தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும்போது இந்த தவறுகளை மட்டும் செஞ்சிடாதீங்க... ப்ளீஸ்!

Diwali 2025
Diwali 2025
Published on

தீபாவளி! இந்த பேர் கேட்டாலே போதும், நம்ம எல்லாருக்கும் மனசுக்குள் பட்டாசு வெடிக்கும், வாயில் இனிப்பு கரையும். வருகின்ற 2025 அக்டோபர் 20ம் தேதி வரப்போகும் இந்த ஒளித் திருநாளுக்காக நாமெல்லாரும் ஆவலாக காத்திருக்கிறோம். 

தீபாவளி என்பது சந்தோஷம், கொண்டாட்டம், வெளிச்சம். ஆனால், ஒரு சின்ன கவனக்குறைவு அல்லது அலட்சியம், இந்த மொத்த சந்தோஷத்தையும் நொடியில் சோகமாக மாற்றிவிடும். பட்டாசு வெடிப்பது வீரமான செயல் இல்லை, அது ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு. அந்த மகிழ்ச்சி முழுமையாக இருக்க, பட்டாசு வெடிக்கும்போது நாம் செய்யவே கூடாத சில முக்கியமான விஷயங்களைப் பற்றி  கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

‘ஹீரோ’ மாதிரி நினைச்சு ஆபத்தை விலை கொடுத்து வாங்காதீங்க!

நிறைய பேர், குறிப்பாக இளைஞர்கள், கையில் ராக்கெட் விடுவது, வெடியைக் கையில் பிடித்தபடியே வெடிப்பது போன்றவற்றை ஒரு பெரிய வீரச் செயலாக நினைக்கிறார்கள். சத்தியமாக அது ஹீரோயிசம் இல்லை, அது ஆபத்தை நாமே தேடிச் செல்வதற்குச் சமம். அதேபோல், வெடிக்காத பட்டாசை மீண்டும் போய்ப் பற்றவைக்க முயற்சிப்பது தற்கொலைக்குச் சமம். 

சில வெடிகள் தாமதமாக வெடிக்கும் தன்மை கொண்டவை. நீங்கள் அருகில் சென்ற பிறகு அது வெடித்தால், விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும். நண்பர்கள் மீதோ, விலங்குகள் மீதோ பட்டாசுகளைத் தூக்கி எறிந்து ‘ஜாலியாக’ இருப்பது மனிதாபிமானமற்ற செயல். அந்த ‘ஜாலி’ யாருக்காவது நிரந்தர காயத்தை ஏற்படுத்திவிடலாம்.

இதையும் படியுங்கள்:
உலகின் முதல் 10 பட்டாசு உற்பத்தியாளர்கள் யார் யார்னு தெரியுமா?
Diwali 2025

உடை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் ரொம்ப முக்கியம்!

பட்டாசு வெடிக்கப் போகும்போது, ‘என்ன டிரஸ் போட்டா என்ன?’ என்று நினைக்கவே கூடாது. நைலான், பாலியஸ்டர் போன்ற ஆடைகள் எளிதில் தீப்பற்றக்கூடியவை. நெருப்பு பட்டால், அவை உருகி உடலோடு ஒட்டிக்கொள்ளும். அது மிகக் கொடூரமான தீக்காயங்களை உண்டாக்கும். 

அதனால், எப்போதும் பருத்தி ஆடைகளை அணிவதுதான் நூறு சதவீதம் பாதுகாப்பானது. இதோடு, பட்டாசிலிருந்து வரும் புகையிலிருந்து உங்கள் நுரையீரலைப் பாதுகாக்க முகக்கவசம் அணிவதும், கண்களைப் பாதுகாக்க கண்ணாடி அணிவதும் மிகமிக அவசியம். ஒரு சின்ன தீப்பொறி கூட நம் கண் பார்வையைப் பறித்துவிடக்கூடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

இதையும் படியுங்கள்:
எகிறப் போகும் பட்டாசு விலை..! காரணத்தைக் கேட்டால் அதிர்ச்சி அடைவீங்க..!
Diwali 2025

சுற்றுப்புறமும் முதலுதவியும்!

நாம் பட்டாசு வெடிக்கும் இடம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், வாகனங்கள் அருகில் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ராக்கெட்டுகளை பாட்டிலில் வைத்து கொளுத்தும்போது, அந்த பாட்டில் நிலையாக நிற்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள். 

ஆட்டம் காணும் பாட்டில், ராக்கெட்டை எங்கே வேண்டுமானாலும் கொண்டுபோய் விபத்தை ஏற்படுத்திவிடும். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு வாளி நிறைய தண்ணீரை எப்போதும் பக்கத்தில் தயாராக வைத்திருங்கள். எதிர்பாராதவிதமாக தீப்பற்றினால், உடனடியாக அணைப்பதற்கு இது முதல் உதவியாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com