அழகான இல்லம் அமைய வேண்டுமா? இந்த மாற்றங்களை இன்றே செய்யுங்கள்!

இயற்கை மற்றும் நவீனத்தின் கலவையில் உங்கள் வீட்டைப் புதுப்பொலிவுடன் மாற்றும் அருமையான வழிகாட்டல்.
இல்ல அலங்காரம்
இல்ல அலங்காரம்AI image
Updated on

வீட்டை அழகாகவும் நேர்த்தியாகவும் மாற்றுவதற்கு வண்ணங்கள், விளக்குகள், உட்புற தாவரங்கள் மற்றும் சரியான மரச்சாமான்களின் தேர்வு மிகவும் முக்கிய மானதாகும். இவை ஒரு வீட்டின் அழகை மேம்படுத்துவதுடன் வீட்டிற்கு ஒரு அழகான தோற்றத்தையும் தரும்.

வீட்டை நேர்த்தியாக மாற்ற சுவர்களில் சுவர் கலைகள் மற்றும் வால்பேப்பர்கள் போன்றவற்றைச் சேர்த்து வண்ணமயமாக்கலாம். மென்மையான குஷன் கவர்கள் மற்றும் த்ரோக்கள் போன்றவற்றைக் கொண்டு வரலாம். கூடுதல் நேர்த்திக்காக அலங்கார விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகள் மற்றும் ஜன்னல் ஓரத்தில் அமரும் இடம் போன்றவற்றை அமைக்கலாம்.

1. சுவர் அலங்காரம் (Wall Decor):

வரவேற்பு அறை சுவர்களில் கலைநயம் மிக்க ஓவியங்கள், குடும்ப புகைப்படங்களை மாட்டலாம். இது நம் வீட்டிற்கு ஒரு பிரீமியம் தோற்றத்தைத் தரும். குறைந்த செலவில் சுவர்களின் தோற்றத்தை மாற்ற நவநாகரீக வால்பேப்பர்களைப் பயன்படுத்தலாம்.

வீட்டின் சுவர்களுக்கு வெள்ளை அல்லது வெளிர் நிறங்களை(Pastel colours) தேர்ந்தெடுத்து, ஒரு சுவருக்கு மட்டும் பிரகாசமான வண்ணத்தைத் தீட்ட அறையின் அழகு கூடும்.

இல்ல அலங்காரம்
இல்ல அலங்காரம்AI image

வீட்டின் நுழைவாயிலில் அல்லது ஹாலில் அழகான பெரிய அலங்கார சுவர் கண்ணாடிகளை வைப்பதன் மூலம் சிறிய இடங்கள் கூட அகலமாகவும் பெரியதாகவும் வெளிச்சமாகவும் தோன்றும்.

2. இல்ல அலங்காரம்: இயற்கை அழகை கூட்டும் உட்புறத் தாவரங்கள்

சாப்பாட்டு மேஜை அல்லது சென்டர் டேபிளின் மீது புதிய பூக்கள் நிரம்பிய பூ ஜாடிகளை வைக்கலாம். வீட்டின் மூலைகளில் இன்டோர் பிளான்ட்ஸ் மற்றும் புதிய பூக்களை வைப்பது வீட்டிற்கு நேர்மறை ஆற்றலையும் புத்துணர்ச்சியையும் தரும்.

வீட்டிற்குள் இயற்கையான சூழலை உருவாக்க, வீட்டின் மூலைகளில் மணி பிளான்ட், ஸ்நேக் பிளான்ட் அல்லது உறைவிடத்திற்குள் வளரும் சிறிய செடிகளை வைக்க, இவை வீட்டிற்கு அழகான தோற்றத்தைத் தருவதுடன் வீட்டின் காற்றையும் தூய்மையாக வைத்திருக்க உதவும்.

