கண்ணாடியாக இல்லாமல், சூரியனாக மாறுங்கள்: உங்களை உதறித் தள்ளியவர் உருகிப்போக 5 சாணக்கிய விதிகள்!

5 chanakya Neeti
chanakya Neeti
Published on

ல மனிதர்கள் எப்போதும் பிறருடைய அன்புக்காக ஏங்கித் தவிக்கின்றனர். பிரிந்து சென்ற ஒருவருக்காக ஏங்கி, அதனால் மனதில் வலியுடன் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். சமூகத்தில் அவர்களுடைய சுயமரியாதை சிதைந்து போகும் நிலையிலிருந்து மீண்டு வரவும், பிரிந்து போனவர் வருந்தவும் சாணக்கியர் ஐந்து விதிகளைச் சொல்கிறார்.

1. ஏங்குவதை நிறுத்துதல்: ஒருவர் நம்மை விட்டுப் பிரிந்து சென்ற பின்பு அவருக்காக ஏங்கி நம்முடைய நேரம், அன்பு, உழைப்பு அனைத்தையும் வீணடிப்பதை நிறுத்த வேண்டும். அது போகாத ஊருக்கு வழி தேடுவதைப் போல இருக்கும். பிரிந்து சென்றவர் திரும்பி வருவார் என்று நினைத்து அவருக்காக அழாமல் மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும். ஏங்கித் தவிக்கும் நபர் வர மாட்டார் என்பதைப் புரிந்து கொண்டு உங்களுடைய வேலையை கவனிக்கத் தொடங்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
ராத்திரி 12 மணிக்கு மேல பெண்கள் கூகுளில் தேடுவது இதைத்தானா? வெளியான சுவாரஸ்ய ரிப்போர்ட்!
5 chanakya Neeti

2. ஓட்டைப் பானையில் தண்ணீர் பிடித்தல்: பானையில் சிறிய ஓட்டை இருந்தாலும் அதில் எத்தனை தண்ணீர் இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக நீர் வெளியேறி வெற்று பானையாகத்தான் இருக்கும். அதுபோல, உங்கள் மீது அன்பு இல்லாதவர்களுக்கு டன் கணக்காக அன்பு, கருணை போன்றவற்றை நீங்கள் செலுத்தினாலும் ஓட்டைப் பானையில் இட்ட நீர் போல வீணாகத்தான் போகும். மனதில் உள்ள ஏக்கம் என்கிற ஓட்டையை சரி செய்து சுயமரியாதை என்கிற தண்ணீரால் அதை நிரப்ப வேண்டும். பிடித்ததை செய்தல், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுதல், தேவையான நேரத்தில் வேண்டாம் என்ன சொல்லக் கற்றுக் கொள்வது போன்றவை மனதின் வெற்றிடத்தை அடைக்கும்.

3. கண்ணாடியாக அல்லாமல் சூரியனாக இருங்கள்: ஒருவரது சந்தோஷத்தையும் துக்கத்தையும் அடுத்தவரின் பாராட்டு அல்லது அங்கீகாரம் தீர்மானிக்காது. கண்ணாடிக்கு சொந்த வெளிச்சம் இல்லை. ஆனால், சூரியனுக்கு சொந்தமாக நெருப்பு உள்ளது. அது உலகத்திற்கே ஒளி வழங்குவது போல நமக்கான மகிழ்ச்சியையும் ஒளியையும் நாமேதான் உருவாக்க வேண்டும். வாழ்க்கையில் சிறிய இலக்குகளை அமைத்தல், புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளுதல், பிறருக்கு உதவி செய்வது போன்றவற்றின் மூலம் நமக்கு நாமே சொந்த வெளிச்சத்தை உருவாக்கிக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
எண்ணெய் பிசுக்கு படிந்த கடாயை சுத்தம் செய்ய இனி ரொம்ப ஈசிதாங்க!
5 chanakya Neeti

4. ராஜாவைப் போல வாழுங்கள்: தனது தட்டில் பணம், காசு விழாதா என ஏங்கும் பிச்சைக்காரனை போல தன்னிடம் அன்பு செலுத்த மாட்டார்களா என கையேந்தி நிற்பதை போலத்தான் சிலர் இருக்கிறார்கள். ஒரு ராஜா போல கம்பீரமாக மற்றவர்கள் மரியாதையை சம்பாதித்து, சொந்த ராஜ்ஜியத்தை கட்டி எழுப்ப வேண்டும். அதில் உங்கள் திறமைதான் கருவூலம். நல்ல நண்பர்கள் உங்கள் படை வீரர்களாக இருக்கட்டும், குடும்பம் என்கிற சிம்மாசனத்தில் ராஜ்ஜியத்தை கட்டுங்கள். உங்களை வேண்டாம் என்று விட்டுப் போனவர்கள் திரும்பி வர ஆசைப்பட்டாலும் ஒரு ராஜா போல துரோகிகளை கோட்டைக்குள் அனுமதிக்க வேண்டாம்.

5. பூந்தோட்டத்தை உருவாக்குதல்: சினிமாவில் வருவது போல ஒரு ஹீரோ வந்து உங்கள் கண்ணீரைத் துடைத்து, ஒரு பூ கொடுத்து உங்களை சந்தோஷப்படுத்துவார் என்று காத்திருக்க வேண்டாம். அடுத்தவர் தரும் ஒற்றைப் பூ வாடிவிடும். எனவே, உங்கள் வாழ்க்கையை ஒரு காலி நிலமாக பாவித்து அதை சுற்றிலும் சுயமரியாதை என்ற வேலி அமைத்து, நல்ல பழக்கங்கள் என்ற விதைகளை விதைத்து சந்தோஷம் என்ற சொந்த பூந்தோட்டத்தை உருவாக்க வேண்டும். சொந்த உழைப்பால் உருவான சந்தோஷப் பூந்தோட்டத்தை யாராலும் திருட முடியாது. இந்த 5 சாணக்கிய விதிகளும் உங்களை வேண்டாம் என உதறித்தள்ளிவர்களை மனம் வருந்த வைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com