சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த ஐந்து இனிப்புப் பொருட்கள் எவை தெரியுமா?

தேங்காய் சர்க்கரை
தேங்காய் சர்க்கரை

நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பொதுவாக இனிப்புப் பொருட்களை எடுத்துக்கொள்ளக் கூடாது என்று கூறுவர். ஆனால், சர்க்கரை நோய் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களும் சாப்பிடுவதற்கேற்ற சில இனிப்புப் பொருட்கள் உள்ளன. இவை கரும்பிலிருந்து எடுக்கப்படும் சர்க்கரையைப் போன்று உடலுக்கு எந்த பாதிப்பையும் தருவதில்லை என்று கூறப்படுகிறது. அந்த இனிப்புகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

1. தேங்காய் சர்க்கரை: தென்னை மரத்தின் மூலப் பொருட்களிலிருந்து  தயாரிக்கப் படும் இது, பலவித ஊட்டச் சத்துக்களைக் கொண்டது. குறைந்த கிளைசெமிக் பண்புகள் இதில் உள்ளன. இரும்பு, கால்சியம், பொடாசியம், ஜிங்க் போன்ற சத்துக்களைக் கொண்டது. சாதாரண சர்க்கரையின் கிளைசெமிக் அளவு 60 முதல் 65 வரை இருக்கும். தேங்காய் சர்க்கரை குறியீட்டில் 35 ஆகும். எனவே, நீரிழிவு நோயாளிகள் கூட தேங்காய் சர்க்கரையை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். இதில் உள்ள இன்சுலின் இரத்தத்தில் குளுக்கோஸை உறிஞ்சுவதை குறைக்க உதவுகிறது.

பேரீச்சை
பேரீச்சை

2. பேரீச்சை: ஊட்டச்சத்து நிறைந்த இது. சர்க்கரைக்கு மாற்றாக பல உணவுப் பொருட்களில் சேர்க்கப்படுகிறது. இரும்புச் சத்து மிகுந்த பேரீச்சை இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைப்பதிலும் பெரும் பங்காற்றுகிறது.

சைலிட்டால்
சைலிட்டால்4nadia

3. சைலிட்டால் (xylitol): சர்க்கரைக்கு மாற்றான இது, நார்மல் சர்க்கரையைப் போன்று பல் சொத்தை ஏற்படுத்தாது. அது மட்டுமின்றி, டயட்டில் உள்ளவர்களுக்கு ஏற்ற சர்க்கரை இது. இதில் கலோரிகள் மிகக் குறைவாக உள்ளது. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை உயர்த்தாமல் கட்டுக்குள் வைக்கும்.

சீனித் துளசி
சீனித் துளசி

4. சீனித் துளசி (stevia): சீனித் துளசி என்ற இந்தச் செடி இனிப்புத் தன்மை வாய்ந்தது. இதன் இலையைக் காய வைத்து அரைத்து நார்மல் சர்க்கரை போல் பயன்படுத்தலாம். சிலர் இதன் இலைகளை டீ, காபி இவற்றுக்கும் பயன் படுத்துவார்கள். சாதாரண சர்க்கரையை விட 300 மடங்கு இனிப்பு கொண்டது இது.

மாங்க் பழம்
மாங்க் பழம்

5. மாங்க் பழம் (monk): எலுமிச்சை வகையைச் சேர்ந்த இது, பிரத்யேகமாக சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற பழமாகும். சர்க்கரையை விட 150 மடங்கு இனிப்பு சுவை கொண்டது. உணவுப் பண்டங்களில் இதைப் பயன்படுத்த இனிப்புச் சுவை அட்டகாசமாக இருக்கும். ஆனாலும் இது குறைந்த கலோரிகளைக் கொண்டதாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com