3. இல்ல அலங்காரம்: கதகதப்பான சூழலை உருவாக்கும் திரைச்சீலைகள் மற்றும் விரிப்புகள்

தரமான, தடிமனான மற்றும் சுவரின் நிறத்திற்குப் பொருத்தமான திரைச்சீலைகளை தேர்வு செய்து, அவற்றை கூரையிலிருந்து(ceiling) தரை வரை தொங்கவிட அறை உயரமாகவும், நேர்த்தியாகவும் தோற்றமளிக்கும்.

சோபாக்களில் வண்ணமயமான குஷன் கவர்கள், அழகான திரைச்சீலைகள் மற்றும் விரிப்புகள்(rug) மூலம் அறையின் அழகை அதிகரிப்பதுடன் வீட்டிற்கு ஒரு கதகதப்பான சூழலையும் உருவாக்க முடியும்.

4. அலங்கார விளக்குகள்:

வீட்டில் வெறும் ஒற்றை விளக்கை மட்டும் பயன்படுத்தாமல், எல்.இ.டி கன்சீல்டு விளக்குகள் மற்றும் தொங்கு விளக்குகளைப்(Pendant Lights) பயன்படுத்தலாம். மாலையில் அமைதியான சூழலை உருவாக்க மஞ்சள் நிற வார்ம் விளக்குகள் அல்லது நறுமண மெழுகுவர்த்திகளைப் பயன்படுத்தலாம்.

அலங்கார விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்தி ஸ்டாண்டுகள் போன்றவற்றை சரியான இடங்களில் பொருத்துவது வீட்டின் ஒட்டுமொத்த தோற்றத்தையும் அழகாகக் காட்டும்.

இதையும் படியுங்கள்:
‘டிஷ்வாஷர்’: ஆடம்பரமல்ல... இனி சமையலறையின் அத்தியாவசியம்!
இல்ல அலங்காரம்

5. மரச்சாமான்கள்(Furniture):

மல்டி-ஃபங்ஷனல் பர்னிச்சர்: சிறிய வீடுகளாக இருந்தால், உள்ளே பொருட்களை சேமிக்கக் கூடிய சோபாக்கள் அல்லது படுக்கைகளை பயன்படுத்தலாம். இடத்தை மிச்சப்படுத்த மல்டி-பர்பஸ் எனப்படும் பல பயன்பாடுகளைக் கொண்ட மேஜைகள் மற்றும் ஸ்டோரேஜ் பெஞ்சுகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

மரத்தாலான பொருட்கள்: நவீன வடிவமைப்புகளுடன் கூடிய மரத்தாலான டிவி யூனிட் அல்லது சிறிய காபி டேபிள் வீட்டின் நேர்த்தியை அதிகரிக்கும்.

6. இல்ல அலங்காரம்: அமைதியான உறக்கத்தைத் தரும் படுக்கையறை மாற்றங்கள்

படுக்கையறை எப்பொழுதும் அமைதியையும் நிம்மதியையும் சந்தோஷத்தையும் தரும் வகையில் இருக்க வேண்டும். படுக்கையின் இருபுறமும் மென்மையான, கண்களை உறுத்தாத வெளிச்சம் தரும் டேபிள் லேம்ப்களை பொருத்தலாம்.

இதையும் படியுங்கள்:
கொத்து கொத்தாக வரும் ஈக்களை விரட்ட இதுவே மிகச் சிறந்த மற்றும் எளிமையான வழி!
இல்ல அலங்காரம்

பருத்தி துணியாலான லேசான வண்ணங்கள் கொண்ட படுக்கை விரிப்புகள் மற்றும் திரைச்சீலைகளை தேர்வு செய்வது நல்லது. சிறிய மரத்தாலான அலமாரிகளை சுவரில் பொருத்தி, அதில் பிடித்தமான புத்தகங்கள் அல்லது கைவினைப் பொருட்களை வைக்கலாம்.

உங்கள் வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் இயற்கையையும், நேர்த்தியையும் புகுத்துவதன் மூலம், தினசரி வாழ்க்கையில் அதிக நேர்மறை ஆற்றலையும், புத்துணர்ச்சியையும் நீங்கள் உணர முடியும்.

logo
Kalki Online
kalkionline.com