
நவீன காலத்தில் பலரின் வீடுகளில் கேஸ் அடுப்பு தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விரகு அடுப்பில் இருந்து நாடு வளர்ந்து வளர்ந்து தற்போது எலெக்ட்ரிக் அடுப்பு என்று வரை உயர்ந்துள்ளது. இப்படி இருக்கையில் அதிகமானோர் கேஸ் அடுப்பு தான் பயன்படுத்துகின்றனர்.
இது சுலபமாக இருந்தாலும் இதில் உள்ள பர்னரை சுத்தம் செய்வது சற்று கடினமான வேலை தான். செம்பு கலரில் இருக்கும் அந்த பர்னர் நாளாக நாளாக தீயின் தாக்கத்தால் கருமை நிறத்திற்கு மாறிவிடும். என்னதான் சோப்பு போட்டு தேய்த்து கழுவினாலும் கூட தினசரி தீயிலேயே இருப்பதால் அதன் கறுமை முழுமையாக போகாது. அதை எளிதில் போக்குவது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம். அதுவும் வீட்டில் உள்ள ஒரு பொருளை வைத்தே சுலபமாக க்ளீன் செய்வது எப்படி என பார்க்கலாம்.
அடுப்பில் உள்ள பர்னரை கிளீன் செய்வது அவசியமானதாகும். ஏனென்றால் இதன் மூலம் கேஸை மிச்சப்படுத்தமுடியும். இதில் உள்ள அழுக்கு மூலம் கேஸ் அதிகமாக செலவாகும் என சொல்லப்படுகிறது. எனவே பர்னரை சுத்தம் செய்வது கட்டாயமும் கூட.
முதலில் ஒரு பெரிய தட்டை எடுத்துக்கொள்ளுங்கள், அதில் கேஸ் பர்னர் இரண்டை போடுங்கள். நன்றாக தண்ணீரைக் கொதிக்க வைத்து, கேஸ் பர்னர் மூழ்குகிற அளவுக்கு தட்டில் ஊற்றுங்கள். லெமன் ஜூஸ் பிழிந்து ஊற்றுங்கள். 2 பாக்கெட் ஈனோ போட்டு 2 மணி நேரம் அப்படியே விடுங்கள். 2 மணி நேரம் கழித்துப் பார்த்தால் சும்மா கை வைத்துப் பார்த்தாலே பர்னர் மேலே உள்ள அழுக்கு விலகிவிடும். பிறகு, நாம் பிழிந்த எலுமிச்சை தோலை எடுத்து பர்னரைத் தேய்த்து சுத்தம் செய்தால் போதும். பிறகு, பாத்திரம் தேய்க்கும் இரும்பு ஸ்க்ரப் எடுத்து தேய்த்து சுத்தம் செய்து கழுவினால், கேஸ் பர்னர் புதுசு போல பளபளனு மாறிவிடும். இதை உங்கள் வீட்டில் ட்ரை செய்து விட்டு மற்றவருக்கும் பகிருங்கள்.