என்னது...வீட்டுக்கு வீடு விமானமா? எந்த நாட்டில் தெரியுமா?

என்னது...வீட்டுக்கு வீடு விமானமா? எந்த நாட்டில் தெரியுமா?

நாம் அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் வாகனம் என்றால் கார், பைக்,சைக்கிள் போன்றவைத்தான் ஆனால் அமெரிக்காவின் கேம்ரூன் ஏர்பார்க் பகுதியில் ஒவ்வொரு வீட்டிலும் விமானம் வைத்திருப்பது யாருக்கெல்லாம் தெரியும்? வாங்க இந்த வித்தியாசமான நகரத்தை பற்றி தெரிஞ்சுக்கலாம்..

இரண்டாம் உலகப் போர் முந்தைய காலகட்டத்தில் அதிக விமானிகள் தேவைப்பட்டதால் அமெரிக்கா ராணுவம் ஏராளமான விமானிகளுக்கு பயிற்சி அளித்து. இதனைத்தொடர்ந்து ஏராளமான விமானங்களும் தயாரித்தது. அந்த வகையில் 1939 ஆம் ஆண்டில் 46 ஆயிரம் இருந்த விமானங்களின் எண்ணிக்கை 1946ல் 4 லட்சமாக உயர்ந்தது.

taskandpurpose.com

ஆனால், உலக போர் முடிந்தபிறகு தேவைக்கு அதிகமாக இருந்த விமானங்களை என்னச் செய்வது என்ற தெரியாமல் விழி பிதுங்கி நின்றது அமெரிக்க அரசு.

விமான குடியிருப்பு எனும் யோசனை

இதனையடுத்து அமெரிக்க சிவில் விமானம் ஆணையம் அரசுக்கு ஒரு யோசனை கூறியது. அதன்படி விமான நிலையங்களை ஓய்வுபெற்ற விமானப்படை வீரர்கள் குடியிருப்புகளாக மாற்றி விமானங்களை ஓய்வுபெற்ற போர் விமானிகளுக்கே கொடுத்துவிடலாம் என்ற யோசனையை வழங்கியது. புதுவிதமாக இருந்த யோசனை அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஹாரி எஸ். ட்ரூமனுக்கு பிடித்திருந்தது. இதன்பிறகு ஆணையத்தை யோசனை நடைமுறைப்படுத்த அவர் ஒப்புதல் அளித்தார்.

இவ்வாறு போர் விமான தளங்களை குடியுருப்புகளாக அமெரிக்க அரசு தேர்ந்தெடுத்த இடம்தான் கேம்ரூன் ஏர்பார்க்.பின்னர் இந்த திட்டத்திற்காகவே ஏர்பார்க் நகரத்தின் சாலைகளை விரிவுப்படுத்தினார்கள். ஒவ்வொரு வீட்டிலும் விமானம் நிறுத்துவதற்காக பெரிய இடங்கள் கட்டப்பட்டன. இரண்டு அல்லது மூன்று நபர்கள் பயணம் செய்யக்கூடிய சிங்கள் இஞ்சின் விமானங்கள் இங்கு பயண்படுத்தப்படுகிறது.

எல்லாவற்றுக்கும் விமானங்கள்!

பக்கத்து வீட்டுக்காரர்களிடம் பேசுவதற்கு கூட ஸ்பீக்கர் தான் தற்போதுவரை பயன்படுத்திவருகிறார்கள் கேம்ரூன் ஏர்பார்க் குடியிருப்புவாசிகள். அதுமட்டுமா நீண்டதூரம் உள்ள கடைகள், மால்களுக்கு செல்வதற்கு,பக்கத்து ஊருக்கு செல்வதற்கும் கூட விமானங்களை தான் எடுத்துக் கொண்டு செல்கிறார்கள்.

எப்படி மற்ற நாடுகளில் பொதுமக்கள் சாதாரணமாக கார், பைக் ஓட்டுவதற்கு இளமையிலேயே கற்றுக் கொள்ள ஆர்வம்காட்டுவர்கள். அதேபோல் கேம்ரூன் ஏர்பார்க் குடியிருப்புவாசிகள் தங்களுடைய இளம்வளதிலேயே விமானம் ஓட்டுவதற்கு கற்றுக் கொள்கிறார்கள். வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள தனியார் விமான நிலையத்தில் தங்களுடைய விமானங்களை பார்க் செய்துக்கொள்ள ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
மற்றவர்கள் மத்தியில் உங்கள் மதிப்பை அதிகரிப்பது எப்படி?
என்னது...வீட்டுக்கு வீடு விமானமா? எந்த நாட்டில் தெரியுமா?

உலகில் மொத்தம் இது போன்ற 630 விமான குடியிருப்புகள் உள்ளன. அதில் 610 விமான குடியிருப்புகள் அமெரிக்காவிலேயே உள்ளது என கூறப்படுகிறமு. ஒவ்வொரு குடியிருப்புகளிலும் சுமார் 600 விமானங்களும், குடும்பங்களும் உள்ளன. இதில் என்ன டிவிஸ்ட் என்றால் அந்த குடியிருப்புகளில் உள்ளவர்கள் அழைக்காமல் யாருமே உள்ள செல்வதற்கு அனுமதி இல்லையாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com