மன உணர்வுகளை மறைக்காமல் வெளிப்படுத்தும் மனிதக் கைகளின் மகத்துவம்!

கைகளின் மகத்துவம்
கைகளின் மகத்துவம்https://www.gainesville.com
Published on

மது கைகள் மன உணர்வுகளை வெளிப்படுத்துவதில் மிகவும் ஆற்றல் வாய்ந்த கருவிகளாக விளங்குகின்றன. அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. திறந்த மற்றும் மூடிய கைகள்: ஒருவரிடம் பேசும்போது இரண்டு கைகளும் திறந்த நிலையில் இருந்தால் அது அவரது  நேர்மை மற்றும் நம்பிக்கையை குறிக்கிறது. கைவிரல்கள் உள்ளங்கையில் அழுந்த பதிந்து மூடி இருந்தால், ஒருவர் பதற்றம், கோபம் போன்ற நிலைகளில் இருக்கிறார் என்பதைக் குறிக்கிறது.

2. கை அசைவுகள்: ஒருவரின்  குறைந்தபட்ச கை அசைவுகள், சலிப்புற்ற, ஆர்வமின்மையையும், கைகளை பல விதங்களில் ஆட்டிப் பேசுவது  உற்சாகம், ஆர்வத்தைக் குறிக்கிறது.

3. தொடுதல்: மற்றவர்களை தொடும் விதத்திலேயே உணர்ச்சிகளை வெளிப்படுத்தலாம். மென்மையாக தொடுதல் என்பது பாசம், ஆறுதல் அல்லது அனுதாபத்தை வெளிப்படுத்தும். அதேசமயம் உறுதியான தொடுதல் மன உறுதி, அல்லது ஆக்கிரமிப்பை வெளிப்படுத்தும். பிறரின் கைகளைப் பிடித்துப் பேசுவது, அவர் மேல் இருக்கும் பாசம், அன்பு மற்றும் ஆதரவை வெளிப்படுத்தும் உலகளாவிய அடையாளமாகும். இது மக்களுக்கு இடையே ஆறுதல் மற்றும் உணர்ச்சிப்பிணைப்புகளை வலுப்படுத்தும்.

4. முகத்திற்கும் கைகளுக்கும் உள்ள தொடர்பு: அடிக்கடி தனது கன்னம், நெற்றியைத் தொடுவது அல்லது தேய்ப்பது போன்ற செயல்களில் ஒருவர் ஈடுபட்டால் அவர் கவலை, மன அழுத்தம் அல்லது ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார் என்று பொருள். ஒரு கையால் வாயை மூடுவது ஆச்சரியம், அதிர்ச்சி போன்ற மனநிலையைக் குறிக்கிறது. பேசும்போது மூக்கு அல்லது காதை தொட்டால் அவர் பொய் சொல்கிறார் அல்லது அசௌகர்யமாக உணர்கிறார் என்பதை உணர்த்துகிறது.

5. கைகளின் நிலை: பேண்ட் பாக்கெட்டுகளில் கைகளை நுழைத்துக்கொண்டு பேசினால் அவர் பதற்றம், கூச்ச மனநிலையில் இருக்கிறார் என்பதை குறிக்கிறது.  ஆனால், சூழலைப் பொறுத்து இது சாதாரணமான ஒரு செய்கையாகக்  கூட இருக்கலாம். முதுகுக்குப் பின்புறம் கைகளை கட்டிக்கொள்வது நம்பிக்கை, கட்டுப்பாடு போன்றவற்றை குறிக்கும். அதேசமயம் அந்த நபர் அதிகாரம் மிக்கவர். பிறர் மீது தனது அதிகாரத்தைப் பயன்படுத்த விரும்புவார்.  ஒரு விஷயத்தை பிறரிடம் இருந்து மறைக்க விரும்புகிறார் அல்லது அந்த சூழ்நிலையில் இருந்து தன்னை தூர விலக்கி வைக்க விரும்புவதையும் குறிக்கிறது.

இதையும் படியுங்கள்:
தாய்ப்பால் கட்டிக்கொள்வதன் காரணமும் நிவாரணமும்!
கைகளின் மகத்துவம்

கை முஷ்டியை இறுக்கிப்பிடிப்பது கோபம் விரக்தி மற்றும் உறுதியின் பொதுவான அறிகுறி ஆகும். இது பிறருடன் உடல் ரீதியான மோதலுக்குத் தயாராக இருக்கிறார் என்பதைக் குறிக்கிறது.

பேசிக்கொண்டிருக்கும்போது மேஜையில் விரல்களால் தட்டுவது, கையில் எதையாவது வைத்து விளையாடுவது போன்றவை ஒருவரின் மனப் பதற்றத்தையும் பொறுமையின்மையையும் குறிக்கும்.

6. கைகுலுக்கும் தன்மை: ஒருவர் உறுதியான கைகுலுக்கல் மூலம் நம்பிக்கை மற்றும் உறுதியின் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார். தளர்வான கைகுலுக்கல் பாதுகாப்பின்மை அல்லது உற்சாகமின்மையை குறிக்கிறது.

7. இரண்டு உள்ளங்கைகளையும் தேய்த்தல்: ஒருவர் பேசும்போது பரபரவென  தனது இரண்டு உள்ளங்கைகளையும் தேய்த்துக் கொண்டால் அவர் தன்னை அமைதிப்படுத்த முயற்சிக்கிறார் அல்லது செய்யப்போகும் வேலைக்கு ஏற்ப  மனதளவில் தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதைக் குறிக்கிறது.

8. படைப்புத்திறன்: ஓவியம் வரைதல், இசைக்கருவிகளை வாசித்தல் போன்ற ஆக்கபூர்வமான செயல்களில் கைகளை பயன்படுத்துவது, தீவிரமான தைரியமான, உற்சாகமான மனநிலையை குறைக்கிறது. மேலும், ஒருவர் கோபமாக இருக்கும் போது கூட இந்த செயல்களில் ஈடுபடலாம். மென்மையான, கவனமான அசைவுகள் அமைதி அல்லது சோகத்தை குறிக்கிறது. கைகளின் நுட்பமான இந்த குறிப்புகளை புரிந்துகொள்வது மற்றவர்களின் உணர்ச்சிகளை சிறப்பாக விளக்குவதற்கும் சொந்த உணர்வுகளை மிகவும் திறம்பட வெளிப்படுத்துவதற்கும் உதவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com