வீட்டை சுற்றி குளவி தொல்லை இருக்கா... இந்த ஒரு சின்ன பேப்பர் ட்ரிக் செஞ்சா போதும்!

Fake Wasp Nest
Fake Wasp Nest
Updated on

மது வீட்டின் பால்கனி அல்லது மொட்டை மாடிக்கு செல்லும்போது திடீரென ஒரு குளவி நம்மை சுற்றி வட்டமடித்தால் வரும் பயம் சொல்லவே முடியாது. அதன் கடி மிக கொடூரமான வலியை கொடுக்கும். வீட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் கூடுகட்டி நம்மை நிம்மதி இழக்கச் செய்வதில் குளவிகளுக்கு நிகர் வேறு எந்த பூச்சியுமே இல்லை. 

இந்த குளவிகளை விரட்ட எந்த ஒரு பெரிய செலவும் இல்லாமல் மிக சுலபமாக ஒரு சின்ன ட்ரிக் மூலம் குளவிகளை நிரந்தரமாக விரட்ட முடியும். 

குளவிகளின் உளவியல் ரகசியம்!

பொதுவாகவே விலங்குகள் மற்றும் பூச்சிகளுக்கு என்று ஒரு பிரத்யேகமான எல்லை வரையறை இருக்கும். அதே போலத்தான் குளவிகளும் ரொம்பவே உஷாரானவை. ஒரு இடத்தில் ஏற்கனவே வேறு ஒரு குளவி கூட்டம் கூடு கட்டியிருந்தால் அந்த இடத்தின் பக்கத்திலேயே இவை செல்லாது. அங்கு சென்றால் சண்டை வரும் என்பதால் வேறு ஒரு பாதுகாப்பான இடத்தை தேடி பறந்துவிடும். குளவிகளின் இந்த ஒரு சின்ன பயத்தை தான் நாம் இப்போது நமக்கு சாதகமாக மாற்றி ஒரு தரமான ட்ரிக் செய்யப் போகிறோம்.

பேப்பர் கவர் போதும்!

இதற்கு நமக்கு தேவையானது மளிகை கடைகளில் பொருட்களைப் போட்டு கொடுக்கும் ஒரு சாதாரண பழுப்பு நிற காகிதப்பை மட்டும்தான். அந்த பேப்பர் கவரை நன்றாக கசக்கி உள்ளே சில தேவையற்ற செய்தித்தாள்கள் அல்லது பிளாஸ்டிக் கவர்களை அடைத்து ஒரு பெரிய பந்து போல செய்து கொள்ளுங்கள். அதை ஒரு கயிற்றில் கட்டி உங்கள் வீட்டின் எந்த இடத்தில் குளவிகள் அதிகம் வருமோ அங்கு தொங்கவிட்டு விடுங்கள். இது பார்ப்பதற்கு அச்சு அசலாக ஒரு பெரிய குளவிக்கூடு போலவே தோற்றமளிக்கும்.

இதையும் படியுங்கள்:
குளவி வீட்டில் கூடு கட்டினால், குழந்தை பேறு உண்டாகுமா?
Fake Wasp Nest

ஓடிப்போகும் குளவிகள்!

உங்கள் வீட்டை நோக்கி வரும் குளவிகள் இந்த டூப்ளிகேட் பேப்பர் கூட்டினை பார்த்தவுடன் அங்கு ஏற்கனவே ஒரு மிகப்பெரிய குளவி கேங் தங்கி இருப்பதாக நினைத்துக் கொண்டு பயந்து போய் உடனே எஸ்கேப் ஆகிவிடும். இது நூறு சதவீதம் வேலை செய்யும் ஒரு அற்புதமான இயற்கை தந்திரம். இது தவிர குளவிகளுக்கு புதினா வாசனை சுத்தமாக பிடிக்காது. அதனால் கொஞ்சம் பெப்பர்மின்ட் எசென்ஷியல் ஆயிலை தண்ணீரில் கலந்து வீட்டின் மூலைகளில் ஸ்ப்ரே செய்துவிட்டால் அந்த வாடைக்கு ஒரு குளவி கூட உங்கள் வீட்டின் பக்கம் எட்டிப்பார்க்காது.

பெரிய அளவில் கஷ்டப்படாமல் வெறும் இரண்டே நிமிடங்களில் செய்யக்கூடிய இந்த எளிய ட்ரிக் மூலம் குளவிகளின் தொல்லையில் இருந்து நாம் மிக சுலபமாக தப்பித்துவிடலாம். இது நமது பட்ஜெட்டுக்கும் ரொம்பவே ஏற்றது அதே சமயம் சுற்றுச்சூழலுக்கும் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது.

இதையும் படியுங்கள்:
கோடை வெயிலால் சரும அரிப்பா? வீட்டில் இருக்கும் இந்த 5 பொருட்கள் போதும்!
Fake Wasp Nest

இனிமேல் உங்கள் வீட்டில் குளவிகள் கூடு கட்டுவதை பார்த்தால் பயந்து ஓடாமல் உடனடியாக ஒரு பழுப்பு நிற காகிதப்பையை எடுத்து இந்த மாஸான ஐடியாவை ட்ரை செய்து பாருங்கள். உங்களின் வீடு எந்த ஒரு குளவி தொல்லையும் இல்லாமல் ரொம்பவே பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் மாறும்.

logo
Kalki Online
kalkionline.com