
எலுமிச்சை பழம் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களின் சிறந்த ஆதாரமாகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது. உடல் எடையைக் கட்டுப்படுத்தவும், உடலில் நீர்ச்சத்தை பராமரிக்கவும் உதவுகிறது. இது அஜீரணம், மலச்சிக்கல், காய்ச்சல் போன்ற பல நோய்களிலிருந்தும் பாதுகாப்பளிக்கிறது.
இது போக எலுமிச்சை பழம் தோல் பராமரிப்பு, முடி வளர்ச்சி என பல வகை பிரச்சனைகளுக்கு உதவுகிறது. ஜோதிடத்தின் படி எலுமிச்சை பழம் முக்கியமானதாக இருப்பதால் திருஷ்டி கழிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இப்படிப்பட்ட எலுமிச்சை பழத்தை நாம் பழமாகவும், காயாகவும் மட்டுமே பயன்படுத்துவோம். அது காய்ந்து கருகிய பிறகு தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் இனி அந்த பழத்தை இப்படி பயன்படுத்தலாம் என்று தெரிந்தால் நீங்கள் தூக்கி எறியமாட்டீர்கள்.
பொதுவாக அனைவரும் எலுமிச்சை பழத்தை உபயோகித்து விடுவார்கள். பெரும்பாலும் பூஜை அறைகளில் வைக்கும் எலுமிச்சை பழம் மற்றும் கோயில்களில் இருந்து பெறப்படும் எலுமிச்சை பழங்கள் தான் இது போல் காய்ந்துவிடும். சிலர் கவனத்தில் கொள்ளாமல் இருந்தாலும் வீட்டில் உள்ள எலுமிச்சை பழங்கள் காய்ந்துவிடும். அதை இனி தூக்கி எறியாமல் இப்படி பயன்படுத்துங்கள்.
முதலில் காய்ந்த பழங்களை கழுவி விட்டு தண்ணீரில் கொதிக்க விடுங்கள். பிறகு, அந்த எலுமிச்சை பழங்களை இரட்டை துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து கொள்ளுங்கள். தோலுடனே அரைத்து கொள்ளலாம். அதையடுத்து, கொதிக்க வைத்த தண்ணீருடன், இந்த எலுமிச்சை மிக்சை சேர்த்து கிளறவும். பிறகு அதை வடிகட்டி எலுமிச்சை தண்ணீராக மற்றும் எடுத்து வைத்து கொள்ளவும்.
இந்த கலவை தண்ணீரில் 2 ஸ்பூன் பேக்கிங் சோடா, ஒரு ஸ்பூன் ஷாம்புவை கலந்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் உங்க வீட்டில் உள்ள நாள் படிந்த கரையை கூட இந்த தண்ணீர் நொடியில் நீக்கிவிடும். டாய்லெட், வாஷிங் மெஷின், கிச்சன் சிங்க் என அனைத்து கரைகளும், துரு கரைகளும் கூட இந்த தண்ணீர் நீக்கிவிடும். நிச்சயம் ட்ரை பண்ணி பாருங்க..