ஓட்டுநர் உரிமம் பெற 8 போட சொல்வது ஏன்?

Driving license test
Driving license testBg img credit: Virali Digi Services
Published on

நம் நாட்டில் மக்களின் முக்கிய பயன்பாட்டு சான்றுகளில் ஓட்டுனர் உரிமமும் ஒன்று. இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கரம் என வாகனம் வைத்திருக்கும் அனைவரும் கட்டாயம் ஓட்டுநர் உரிமம் வாங்கி இருக்க வேண்டும் என்பது  நம் அரசாங்கத்தின் சட்டம். முறையான பயிற்சி பெற்று ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு வைக்கப்படும் பயிற்சிகளில் தேர்ச்சி பெற்ற பின்னரே ஒருவருக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுவது வழக்கம்.

அப்படி வழங்கப்படும் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முன் நடைபெறும் தேர்வுகளில் பல படிநிலைகள் உள்ளன. ஓட்டுனர் உரிமம் வாங்குபவர் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். குறைந்தது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுவதற்கு முன் ஆறு மாத காலம் கற்றல்  உரிமம் (LLR) வழங்கப்படுவது வழக்கம். அந்த ஆறு மாத காலங்கள் முடிந்த பிறகு தான் அவருக்கு நிலையான ஓட்டுநர் உரிமம்  போக்குவரத்து துறை சார்ந்த அலுவலர்களால் வழங்கப்படும்.

ஓட்டுனர் உரிமம் பெறுபவர் அடிப்படையான தேர்வுகளை முடித்த பிறகு இறுதியாக கொடுக்கப்படும் தீர்வு தான் 8 போடுவது. எண்களில் 0 முதல் 9 வரையிலான 10 எண்கள் இருக்கின்றன. அப்படி இருக்கும்போது ஏன் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு   8 என்ற எண்ணை பயன்படுத்துகிறார்கள்?

8 என்ற எண்ணில்  வலப்பக்கம் வளைவு, குறுக்கே வளைவு, இடப்பக்க வளைவு, யூ டர்ன்  போன்ற  பெரும்பான்மையான சாலை குறியீடுகளின் மாதிரிகள் அடங்கியுள்ளன.

நாம் அதிகமாக வாகனம் ஓட்டும் போது இத்தகைய குறியீடுகளையே  அதிகம் பயன்படுத்த வேண்டியிருக்கும் என்பதால் இதனை ஒரு முக்கிய தேர்வாக எடுத்துக் கொள்கிறார்கள். அதிகமான விபத்துக்கள், தடுமாற்றங்கள்  பெரும்பாலும் வளைவுகளில் தான் ஏற்படும் என்பதை அறிவுறுத்தும் விதமாகத்தான் இந்த 8  போடும் சோதனையை முக்கிய தேர்வாக பின்பற்றுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையின் வெற்றிக்கு அவசியம் வேண்டும் இந்த 7!
Driving license test

8 போடும் தேர்வினை சந்திக்கும்பொழுது காலே கீழே வைக்காமல் தொடக்கம் முதல் இறுதிவரை பயணிக்க வேண்டும். இது ஒரு சிக்கலான பாதை. நன்கு பயிற்சி பெற்ற ஒருவரால் தான் இத்தேர்வினை நிதானமாக கடந்து வர முடியும். அதனால்தான் ஓட்டுனர் உரிமம் வழங்குவதற்கு இதனை ஒரு முக்கிய தீர்வாக  பின்பற்றுகிறார்கள்.

மேலும் 8 என்ற எண்ணில் தொடக்கமும் முடிவும் ஒரே மாதிரியாக இருப்பதால் அதனை கண்காணிப்பதும் மிகவும் எளிதாக உள்ளது. இதுவும்  8  என்ற எண்ணை பயன்படுத்துவதற்கு ஒரு முக்கிய காரணம்.

ஆனால் இப்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்ட திட்டங்களில் ஓட்டுநர் உரிமம் எடுப்பதற்கு பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. மத்திய அரசின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி எடுத்துக் கொண்டவர்கள் ஆர்டிஓ அலுவலகத்திற்கு செல்லாமலே ஓட்டுனர் உரிமத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. முறையான அனுமதி பெற்ற பயிற்சி மையங்களில் பயிற்சி எடுக்கும் போது அதற்கென பிரத்தியேகமாக  அமைக்கப்பட்ட சாலைகளில் ஓட்டுனர் பயிற்சி பெறுபவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு பல்வேறு நடைமுறைகள் இருந்தாலும் கூட நடைமுறையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சாலை விபத்துகளை நம்மால் தடுக்க முடியவில்லை என்றே சொல்லலாம். இந்தியாவில் மட்டும் சராசரியாக ஆண்டுக்கு 1.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சாலை விபத்துக்களால் இறப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

இதையும் படியுங்கள்:
சுற்றுச்சூழலுக்கு உகந்த மட்பாண்டங்களின் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?
Driving license test

முறையாக  சாலை விதிகளை பின்பற்றாமை, தரமற்ற சாலைகள், முறைப்படுத்தப்படாத போக்குவரத்து வழித்தடங்கள் என சாலை விபத்துக்கள் நடைபெறுவதற்கு எத்தனையோ காரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். முறையான சாலை விதிகளை பின்பற்றி நிதானமாக செல்லும் பயணமே சாலை விபத்துகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளும் மிகப்பெரிய வழிமுறைகள் ஆகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com