‘நாய்கள் போல வேலை செய்ய வேண்டும்’ என்று அமெரிக்கர்கள் ஏன் சொல்கிறார்கள் தெரியுமா?

வீட்டு வேலை செய்யும் நாய்கள்
வீட்டு வேலை செய்யும் நாய்கள்https://tamil.abplive.com
Published on

டினமாக உழைப்பவர்களை, 'மாடு மாதிரி வேலை செய்கிறார்கள்' என்று சொல்லும் வழக்கம் உண்டு. ஆனால் அமெரிக்கர்கள், ‘நாய்கள் போல வேலை செய்ய வேண்டும்’ என்கிறார்கள். ஆகஸ்ட் 5ம் தேதியான இன்று, 'நாய் போல வேலை செய்யும் நாள்' என்று கொண்டாடுகிறார்கள். அயராது தனது கடமைகளைச் செய்யும் நாய்களைப் போல, கடினமாக உழைப்பவர்களை கௌரவப்படுத்துவதற்கான நாளாக, ஆகஸ்ட் 5 அமெரிக்காவில் அர்ப்பணிக்கப்படுகிறது.

இந்த நாளின் பொருள் மற்றும் முக்கியத்துவம்: உடன் பணிபுரியும் ஊழியர்கள், சக பணியாளர்கள் ஆகியோரின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை பாராட்டுவதற்கு இந்த நாள் கொண்டாடப்படுகிறது. உற்பத்தி மற்றும் இலக்குகளை அடைய அவர்களைத் தூண்டும் நாளாக இது இருக்கும். விடாமுயற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் அதேநேரம், நகைச்சுவையையும் வேடிக்கையையும் இணைத்து இந்த நாளை இலகுவாகக் கொண்டாடுகிறார்கள்.

நாய்கள் போல உழைக்க வேண்டும் என்பதற்கான நோக்கம் என்ன?

அர்ப்பணிப்பு உணர்வு: பொதுவாக, நாய்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட வேலையை மிகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன், விசுவாசத்துடன் செய்வது வழக்கம். தேடுதல் மற்றும் மீட்பு, வீட்டை காவல் காத்தல், ஆடு மாடுகளை மேய்த்தல், போலீஸ் பணியில் இருப்பவர்களுக்கு உதவுதல் போன்றவற்றை திறம்பட செய்கின்றன. பெரும்பாலும் மனிதர்கள் மற்றும் பிற விலங்குகளுடன் நெருக்கமாக வேலை செய்கின்றன. குழு பணி மற்றும் நம்பகத்தன்மையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றன.

கடமையில் கவனம்: வேலை செய்யும் நாய்கள் பெரும்பாலும் தங்கள் பணிகளில் தீவிர கவனம் செலுத்துகின்றன. கவனச் சிதறல் இல்லாமல் சிக்கலான பணிகளை நாய்கள் செய்வது போல மனிதர்களும் தங்களுடைய இலக்கை அடைய தீவிரமாக உழைக்க வேண்டும். நாய்கள் போல தடைகளைத் தாண்டி உறுதியுடன் இருப்பதும் விடாமுயற்சியுடன் வேலை செய்வதும் பணியிடத்தில் நல்ல பெயரை சம்பாதித்துத் தரும். சிக்கல்களை தீர்ப்பதற்கும் நெகழ்ச்சித் தன்மைக்கும் வழி வகுக்கும்.

ஒத்துழைப்பு: வேலை செய்யும் நாய்கள் பெரும்பாலும் அணிகளாக அல்லது ஜோடிகளாக வேலை செய்கின்றன. இது ஒத்துழைப்பின் மதிப்பைக் காட்டுகிறது. கூட்டு முயற்சியை விளக்குகிறது. பயனுள்ள குழுப்பணியானது ஆதரவான பணிச்சூழலுக்கு வழிவகுக்கும் மற்றும் புதுமையான தீர்வுகளுக்கு இட்டுச் செல்லும்.

வளைந்து கொடுக்கும் தன்மை: வேலை செய்யும் நாய்கள் பெரும்பாலும் வெவ்வேறு பணிகள் மற்றும் சூழல்களுக்கு ஏற்றதாக இருக்கும். பணியிடத்தில் தகவமைத்துக் கொள்வது, மாறிவரும் சூழ்நிலைகள் மற்றும் இடத்திற்கு ஏற்ப அவற்றை திறமையாகக் கையாளும். அதுபோல மனிதர்கள் தங்கள் பணியிடத்தில் புதிய விஷயங்களை, மனிதர்களை, வேலைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
இரவில் பழங்கள் சாப்பிடுவதன் நன்மை, தீமைகள்! 
வீட்டு வேலை செய்யும் நாய்கள்

புதிய திறன்களை கற்றல்: நாய்கள் பல்வேறு பணிகளுக்கு பயிற்றுவிக்கப்படுகின்றன. அவை தொடர்ந்து கற்றுக்கொள்கின்றன. அதுபோல மனிதர்களும் தொடர்ந்து கற்றுக்கொண்டு புதிய திறன்களைப் பெற்று தனக்கும் தான் சார்ந்த நிறுவனத்திற்கும் முன்னேற்றத்தையும் வாய்ப்புகளையும் அளிக்க வேண்டும்.

வேலை மற்றும் ஓய்வு சமநிலை: வேலை செய்யும்போது கடினமாக உழைக்கும் நாய்கள் ஓய்வெடுக்கும்போது அவற்றை சரியாகச் செய்கின்றன. ஓய்வின் முக்கியத்துவத்தை அவை நமக்குக் கற்றுக் கொடுக்கின்றன. கடினமாக வேலை செய்துவிட்டு இரவில் நன்றாக ஓய்வெடுத்தால்தான் அடுத்த நாள் வேலையை திறம்பட செய்ய முடியும்.

வேலையை சுவாரசியமாக்குதல்: நாய்கள் சுவாரஸ்யமான செயல்பாடுகளுடன் பணிபுரியும். அதுபோல, மனிதர்களும் தங்களது பணியை, சந்தோஷமாக விளையாட்டுத்தனமான மனநிலையில் செய்யும்போது அந்த வேலை சிறப்பாக இருக்கும்.

உடல் மற்றும் மன ஆரோக்கியம்: வேலை செய்யும் நாய்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதால் அதன் உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும். மனிதர்களும் சவாலான பணிகளில் ஈடுபடும்போது, உடல் ஆரோக்கியம் கிட்டுவதுடன், மனதளவில் கூர்மையாக வைத்திருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com