறு இதமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

6. ஆரோக்கியத்தை புறக்கணிப்பது: வயதாக ஆக நோயின் பிடியில் விழுவது சகஜம். எனவே, தன் உடலை மிகவும் அக்கறையுடன் கவனித்துக்கொள்ள வேண்டும். அதற்கு தேவையானபடி உணவு உண்டு உடற்பயிற்சி செய்து தனது உடல் நலனை காத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியம் சம்பந்தமாக வீட்டில் உள்ள சிறியவர்கள் ஏதாவது கருத்து சொன்னால் அதை ஏற்று நடக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
மூளையின் அறிவாற்றலை உயர்த்தும் எட்டு வகை உணவுகள் தெரியுமா?
Do you know what to do to get value and respect even after old age?

7. ஸாரி சொல்லத் தயங்குவது: வயதாகி விட்டால் தனக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும். பிறருக்கு ஒன்றும் தெரியாது என்ற மனப்போக்கு கூடாது. தெரியாமல் ஏதாவது தவறு செய்து விட்டால் சாரி என்று மனதார சொல்ல வேண்டும். அப்போதுதான் பிறர் மதிப்பார்கள். மன்னிப்பு கேட்பது பலவீனம் அல்ல. அது ஒரு மிகப்பெரிய பலம் என்பதை உணர வேண்டும். அப்படி இல்லாமல் இருந்தால் நீங்கள் ஒரு பிடிவாதக்காரர், ஆணவமிக்கவர் என்று பிறர் உங்களை நினைக்கக்கூடும்.

8. நிராகரிப்பது: பிறருடைய உணர்வுகளை கருத்துக்களை புறக்கணிக்கக் கூடாது. அது உறவுகள் இடையே விரிசலையும், மரியாதை குறைவையும் ஏற்படுத்தும். வீட்டில் உள்ள சிறியவர்கள் மீது அக்கறையுடன் நடந்து கொள்வதும் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்டு அவர்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதும் அவசியம்.

முதுமை என்பது கொடுமையான விஷயம் அல்ல. அது இயல்பான இயற்கையான விஷயம்தான். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மன ஆரோக்கியம் பேணுவதும் மிகவும் முக்கியம். பழக்க வழக்கங்களுக்கு குட் பை சொல்லி நடந்தால் எப்போதும் மதிப்பு மரியாதையுடன் முதியவர்கள் வாழலாம் என்பது நிச்சயம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com