
நம் உடலில் மிகவும் முக்கியமான பாகமாக கருதப்படுவது கண்கள் தான். கண்களை வைத்து ஒருவரின் மனநிலையை கணிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது. காதல் என்று வந்து விட்டாலே கண்களால் காதல் செய்வது தொடங்கி எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்த உதவுவது கண்கள் தான். அத்தகைய கண்களின் நிறத்தையும் மற்றும் வடிவத்தையும் வைத்து ஒருவரின் குணத்தை விவரிக்க முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
1. கருப்பு நிறக்கண்களை உடையவர்கள் மிகவும் ராசிக்காரர்களாக இருப்பார்கள். இவர்கள் யாருடனும் உடனே நெருங்கிப் பழக மாட்டார்கள். ஆனால் பழகிவிட்டால் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பார்கள். கருப்பு நிறக் கண்களை உடையவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். இவர்கள் கடினமான உழைப்பாளிகள். அதிக சவால்களை சந்தித்து அதில் வெற்றிப் பெறுபவர்கள்.
2. சாம்பல் நிறக்கண்களை உடையவர்கள் மிகவும் அமைதியாகவும், புத்திசாலித்தனமாகவும் இருப்பார்கள். அவர்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி நிறைய உதவிகளை செய்வார்கள். இவர்கள் யோசிக்கும் விதம் மற்றவர்களைக் காட்டிலும் தனித்துவமாக இருக்கும். மிகவும் அழகாக இருப்பார்கள்.
3. தங்க நிறக்கண்களை உடையவர்கள் யாருடனும் சேர்ந்து இருக்க மாட்டார்கள். எப்போதும் தனிமையிலேயே இருப்பார்கள். இவர்கள் யாருடனும் எதையும் பகிர்ந்துக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் மனதுக்குள்ளேயே வைத்துக்கொள்ளும் குணத்தைக் கொண்டவர்கள்.
4. பிரவுன் நிறக்கண்களைக் கொண்டவர்கள் மற்றவர்களை சுலபமாக கவரக் கூடியவர்கள். இவர்கள் எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கக் கூடியவர்கள். இவர்கள் பேச்சுத்திறமையில் நிறைய நண்பர்களை சம்பாதிப்பார்கள். மிகவும் புத்திசாலியாக இருப்பார்கள்.
5. நீல நிறக்கண்கள் ஆயிரத்தில் ஒருவருக்கு இருக்கக்கூடியது. நீலநிறக் கண்களை கொண்டவர்கள் அன்பாகவும், அழகாகவும், அறிவாகவும் இருப்பார்கள். எந்த விஷயமாக இருந்தாலும், அதை கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் உடையவர்கள். இவர்களுக்கு உதவி செய்யும் குணம் அதிகம் இருக்குமாம்.
6. பச்சை நிறக்கண்கள் மிகவும் அரிதான நிறமாகும். பச்சை நிறக்கண்களை உடையவர்கள் ஆர்வமுள்ளவர்களாகவும், துணிச்சலாகவும் செயல்படுவார்கள். மேலும் இவர்கள் புத்திசாலிகளாகவும், அகங்காரம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. இதில் உங்கள் கண்கள் எந்த நிறத்தில் இருக்கிறது? என்பதை சொல்லுங்கள் பார்க்கலாம்.