நாய்கள் நன்றியுள்ள ஜீவன் என்பது அனைவருக்கும் தெரியும். பாசத்துடனும் பரிவுடன் பழகும் நாய்கள் நமக்காக எதையும் செய்யும் குணம் கொண்டவை. உரிமையாளருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவை அவரையே சுற்றி சுற்றி வரும். தங்கள் உரிமையாளர்கள் இறந்தால் அவர்கள் நினைவாகவே ஏங்கி தவிக்கும் நாய்களை பார்க்கலாம். இப்படிப்பட்ட செல்லப்பிராணியான நாய்கள் சில வினோத பழக்கங்களையும் கொண்டுள்ளது.
நாய்கள் அடிக்கடி செருப்பை கடித்து விளையாடுவதையும், துணிகளை இழுத்து கடித்து கிழித்து விளையாடுவதையும் பார்த்திருக்கிறோம். அவற்றின் இந்த செயல் சில சமயம் நமக்கு எரிச்சலையும் கோபத்தையும் உண்டுபண்ணும். ஆனால், நாய்களின் இந்த செயலுக்குப் பின்னால் அது அந்த நபரை நேசிப்பதுதான் காரணம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
சில சமயத்தில் கடுமையான பசியின் காரணமாகவும் நாய்கள் காலணிகளை கடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளன. சில சமயம் நாய்களின் வயிற்றில் புழுக்கள் இருந்தாலும் அவை அடிக்கடி செருப்புகளை கடிக்கும். ஆனால், நாய்க்குட்டிகளோ விளையாட்டுக்காக செருப்புகளை கடிப்பது, துணிகளை கடித்து கிழிப்பது என்று விளையாட்டுத்தனமாக ஈடுபடும்.
நாய்கள் பொதுவாக இரவு நேரங்களில் கார், பைக், சைக்கிள் ஆகியவற்றை துரத்தும். ஷூ, செருப்பு போன்ற காலணிகளை கடிப்பதற்கு காரணம், அவை அந்த நபரை நேசிப்பதுதான். செருப்புகளுக்கு சொந்தக்காரர்கள் அந்த நாய்களை விட்டுப் பிரிந்து விட்டாலும் அவை செருப்பை கடித்து தனது பாசத்தைக் காட்டும்.
அவர்களின் நறுமணம் அந்த வளர்ப்பு நாய்களுக்குப் பிடித்திருப்பதால் அதை தக்கவைத்துக் கொள்வதற்காக இதுபோன்ற செயல்களில் அவை ஈடுபடுகின்றன என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.