வாசற்படியில் ஏன் உட்காரக்கூடாது தெரியுமா?

Lifestyle articles
doorstep
Published on

லைவாசல் படியில் உட்காரக்கூடாது என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவார்கள். ஏன் உட்காரக்கூடாது என்று கேட்டால் சரியான பதில் கிடைக்காது. உட்காரக்கூடாது என்றால் உட்காரக்கூடாதுதான் என்று கண்டிப்புடன் கூறுவார்கள். இதற்கு பல காரணங்கள் உள்ளன.

தலைவாசல் என்பது வீட்டில் நுழைவுப் பகுதி. இது தெய்வத்தின் ஆசிர்வாதம் இருக்கும் இடம் என்றும், படியில் உட்காருவது தெய்வத்தை அவமதிப்பதாகவும் கருதப்படுகிறது. தலைவாசல் கதவில் குலதெய்வம் வாசம் செய்வதாக ஐதீகம். தலை வாசலில் அஷ்டலஷ்மியும் வாசம் செய்வது போல் குலதெய்வமும் குடியிருப்பதாகவும் சாஸ்திரங்களில் கூறப்படுகிறது.

அதனால்தான் நம் வீட்டு பெரியவர்கள் வீட்டின் கதவை சத்தம் இல்லாமல் திறக்கவும், மூடவும் சொல்வார்கள். கதவில் இருந்து சத்தம் வராமல் இருப்பதற்கு அடிக்கடி எண்ணெய் விட்டு சுலபமாக மூடும்படி வைப்பார்கள்.

வீட்டில் குடியிருப்பவர்கள் வீட்டிற்குள் நுழையும் முன்பு குடும்ப தேவதைகளையும், தெய்வங்களையும் வணங்குவதற்கு ஏற்றவாறு முன்பு உயரம் குறைவான நிலை கதவுகள் வடிவமைக்கப்பட்டது. வீட்டிற்குள் நுழையும் பொழுது தலையை குனிந்துகொண்டு உள்ளே வரும்படிதான் கதவுகள் அமைக்கப்பட்டிருக்கும்.

வீட்டு வாசல் படியை மிதிக்காமல் தாண்டித்தான் உள்ளே செல்ல வேண்டும். வீட்டின் நிலை வாசல் படிகளுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு வழிபடுவதும் இந்த தேவதைகளுக்காகத்தான். தெய்வீக சக்தி நிறைந்த நிலை வாசல் படியை மிதிக்காமலும், அதில் உட்காராமலும் இருக்க வேண்டும். வீட்டின் தலை வாசலில் தலை வைத்து படுக்கக்கூடாது என்றும் அப்படி செய்தால் தரித்திரம் ஏற்படும் என்றும் கூறப்படுவதால் தலைவாசல் படியில் தலை வைத்து படுக்கக்கூடாது.

இதையும் படியுங்கள்:
உங்கள் குழந்தையின் பேச்சு தாமதமாகிறதா? பெற்றோர் செய்ய வேண்டியது என்ன?
Lifestyle articles

தலைவாசல் என்பது ஒரு புனிதமான இடம். அதை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதேபோல் கதவின் தாழ்ப்பாள்களை ஆட்டுவதோ சத்தப்படுத்துவதோ கூடாது என்பார்கள். வீட்டின் தலை வாசலின் இரண்டு பக்கங்களிலும் விளக்கேற்றி வைப்பதும் பல காலங்களாக இருந்து வரும் வழக்கமாகும். இதற்கு காரணம் இரு புறங்களிலும் கும்ப தேவதைகள் அமர்ந்திருப்பதாகவும், அவர்களை குளிர்விக்கவே அங்கு விளக்கேற்றி வைக்கவேண்டும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

கோவில்களில் வாசல் படியை மிதிக்காமல் எப்படி தாண்டி உள்ளே செல்கின்றோமோ அதுபோல்தான் வீட்டின் நிலைப்படிகளையும் மிதிக்காமல் தாண்டி செல்லவேண்டும். படியில் உட்காருவது, கால் வைத்து நிற்பது, அங்கு நின்று தலை வாருவது போன்றவை வீட்டில் தரித்திரத்தை உண்டாக்கும். பண வரவு குறையும், மனநிம்மதிகெடும் என்பார்கள்.

இதையும் படியுங்கள்:
பூஜை அறையில் இத வச்சா போதும்… உங்கள் வாழ்க்கையின் கஷ்டங்கள் நீங்க ஒரு ரகசியம்!
Lifestyle articles

எனவே நிலைப்படியில் படுக்கவோ, உட்காரவோ, நிற்கவோ செய்வதை தவிர்க்கவும். அத்துடன் செவ்வாய், வெள்ளிக்கிழமை நாட்களில் சாம்பிராணி தூபம் போடுவது விஷ ஜந்துக்கள் அண்டாமலும், காற்றில் உள்ள மாசுகளை அகற்றவும் உதவும். அதேபோல் வீட்டில் உள்ளவர்கள் ஆரோக்கியமாக இருக்க மஞ்சளில் தோய்த்த நூலில் மாவிலைகளை கட்டி நிலைப்படியின் மேல் மாவிலைத் தோரணம் தொங்க விடுவதும் நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com