
வாழ்க்கையில் தம்பதியினர் கடைசி வரை காதலித்தால், வாழ்வு இனிமையாகவே இருக்கும். உண்மை காதல் என்பது காதலர்களில் ஒருவருக்கொருவர் துன்பம் வர பொறுக்காது. காதலில், ‘அறுபது வயதிலும் உன்னோடு இருப்பேன்’ என்று கூறுபவர்களும் உண்டு. உண்மையான காதல் என்பது பொங்கிப் பொங்கி வருவது. இது அலை போல் அடங்காதது. காதலர்கள் பெரும்பாலும் கல்வி கற்கும் இடங்களிலும், வேலை பார்க்கும் இடங்களிலும் உருவாகின்றனர். வேலை பார்ப்பவர்களைத் தவிர, காதலர்களின் நிலைமை எங்கு சென்றாலும் பரிதாபமான நிலையில் காணப்படுகின்றது.
காதலானது நீரில் பட்டு அசைவது போல் அசையும் சக்தி வாய்ந்தது. அடி மேல் அடி வைத்தது போல் மனதை இதமாகத் தாலாட்டும் சக்தி வாய்ந்தது. இதில் பிரிவு என்பது இடியைத் தாங்குவது போன்றது. காதல் என்பது விளையாட்டாகவும் செல்லும், உதறவும் செய்யும், சேரவும் செய்யும்.
காதல் என்பது வேதனையான விளையாட்டு. இதில் ஒருபாலருக்கு விருப்பம் இருந்தாலும், இன்னொருவருக்கு இல்லாமலும் இருக்கலாம். ‘காதலில் உருகுகிறான், உருகுகிறாள்’ என்று கூறுவது தவறு. உருகும் காதல் நிலையற்றது. ஒருவரை ஒருவர் நேசித்தலுக்கும், விரும்புவதற்கும் வித்தியாசம் உண்டு.
காதல் வாழ்க்கையை எப்படிக் கொண்டு செல்ல வேண்டும்: காதல் என்பது தோன்றாமல் இருக்கும் வரை நல்லது. தோன்றினால் அது உறுதியாக இருக்க வேண்டும். பலமானதாக இருக்க வேண்டும். எத்தகைய சதியானாலும் அழிக்க முடியாதவாறு திடமானதாக இருக்க வேண்டும். இதில் இருவரும் மனது வைத்தால்தான் ஓரளவு வெற்றி கிடைக்கும். காதல் திருமணம் என்றாலும், குடும்பத்தினர் ஒழுங்குபடுத்தும் திருமணம் என்றாலும் இருவருக்கும் திறமை உண்டு. எங்கும் எதிலும் ஏமாற்றம் உண்டு.
காதலர்கள் என்றாலும், தம்பதியினர் இருவருக்கும் இருவரின் தாய், தந்தையர், உற்றார் உறவினர் மேல் ஒரு சந்தோஷம் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். காதல் என்றாலும் அது பாதுகாப்பானதாக அமைய வேண்டும். பாதுகாப்பு இருந்தால்தான் அவரவர் உடல்நிலையை அவரவர் பாதுகாக்க முடியும்.
காதலர்கள் என்றவுடன் சிலர் அவர்களை அன்புக்காக செல்பவர்கள் என்று நினைப்பதுண்டு. ஆனால், அவர்களுடைய உறுதித் தன்மை உழைப்பைக் கொடுப்பதுண்டு, சந்தோஷத்தைக் கொடுப்பதுண்டு. காதலர்கள் நினைத்த அளவு எதையும் எதிர்பார்க்க முடியாமல் போனாலும் சந்தோஷத்தைத் தேட முயற்சி செய்தல் நலம்.
காதல் என்பது காதலர்கள் இருவரில் ஒருவரை மட்டும் சேர்ந்ததாக இருக்கக் கூடாது. இதன் அழுத்தம் இருவர் பேச்சிலும், போக்கிலும் எல்லாவற்றிலும் இருக்க வேண்டும். திருமணத்துக்குப் பின்னர் தம்பதியினரின் காதல் என்பது உல்லாசம், ஒரு விளையாட்டு போன்று மனதுக்குத் திருப்தியாக்கிக் கொடுப்பது, உடல் நிலையை சரி செய்வது, உடலுக்கும், மனதுக்கும் திருப்தியை கொடுத்து காதலர்களை சந்தோஷப்படுத்துவதாகும்.
காதல் என்பது மாங்கல்யத்திலும் இல்லை, உடல் சந்தோஷத்திலும் இல்லை, மானிடரிலும் இல்லை, திறமையிலும் இல்லை. என்றென்றும் கடமை உணர்வும், விருப்பமுமே காதலையும் வெற்றி பெறச் செய்யும் கருவி என்பதும் தெரிய வேண்டும்.