மதிப்பெண்கள் மட்டுமே கல்வி அல்ல: மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியக் கையேடு!

டாக்டர், இன்ஜினியர் என்ற பழைய அளவுகோலைத் தாண்டி, புதிய கல்வி வாய்ப்புகள், பொருளாதார நிலை, பெற்றோர் ஆதரவு ஆகியவை மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் காலத்தின் அவசியம்.
student-future-career
student-future-career
Updated on

12 ஆம் வகுப்பு முடிவுகள் வெளியாகும் நேரம் இது. இந்த நேரம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு முக்கியமான தருணமாகும். அந்த முடிவுகள் மாணவர்களின் எதிர்கால கல்விப் பாதையின் முதல் திருப்பமாக அமைகிறது. இந்த நேரத்தில் பெற்றோரின் அணுகுமுறை மாணவர்களின் மனநிலையை நேரடியாகப் பாதிக்கிறது.

சரியான கல்வித் தேர்வு

குழந்தைகளை பள்ளி அல்லது கல்லூரியில் சேர்க்கும் போது பெற்றோர் மிகுந்த கவனத்துடன் முடிவெடுக்க வேண்டும். குழந்தையின் விருப்பம், திறமை, ஆர்வம் ஆகியவற்றை புரிந்து கொண்டு பாடப்பிரிவைத் தேர்வு செய்வது அவசியம். பெற்றோரின் ஆசையைவிட, குழந்தையின் திறமைக்கு ஏற்ப எடுக்கப்படும் முடிவே வெற்றிக்கு வழிவகுக்கும்.

கல்லூரி தேர்வில் கவனம்

கல்லூரியின் தரம், ஆசிரியர்களின் திறன், அடிப்படை வசதிகள் மற்றும் எதிர்கால வேலைவாய்ப்பு வாய்ப்புகள் ஆகியவற்றை ஆராய்ந்து தேர்வு செய்வது மிகவும் முக்கியம்.

புதிய கல்வி வாய்ப்புகள்

இன்றைய காலத்தில் பல புதிய பாடப்பிரிவுகள் உருவாகியுள்ளன. டிஜிட்டல் மார்க்கெட்டிங், டேட்டா சயின்ஸ், அனிமேஷன், நர்சிங் போன்ற துறைகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. இத்தகைய மாற்றங்களைப் பற்றிய விழிப்புணர்வு பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் அவசியம்.

மாறும் கல்வி உலகம்

ஒருகாலத்தில் “டாக்டர் அல்லது இன்ஜினியர்” என்ற இரு பாதைகளே உயர்வாகக் கருதப்பட்டன. ஆனால் இன்று உலகம் விரிந்த வாய்ப்புக் களமாக மாறியுள்ளது. செயற்கை நுண்ணறிவு, வலை வடிவமைப்பு, ஊடகத் துறை, சுற்றுச்சூழல் அறிவியல் போன்ற பல துறைகள் புதிய வாய்ப்புகளை வழங்குகின்றன. பழைய அளவுகோல்களால் புதிய உலகை அளவிட முடியாது.

இதையும் படியுங்கள்:
மார்க் குறைய இதுதான் காரணம்! உங்கள் குழந்தையின் தன்னம்பிக்கையை வளர்க்கும் எளிய வழிகள்!
student-future-career

பொருளாதாரமும் முடிவும்

குடும்பத்தின் பொருளாதார நிலைக்கு ஏற்ப சரியான முடிவை எடுப்பதும் முக்கியம். அவசர முடிவுகள் பின்னர் சிரமங்களை உருவாக்கக்கூடும்.

மதிப்பெண் குறையும் சூழ்நிலை

சில மாணவர்கள் குறைந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறலாம். அத்தகைய சூழ்நிலையில் பெற்றோர் குறை கூறுவதோ, மற்றவர்களுடன் ஒப்பிடுவதோ தவிர்க்கவேண்டும். அது அவர்களின் தன்னம்பிக்கையை பாதிக்கும்.

ஊக்கம் மற்றும் ஆதரவு

“நீ முயற்சி செய்தாய் அல்லவா அதுவே முக்கியம்” மனதை தளர விடாதே, என்று கூறி மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். குறைந்த மதிப்பெண் என்பது தோல்வி அல்ல; அது ஒரு அனுபவம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அடுத்த கட்ட வாய்ப்புகள்

மதிப்பெண் குறைவுக்கான காரணங்களை அமைதியாகப் பேசிப் புரிந்துகொண்டு, மேல்படிப்பு, தொழில்நுட்பக் கல்வி அல்லது திறன் பயிற்சிகள் போன்ற பல்வேறு வழிகளைத் தேர்வு செய்யலாம்.

கல்வியின் உண்மையான அர்த்தம்

கல்வி என்பது வெறும் மதிப்பெண்கள் அல்ல. திறமை, சிந்தனை திறன், செயல் திறன், தன்னம்பிக்கை ஆகியவையும் முக்கியம். அதனால் மாணவர்களின் ஆர்வத்தை வளர்க்கும் வகையில் பெற்றோர் வழிகாட்ட வேண்டும்.

வாழ்க்கைத் திறன்கள்

“சிறுவயதிலிருந்தே கல்வியில் ஈடுபாடு, நேரத்தை சரியாக பயன்படுத்தும் திறன், தெளிவான இலக்கை நோக்கிய முயற்சி மற்றும் தொடர்ச்சியாக கற்றுக்கொள்ளும் மனப்பாங்கு ஆகியவற்றை மாணவர்களில் வளர்த்தெடுக்க வேண்டும்.”

ஆதரவான சூழல்

மிக முக்கியமாக, மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் ஆதரவான சூழலை உருவாக்கவேண்டும். இன்றைய மாணவர்கள் கல்வி அழுத்தத்தோடு சமூக ஒப்பீட்டின் சுமையையும் தாங்குகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
உங்கள் பிள்ளைகள் தவறான படிப்பை தேர்ந்தெடுக்க இதுதான் முக்கிய காரணம்… உடனே உஷாராகிக் கொள்ளுங்கள்!
student-future-career

பெற்றோரின் பங்கு

பெற்றோர் ஒரு விளக்குக் கம்பமாக இருக்கவேண்டும். திசை காட்டும் ஒளியாக இருக்கவேண்டும்; தண்டிக்கும் நிழலாக அல்ல. சிறிய முன்னேற்றத்தையும் பாராட்டுவது அவர்களின் தன்னம்பிக்கையை உயர்த்தும்.

கல்வி என்பது ஒரு போட்டி அல்ல; அது ஒரு நீண்ட பயணம். அந்த பயணத்தில் பெற்றோரின் புரிதலும் பாசமும் இருந்தால், ஒவ்வொரு மாணவரும் தங்களுடைய இலக்கையும் வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தையும் கண்டுபிடிக்க முடியும்.

logo
Kalki Online
kalkionline.com