நாம் அன்றாடம் பயன்படுத்தும் மிக்ஸி ஜார்களின் உட்புறத்தில் படியும் நுண்ணிய அழுக்குகளை எளிதாக அகற்ற சில எளிய வழிமுறைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
Juicer Jarன் வலையில் பழச்சாறின் கறை படிந்து இருக்கும். அதனை சுத்தம் செய்ய Dishwasher liquid போதாது. ஜாரில் வினிகர் + பேக்கிங் சோடா + இளஞ்சூடு நீர் சேர்த்து 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் மிக்ஸியை Pulse modeல் சில விநாடிகள் இயக்கவும்.
ஒரு வாயகன்ற பேசின் போன்ற பாத்திரத்தில் வெந்நீர், வினிகர், பேக்கிங் சோடா கலவையில் ஜார்கள் மற்றும் அதன் மூடிகள் நன்கு முழுமையாக மூழ்கி இருக்கும்படி அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு பல் துலக்கும் பிரஷ் கொண்டு வடிகட்டியின் வலையையும், ஜாரின் அடிப்பகுதியையும் லிக்விட் வைத்து தேய்த்து அலம்பவும்.
SS ஜார்களை (Stainless steel jars) வினிகர் + பேக்கிங் சோடா + இளஞ்சூடு நீர் சேர்த்து 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் மிக்ஸியை Pulse modeல் சில விநாடிகள் இயக்கி விட்டு உட்புறம் உள்ள Bladeகளை பிரஷ்ஷால் நன்கு தேய்த்து விட்டால் அதில் படிந்துள்ள கறைகள் யாவும் நீங்கும்.
மூடிகளில் உள்ள ரப்பர்களை அகற்றி விட்டு ஊற வைத்து கழுவ வேண்டும். பிறகு லிக்விட் + பிரஷ் + ஸ்பான்ஜ் கொண்டு ஜாரின் அடிப்பகுதியை நன்றாகத் தேய்த்து கழுவவும். காய்ந்த பின்னர், ஜாரில் கல் உப்பு போட்டு அரைத்தால் Blade கூர்மையாகும்.
மிக்ஸி மெஷின் சுத்தம் செய்யும்போது, Plug நீக்கி வைக்கவும். வினிகர் + பேக்கிங் சோடா கலவையில் நனைத்த துணியால் வெளிப்புறத்தை துடைக்கவும். ஜார்கள் பொருத்தும் பகுதி மற்றும் Switch பகுதிகளை பல் துலக்கும் பிரஷ் / Ear buds மூலம் சுத்தம் செய்யவும். தண்ணீர் உள்ளே செல்லாமல் கவனமாகக் கையாளவும். அதேபோல் SS அல்லாத (plastic) ஜார்களை நிழலில் உலர்த்த வேண்டும். SS ஜார்களை வெயிலில் நன்றாக உலர்த்தவும். இறுதியாக, மிக்ஸியின் Switch off modeல் உள்ளதா என்பதை உறுதி செய்யவும்.
மேற்கண்ட ஆலோசனைகள் அனைத்தும் மிக்ஸி ஜார்கள், blade, மெஷின் பாகங்கள் பளிச்செனவும் சுத்தமாகவும் இருக்க உதவும்.
உங்க வீட்டில் உள்ள Mixer Jar பழுதாகி விட்டதா? கவலைப்படாதீர்கள்! புதிய Mixer Jar வாங்க...