மூளையின் அறிவாற்றலை உயர்த்தும் எட்டு வகை உணவுகள் தெரியுமா?

Do you know eight foods that boost cognitive performance?
Do you know eight foods that boost cognitive performance?https://tamil.webdunia.com

போட்டிகள் நிறைந்த இந்த நவீன காலத்தில் நாம் அனைவரும் வெற்றிப் பாதையில் வீர நடை போட நினைத்தால் அதற்கு முக்கியத் தேவை புத்திக் கூர்மையும் சுறுசுறுப்புடன் கூடிய அறிவாற்றலுமே ஆகும். நம் மூளை எந்நேரமும் புத்திக்கூர்மையும் அறிவாற்றலும் நிறைந்து செயல்பட நாம் குறிப்பிட்டு சொல்லக்கூடிய எட்டு வகை உணவுகளை அடிக்கடி உட்கொள்வது அவசியம். அவை என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

மூளை செறிவுற்ற ஆற்றலுடன் செயல்படத் தேவை ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள். இது சால்மன், ட்ரௌட், சர்டைன் போன்ற மீன் உணவுகளில் அதிகம் உள்ளது. இது கூர்நோக்கு, கற்றல் திறன் போன்றவற்றை வளர்ப்பதுடன் மூளையின் உள் கட்டமைப்பு வளர்ச்சிக்கும் உதவி புரியும்.

ஆன்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்த ப்ளூபெரி பழங்களை உண்பதால் அவற்றிலுள்ள ஃபிளவோனாய்ட்  மூளையின் ஞாபக சக்தியையும் ஆற்றலையும் அதிகரிக்கச் செய்கிறது. மேலும், மூளை வயோதிகத் தன்மை அடைவதையும் தள்ளிப்போகச் செய்கிறது.

புரோக்கோலியிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் வைட்டமின் K யானது ஸ்ஃபின்கோ லிப்பிட்ஸ் (Sphingolipids) என்றொரு வகை கொழுப்புகளை உண்டுபண்ண உதவுகின்றன. இந்த கொழுப்புகளானது மூளையின் செல்களுக்குள்ளே மிக இறுக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. மேலும், புரோக்கோலியில் வீக்கத்தைக் குறைக்கவும், கேன்சரை எதிர்த்துப் போராடவும் கூடிய குணங்கள் நிறைந்துள்ளன.

பூசணி விதைகளில் மக்னீசியம், இரும்புச் சத்து, சிங்க், காப்பர் போன்ற கனிமச் சத்துக்களும், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்களும் அதிகளவில் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் மூளையின் ஆரோக்கியத்தை வளப்படுத்த உதவுபவை.

டார்க் சாக்லேட்களில் ஆன்டி ஆக்சிடன்ட்கள், ஃபிளவோனாய்ட் மற்றும் கஃபைன் சத்துக்கள் நிறைந்துள்ளன. மூளையின் ஆற்றலை மேம்படுத்தும் திறனுக்கு இவை உதவக்கூடியவை. ஞாபக சக்தியும், என்டோர்ஃபின் என்னும் வலி தணிக்கும் சுரப்பின் உற்பத்தியை அதிகரிக்கக் கூடியதுமாகும். இவை இரண்டும்  டார்க் சாக்லேட்டை மிதமான அளவில் உண்ணும்போது கிடைக்கின்றன.

இதையும் படியுங்கள்:
காபிக்கும் தூக்கத்திற்குமான தொடர்பு பற்றி தெரியுமா?
Do you know eight foods that boost cognitive performance?

வால் நட் மற்றும் பாதாம் கொட்டைகளில் ஆன்டி ஆக்சிடன்ட்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் E அதிகளவில் நிறைந்துள்ளன. இவை வயது முதிர்வு காரணமாக மூளையின் ஆற்றல் திறனில் உண்டாகும் குறைபாடுகளைத் தடுத்து நிறுத்துகின்றன.

மூளையின் ஞாபக சக்தி மற்றும் மூட் (mood ) பராமரிப்பிற்கு உதவுவது அசிடைல்கோலின் (acetylcholine) என்னும் ஊட்டச்சத்து. இதன் முன்னோடி முட்டையில் இருந்து கிடைக்கும் கோலின் (choline) என்ற சத்தாகும். முட்டையில் உள்ள ஃபொலேட், வைட்டமின் B6 மற்றும் வைட்டமின் B12 ஆகிய சத்துக்களும் மூளையின் சிறப்பான இயக்கத்திற்கு உதவி புரிகின்றன.

மஞ்சளில் உள்ள குர்க்குமின் என்ற கூட்டுப்பொருள் ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணங்கள் நிறைந்தது. இவை இரத்தத்தை எடுத்துச் செல்லும் நரம்புகளுக்கும் மூளைக்கும் இடையில் வரும் தடைகளைத் தகர்த்து, நிறைவான ஆற்றலுடன் மூளை செயல்பட உதவுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com