Kudampuli Drink.
Kudampuli Drink.

உடல் எடையைக் குறைக்கும் குடம்புளி பானம்!

Published on

உடல் எடை இழப்பு என்று வரும்போது, இயற்கையான முறை மற்றும் அதற்கு ஏற்ற உணவுப் பொருட்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்வது நல்லது. அப்படி பெரும்பாலான நபர்களுக்கு தெரியாது ஒரு இயற்கையான பொருள்தான் குடம்புளி. என்ன குடம்புளி பயன்படுத்தி உடல் எடையை குறைக்கலாமா? எனக் கேட்கிறீர்களா?. ஆம் அது சாத்தியம்தான். குடம்புளி பயன்படுத்தி செய்யப்படும் பானத்தைக் குடிப்பது மூலமாக, உடல் எடையை கணிசமாக குறைக்கலாம். சரி வாருங்கள் அதை எப்படி செய்வது எனப் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்

  • 1 குடம்புளிச்சாறு

  • ½ எலுமிச்சை சாறு 

  • 1 பச்சை மிளகாய் 

  • சிறிதளவு புதினா, கொத்தமல்லி

  • 1 கப் தண்ணீர்

  • 1 ஸ்பூன் தேன்

செய்முறை: 

முதலில் ஒரு குடம்புலியை எடுத்து வெந்நீரில் அதை போட்டு, சுமார் 2 மணி நேரம் ஊற வைத்த பின்பு, அதை மிக்ஸியில் போட்டு அத்துடன் மிளகாயையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். 

பின்னர் அதை வடிகட்டி லேசாக உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இறுதியாக அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பொடியாக நறுக்கிய புதினா கொத்தமல்லி இலைகளை போட்டு கலக்கவும். 

இறுதியாக ஒரு ஸ்பூன் தேனைக் கலந்து அப்படியே எடுத்து ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து குடித்துப் பாருங்கள், வேற லெவல் புத்துணர்ச்சியைக் கொடுக்கும். இந்த பானத்தில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் பண்புகள் அதிகம் இருப்பதால், உடலில் உள்ள கொழுப்புகளை அப்படியே கரைத்துவிடும். 

இதையும் படியுங்கள்:
வித்தியாசமான முறையில் மோர்க் குழம்பு.. டிஸ்கோ டான்ஸ் ஆடும் சுவை நரம்புகள்! 
Kudampuli Drink.

மிதமான புளிப்பு சுவை கொண்ட குடம்புளி சாதாரண புளியைக் காட்டிலும் அதிக மருத்துவ குணங்கள் கொண்டதாகும். இவற்றை நாம் தினசரி பயன்படுத்தும் போது, நாம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. ஆனால் இந்த வகை புளிகளை நாம் அதிகம் பயன்படுத்துவதில்லை. இதில் சுமார் 30 சதவீதம் அளவுக்கு ஹைட்ராக்சி சிட்ரிக் அமிலம் உள்ளதால் பல ஆண்டுகள் வரை கெட்டுப் போகாமலே இருக்கும் தன்மை கொண்டதாகும். 

இது உடல் எடையைக் குறைக்க உதவுவது மட்டுமின்றி, உடலில் கொழுப்புகள் தங்காமல் வெளியேற்ற உதவுகிறது. எனவே உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தாராளமாக இவற்றைப் பயன்படுத்தலாம். 

logo
Kalki Online
kalkionline.com