சோம்பேறித்தனம் முற்றிலும் நீங்க ஜப்பானியர் சொல்லும் எட்டு உத்திகள்!

Eight Japanese tricks to get rid of laziness completely
Eight Japanese tricks to get rid of laziness completelyhttps://dheivegam.com

இக்கிகாய்: உங்களுக்குப் பிடித்த இலக்கிற்காக வேலை செய்யுங்கள். அதற்கான வேலைகள் அதிகரிக்கும்போது உங்களுடைய ஆர்வமே காலை சீக்கிரம் எழத் தூண்டும். ஆகையால், பிடித்த வேலையைச் செய்யுங்கள். இதற்கான நான்கு விதிமுறைகள்:

1. உங்களுக்கு விருப்பம் உள்ளதை மட்டும் செய்யுங்கள்.

2. நீங்கள் எதில் சிறந்து விளங்குகிறீர்களோ அதை மட்டும் செய்யுங்கள்.

3. உங்களுடைய விருப்பம் போலவே இந்த உலகத்திற்கு என்ன தேவையோ அதைச் செய்யுங்கள்.

4. உங்களால் எந்த அளவுக்கு முடியுமோ அதைச் செய்யுங்கள்.

கைசன்: சிறிய சிறிய முயற்சிகளில்கூட கவனம் செலுத்துங்கள். பெரிய முயற்சிகளுக்காகக் காத்திருக்க வேண்டாம். தினமும் ஒரு சதவீதம் மேம்படுவதே சிறந்ததுதான். பெரிய ஒரு இலக்கினை சிறிய சிறிய இலக்குகளாகப் பிரித்துவைத்தால் உங்கள் இலக்கை அடைய எளிதாக இருக்கும். ‘ஐயோ இவ்வளவு இருக்கிறதே’ என்று சலிக்காமல் இருக்க உதவும். (பெரும்பாலும் இந்தச் சலிப்பே சோம்பேறித்தனத்திற்கு வழி வகுக்கிறது.)

சோஷின்: இது ஒரு ஜென் புத்திசத்தினுடைய கருத்து. நீங்கள் இன்னும் சிந்திக்கவே ஆரம்பிக்கவில்லை என்றால் பரவாயில்லை. எந்த யோசனைகளும் இல்லாத மூளையே நல்ல யோசனைகளைச் சிந்திக்க ஆரம்பிக்கும். அனைத்தும் தெரிந்தவன் யோசிப்பதில் சற்றுத் தடுமாறுவான். ஆகையால் எப்படித் தொடங்குவது என்ற சலிப்பினால் சோர்வாக அமர்ந்து விடாதீர்கள்.

ஹரா ஹச்சி பூ: 80 சதவீதத்திற்கு மேல் சாப்பிடாதீர்கள். அதிகம் சாப்பிட்டால் மூளை சோம்பேறியாகி விடும். மூளை சோம்பேறியானால் உடலும் சோம்பேறியாகிவிடும். மேலும், அதிகமாக சாப்பிட்டால் தூக்கம்தான் வரும். வேலை செய்ய முடியாது.

ஷின்ரின் - யோகு: ஷின்ரின் என்றால் ஜப்பானில் காடு என்று பொருள். அதேபோல், யோகு என்றால் குளியல் என்று பொருள். நீங்கள் மிகவும் சோர்வாக உணரும்போதும், காலையில் எழுந்தவுடன் நடைப்பயணம் செல்வது நல்லது. எவ்வளவுக்கு எவ்வளவு நாம் இயற்கையோடு கலந்திருக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நமது சோர்வும், மன அழுத்தமும் குறையும். அதேபோல், காலை எழுந்தவுடன் குளிப்பது மிகவும் அவசியம்.

இதையும் படியுங்கள்:
படுத்த உடனே தூங்க சில எளிய வழிகள்!
Eight Japanese tricks to get rid of laziness completely

வாபி - சாபி: ஒருவன் எப்போதும் அனைத்து விஷயங்களிலும் குறையில்லாமல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. குறையிலும் ஒரு வகையான அழகு இருக்கிறது. மாற்ற முடியாத சில குறைகளை அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் அழகும் புத்திசாலித்தனமும்கூட. அந்தக் குறையினால் நீங்கள் மன அழுத்தம் கொள்ளத் தேவையில்லை. அதேபோல், அந்தக் குறையினால், ‘நமக்கு எதுவும் செய்ய வராது’ என்று உட்கார்ந்தாலும் சோம்பேறித்தனம் நம்மை பிடித்துக்கொள்ளும்.

கன்பரு: ஒரு விஷயம் எவ்வளவு கடினமாக இருந்தாலும் சரி, அதனைப் பொறுமையாக இருந்து முடித்தே ஆக வேண்டும். அதேபோல், முடிவுக்கும் பொறுமை காப்பது அவசியம். இந்த பொறுமையின்மையும் சலிப்பை உண்டாக்கி ஒருவரை சோம்பேறி ஆக்கும் வல்லமைக் கொண்டது.

கமன்: நீங்கள் செல்லும் பாதை எப்போதும் அமைதியானதாக இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. நமக்காக ஆயிரம் இன்னல்கள் காத்துக்கொண்டிருக்கலாம். ஏன்? அதில் நீங்கள் பல இழப்புகளையும், தோல்விகளையும்கூட சந்திக்க நேரிடலாம். அதனைச் சமாளிக்க போதுமான பொறுமையும் விடாமுயற்சியும் தேவைப்படும்.

ஆகையால், ஒருவன் தன் சோம்பேறித்தனத்தைப் போக்க முதலில் ஒரு இலக்கைத் தீர்மானிப்பதே அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com