மற்றவர்கள் மத்தியில் உங்கள் மதிப்பை அதிகரிப்பது எப்படி?

மற்றவர்கள் மத்தியில் உங்கள் மதிப்பை அதிகரிப்பது எப்படி?

க்களிடம் இன்று பொதுவாக உள்ள  ஓர் எண்ணம் நம்மை எல்லோரும் மதிக்க வேண்டும் என்பது. இந்த எண்ணம் மட்டும் இருக்குமே ஒழிய, இதற்கான வழிமுறைகள் பலருக்கும் தெரியாது. அப்படித் தெரிந்திருந்தாலும் அதனை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதில் சந்தேகங்கள் எழக்கூடும்.

 1.ற்றவர்கள் உங்களை மதிக்க வேண்டும் எனில், முதலில் நீங்கள் உங்களை மதிக்க வேண்டும். உங்களை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அதைவிட முக்கியமாக, நீங்கள் அனைவரையும் மதிக்கத் தயாராக இருக்க வேண்டும்.

2. ல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் நீங்கள் உடன் இருக்க வேண்டும் என்று ஒரு போதும் எண்ணாதீர்கள். அப்படி இருந்தால் உங்களின் நிலை அவர்களுக்குப் புரியாது. உங்களின் மதிப்பு அவர்களுக்குத் தெரியாது. உங்களின் நேரத்தை வரையறுத்து மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள். கூடுமானவரையில் உங்கள் நேரத்தை உங்களுக்காக மட்டும் செலவிடுங்கள். அதன் பிறகு உங்கள் மதிப்பு தானாக உயரும்.

3. ங்களைப் பற்றி தகவலை மற்றவர்களுடன் பகிரும் பொழுது குறைவாகவே பகிருங்கள். அப்படி இல்லாமல் எல்லா விஷயங்களையும் எல்லாரிடமும் பகிர்ந்தால் உங்களின் மதிப்பு அவர்களுக்குச் சுத்தமாகத் தெரியாது. நீங்கள் இப்படித்தான் என்று அவர்கள் முடிவு செய்து விடுவார்கள். உங்கள் மேல் அவர்கள் வைக்கும் மதிப்பு நீர்த்துப்போகும். அதனால், உங்களைப் பற்றிய தகவல் களைப் பரிமாறும் போது கவனமாக இருங்கள்.

4. ற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று முதலில் காது கொடுத்துக் கேளுங்கள். முழுமையாகக் கேட்ட பிறகு தீர்வோ, கருத்தோ கொடுங்கள். அதனை விட்டு பிறர் என்ன பேசுகிறார் என்று கேட்காமல் அவர்களுக்கு நீங்களாக யோசித்து ஒரு பதிலையோ, முடிவையோ கொடுக்காதீர்கள்.

5. முதலில் நீங்கள் பாதுகாப்பு வட்டத்திலிருந்து வெளியேறுங்கள். உங்களிடம் என்ன நிறைகள், குறைகள் இருக்கிறது என்று ஆராயுங்கள். அதில் நிறைகளை மட்டும் எடுத்துக் கொள்ளாமல் குறைகளைச் சரிசெய்ய வழி தேடுங்கள்.

6. ங்களிடம் என்ன இருக்கிறதோ, உங்களுக்கு என்ன வருமோ அதை வைத்து முன்னேறப் பாருங்கள். உங்கள் கடந்த காலத்தில் என்ன நடந்திருந்தாலும் சரி அவற்றை வைத்து நிகழ்காலத்தை இழக்காதீர்கள். மற்றவர்களிடம் இருப்பனவற்றை வைத்து உங்களை ஒப்பிடாதீர்கள். நீங்கள் உங்களைச் சார்ந்து மட்டும் இருங்கள்.

மற்றவர்கள் தன்னை மதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இதை மட்டும் செய்து பாருங்கள். மரியாதையைத் தேடி நீங்கள் செல்ல வேண்டாம். மதிப்பும் மரியாதையும் உங்களைத் தேடி வரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com