வைர நகைகளை எந்த ராசிக்காரர்கள் அணியக் கூடாது தெரியுமா?

Diamond
வைரம்
Published on

லகின் மிக விலை உயர்ந்த ஆபரணம் வைரம். இந்தியாவில் ஐதராபாத் அருகில் அமைந்துள்ள கோல்கொண்டா பக்கத்தில் வஜ்ரகரூர் என்ற இடத்தில்தான் உலகிலேயே முதன் முதலாக வைரம் கண்டுபிடிக்கப்பட்டது. கி.மு. 8ம் நூற்றாண்டில் வஜ்ரகரூரிலிருந்து கலிங்க நாடு வழியாக அரேபிய நாடுகளுக்கு வைரம் ஏற்றுமதி செய்யப்பட்டது.

இந்தியாவில் மத்தியப்பிரதேச மாநிலம் பன்னா என்ற இடத்தில் உள்ள வைரச் சுரங்கத்தில் இருந்து வைரம் தோண்டி எடுக்கப்படுகிறது. வைரத்தின் தாயகமான இந்தியாவில்தான் அவற்றை பட்டை தீட்டும் முறையும் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.

பட்டை தீட்டிய வைரக்கல்லில் எந்தப் பொருளை வைத்து தேய்த்தாலும் உரசினாலும் கீறல் விழாது. இதற்கு வைரத்தின் கடினத்தன்மைதான் காரணம். வெள்ளை, மஞ்சள், பழுப்பு, சாம்பல், பச்சை, ஆரஞ்சு, இளம் சிவப்பு, நீலம், வெளிர் பச்சை, வைல்ட் போன்ற நிறங்களில் வைரங்கள் கிடைக்கின்றன. முழுமையான கறுப்பு நிறத்திலும் வைரம் கிடைக்கிறது.

பூமியிலிருந்து கிடைக்கும் எல்லா வைரங்களும் நகை செய்யப் பயன்படுவதில்லை. தொழிற்நுட்பத் துறைகளில் இதன் பயன்பாடு உள்ளது. வைரம் என்பது நன்றாக ஒருங்கிணைந்த கார்பன் மூலக்கூறுகளால் ஆனது. கிராபைட் என்றும் வைரம் அறியப்படுகிறது. இந்தியாவில் கிடைத்த மிகப்பெரிய வைரம் கோஹினூர் வைரம்.

ஜோதிட சாஸ்திரப்படி மேஷம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீன ராசிக்காரர்கள் வைரம் அணிவது நல்ல பலன்களைத் தராது என்று ஜோதிடர்கள் கூறுவர். அதேபோல், கரும்புள்ளிகள் உள்ள வைரத்தை அணியக் கூடாது. தோஷம் என்று சிலர் அணியத் தயங்குவார்கள்.

இதையும் படியுங்கள்:
சென்னை மக்கள் தாகம் தீர்க்கும் பூண்டி நீர்த்தேக்கத்தின் வரலாறு தெரியுமா?
Diamond

நன்கு பரிசோதித்து வாங்கும் வைரம் எந்தக் கெடு பலன்களையும் தராது. 0.2 கிராம் முதல் 200மி.லி. கிராம் வரை 1 கேரட் என வைரம் அளவிடப்படுகிறது. 4C என்றழைக்கப்படும் முறையில் தரத்தை குறிப்பிடுவார்கள். cut, clarity, colour and carat வைரம் வாங்கும்போது தங்கத்தின் மதிப்பு, வைரக்கல்லின் எடை, கேரட் என அளவிடப்படுகிறது.

நன்கு அறிமுகமான கடையில் வைர நகைகளை வாங்க சிறப்பாக இருக்கும். தற்போதெல்லாம் அனைவரும் வாங்கும்வண்ணம் மெஷின் கட் வைர நகைகள், லைட் வெயிட் வைர நகைகள், அமெரிக்கன் டைமண்ட் என நம் மனதிற்கும், பணத்திற்கும் ஏற்றவாறு செலக்ட் பண்ணலாம். எனவே வைரம் வாங்கி அழகை கூட்டுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com