நமது நிரந்தரமான வாழ்க்கைத் துணை யார் தெரியுமா?

Permanent life partner
Permanent life partner
Published on

வாழ்க்கையில் எல்லோருமே நல்ல Life partner வர வேண்டும் என்று ஆசைப் படுவது சகஜம். ஆனால், கணவரோ, மனைவியோ, நண்பர்களோ, பெற்றோர்களோ அல்லது குழந்தைகளோ நம்முடைய நிரந்தரமான மற்றும் உண்மையான partner கிடையாது என்று சொன்னால் நம்புவீர்களா? அப்படி என்றால் நம்முடைய மற்றும் நமக்கான நிரந்தரமான பார்ட்னர் யார் தெரியுமா? சற்று யோசித்துப் பாருங்கள், உண்மை புரியும்.

கடவுள் நம் மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எதை நமக்குப் பார்ட்னராகக் கொடுத்தார் என்று? நம் மனம்தானே எல்லாவற்றிற்கும் காரணமாக இருக்கிறது. மன உளைச்சல், மன அழுத்தம், இரத்த அழுத்தம், தூக்கமின்மை, stress, heart attack போன்ற அத்தனை வியாதிகளுக்கும் நம்முடைய மனம்தான் காரணம். இந்த மனத்தை சரியாக, ஆரோக்கியமாக வைத்திருக்க என்ன வழி? நம்முடைய mental health நன்றாக இருக்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?

இதையும் படியுங்கள்:
அமேசானில் அதிகமாக விற்பனையாகும் டாப் 5 இன்வெர்ட்டர்கள்! 
Permanent life partner

இதற்காகத்தானே கடவுள் மனதை காப்பாற்றி குடி இருப்பதற்காக ஒரு அழகான உடல் என்கிற பார்டனரை நம் எல்லோருக்கும் கொடுத்திருக்கிறார். நம் உடல்தான் நம்முடைய நிரந்தரமான பார்ட்னர். உடல் உறுதியாக இருந்தால் உள்ளமும் உறுதியாக இருக்கும். உடலை சரியாகப் பேணாவிட்டால் உடல் ரீதியான வியாதிகள் முதலில் வரும். அதன் காரணமாக நாளாக நாளாக மனம் பாதிக்கபடும். மனம் பாதிக்கப்பட்டால் ஒன்றன் பின் ஒன்றாக பல வியாதிகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வரும்.

ஆரோக்கியமான உடலைப் பேண நல்ல பழக்க, வழக்கங்களையும், நல்ல சத்தான உணவுகளை உண்ணும் முறையையும், சுத்தமான, சுகாதாரமான சுற்றுச் சுழலையும் கடைபிடிக்க வேண்டும். தினமும் கடைகளில் விற்கும் junk foodஐயும் எண்ணெய் அயிட்டங்களையும் சாப்பிடுவதால் உடல்நிலை கண்டிப்பாக பாதிக்கப்படும். நம் உடலை நாம் கவனிக்கவில்லை என்றால் யார் கவனிப்பார்கள்?

முதலில் நாம் நமக்கென்று கொடுக்கப்பட்ட இந்த உடல் என்கிற பார்டனரை ஒழுங்காக வைத்துக்கொண்டால் போதும். தானாகவே நம் வாழ்க்கையில் பங்களிக்க உதவும் நல்ல பார்டனர்கள் நமக்குக் கிடைப்பார்கள்.

சரி, உங்களுக்குத் திருமணமாகி நல்ல மனைவியோ அல்லது கணவரோ கிடைத்து விட்டார்கள். மேலும், நல்ல பெற்றோர்களும் இருக்கிறார்கள் என்று வைத்துகொள்வோம். இப்படிப்பட்ட ஒரு நல்ல இல்வாழ்க்கை கிடைத்தும் நீங்கள் கண்டபடி மது அருந்தியும் புகை பிடித்தும் கொண்டிருந்தால் என்ன லாபம்? இஷ்டம் போல் சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டு உடற்பயிற்சியும் செய்யாமல் எந்த வேலையும் செய்யாமல் உடல் பருமன் ஆகிக்கொண்டே போனால் என்னவாகும்? ஆண், பெண் இருவருக்குமே இந்தக் கேள்வி பொருந்தும்.

இதையும் படியுங்கள்:
மண் பானை வாங்கப் போறீங்களா? இவையெல்லாம் கவனத்தில் இருக்கட்டும்!
Permanent life partner

நீங்கள் பிறந்த அன்று கடவுள் உங்களுக்குக் கொடுத்த உடலாகிய அந்த பார்ட்னரை நீங்கள் சரியாக வைக்கவில்லை என்றால், பிறகு நல்ல இல்லறத் துணை கிடைத்தும் என்ன பிரயோஜனம்? உங்கள் உடல் நன்றாக இருந்தால்தானே நீங்கள் அவர்களோடு இணைந்து சந்தோஷமாக வாழ முடியும்.

நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், உங்களின் உற்ற துணை உங்கள் கூடவேதான் இருக்கிறார். உங்களுடைய இல்லற துணைவியோ, நண்பர்களோ அல்லது பெற்றோர்களோ இறந்து விட்டால் கூட உங்களின் நிரந்தர துணையாகிய இந்த உடல் உங்களின் உயிர் உள்ள வரை இருக்கும். உடலைப் பாதுகாத்தால் மனதைக் காப்பாற்றுவதோடு, நம் உயிரையும் பாதுகாக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com