அறியாமையை எண்ணி அவமானப்பட வேண்டாம்!

Don't be ashamed of ignorance!
Don't be ashamed of ignorance!
Published on

றியாமை என்பது அனைவருக்கும் பொதுவானது. யாரும் எதிலும் தலைசிறந்து விளங்குவதில்லை. எல்லோரும் எல்லாம் அறிந்து இருக்க முடியாது. உதாரணமாக, ஒரு அறிவியல் நிபுணர் அறிவியல் சம்பந்தமானவற்றை அதிகம் அறிந்து இருப்பார். ஆனால், வரலாற்றைப் பற்றி எந்தவிதமான புரிதலும் அவருக்குத் தெரியாது அதேபோல், ஒருவர் வரலாற்றைப் பற்றி மிக நன்றாக அறிந்திருப்பார். ஆனால், இலக்கியம் பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது. சிலர் பொதுவாழ்வில் ஈடுபட்டு இருப்பார்கள். ஆனால், கல்வியின் மகத்துவம் பற்றி எதுவும் அவர்களுக்குத் தெரியாது. ஆனால், அவர்கள் நிறைய பொது செய்திகளை அறிந்து இருப்பர். ஆக, அறியாமை என்பது நபருக்கு நபர், ஆளுக்கு ஆள் வேறுபடும்.

அறியாமை என்பது ஒரு பொருளின் உண்மைத்  தன்மை  அறியாமல், எது நல்லது, எது கெட்டது என்று தெரியாமல் இருப்பதுதான். இந்த அறியாமை  இடத்துக்கு இடம் மாறுபடும். ஆனால், தன்னைப் பற்றியே அறிந்து கொள்ளாமல் இருப்பதுதான் அறியாமையின் உச்சக்கட்டமாகும். அறியாமை, கல்வியறிவு உள்ளவர்களுக்கும் பொருந்தும். நன்றாகப் படித்தவர்கள் கூட, இன்னமும் மூட நம்பிக்கைகளை உண்மை என நம்புகின்றார்கள்.

பழைமையான நம்பிக்கைகளில், வாழ்க்கைக்குத் தேவையான பல கருத்துகள் வாழ்க்கை விதிகளாக உண்டு. ஆனால், எதையும் அறிந்தும் புரிந்தும் ஆராய்ந்தும் பார்த்து, அக்கருத்துகளை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். ஏட்டுக் கல்வி கற்காதவர்கள் பலரிடம், அதிசயத்தக்க வகையில் நுண்ணறிவு காணப்படும். அது, அனைவரிடம் இருக்கும் எனச் சொல்ல முடியாது.

இதையும் படியுங்கள்:
உடல் எடையைக் குறைக்கும் குடம்புளி பானம்!
Don't be ashamed of ignorance!

ஏழை, எளியவர்களுக்கும் மட்டுமே, அறியாமை காணப்படுகின்றது என நம்மவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இந்த அறியாமை படித்தவர்களிடமும் இருக்கத்தான் செய்கிறது. வெளிச்சம் இருட்டை உடனே அகற்றுகிறது. அறியாமை என்னும் இருட்டை நிரந்தரமாக அகற்றுவதற்கு அறிவு வெளிச்சமே தேவைப்படுகிறது.

அதனால் இனிமேல் எனக்கு எல்லாம் தெரியும், நான்தான் பெரியவன், எனக்கு தெரியாத விஷயங்களே இல்லை என்று தயவு செய்து நினைக்காதீர்கள். நமக்கு தெரியாத பல விஷயங்களும் இந்த உலகில் இருக்கத்தான் செய்கிறது. ஒருவேளை அப்படி நீங்கள் நினைத்தால் அதுதான் உங்களின் அறியாமை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com