புரூஸ் லீ கூறிய புகழ் பெற்ற மேற்கோள்களும்; வாழ்க்கைத் தத்துவங்களும்!

bruce lee
bruce leehttps://www.kcci.com
Published on

புரூஸ் லீ ஒரு புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகராகவும், சீன தற்காப்புக் கலைஞராகவும், தத்துவவாதியாகவும், திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருந்தார்.1970களின் முற்பகுதியில் தற்காப்புக் கலைப் படங்களில் நடித்ததற்காக அவர் சர்வதேச அளவில் புகழ் பெற்றார். மேலும் புரூஸ் லீ தனது தற்காப்புக் கலையின் திறமைக்காக மட்டுமல்ல, அவரது தத்துவ நுண்ணறிவுக்காகவும் புகழ் பெற்றவர். அவர் கூறிய சில வாழ்க்கைத் தத்துவங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

புரூஸ் லீயின் பிரபலமான மேற்கோள்கள்:

1. ‘தண்ணீர் போல் இரு நண்பா.’ இந்த மேற்கோள் வாழ்க்கையின் நிலையில்லா தன்மையையும், மக்கள் நெகிழ்வுத்தன்மையோடும் அனுசரித்துச் செல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

2. ‘பயனுள்ளதை உள்வாங்கவும். தேவை இல்லாததை நிராகரிக்கவும். உங்களுடைய சொந்தமான தனிப்பட்ட திறமையை வளர்த்துக் கொள்ளவும்.’ இதன் மூலம் கற்றல் மற்றும் வளர்ச்சிக்கான நடைமுறை மற்றும் தனிப்பட்ட திறமையை மேம்படுத்த லீ பரிந்துரைக்கிறார்.

3. ‘10,000 உதைகளை பயிற்சி செய்த மனிதனுக்கு நான் பயப்படவில்லை. ஆனால், ஒரு உதையை 10,000 முறை பயிற்சி செய்த மனிதனுக்கு நான் பயப்படுகிறேன்.’ இது தேர்ச்சி மற்றும் அர்ப்பணிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

4. ‘அழியாமைக்கான திறவுகோல் முதலில் நினைவில் கொள்ளத்தக்க வாழ்க்கையை வாழ்வது.’ இதன் மூலம் லீ அர்த்தமுள்ள மற்றும் தாக்கம் நிறைந்த வாழ்க்கையை வாழ்வதன் முக்கியத்துவத்தைப் பற்றி பேசுகிறார்.

5. ‘அறிவை சேர்ப்பது மட்டும் போதாது, அதை வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும். விருப்பம் மட்டும் இருந்தால் போதாது. அதை செய்யவும் வேண்டும்.’ இது செயலின் முக்கியத்துவத்தையும் அறிவை பயன்படுத்துவதையும் ஊக்குவிக்கிறது.

6.‘தவறுகளை ஒப்புக்கொள்ளும் தைரியம் இருந்தால், அவை எப்போதும் மன்னிக்கப்படும்.’ பணிவு மற்றும் ஒருவரின் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வது ஆகியவற்றின் மதிப்பை லீ வலியுறுத்துகிறார்.

7. ‘இலகுவான, சிரமமில்லாத வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்யாதீர்கள். மிகக் கடினமான வாழ்க்கையை வாழ்வதற்கான சக்தியை தரும்படி பிரார்த்தியுங்கள்.’ இந்த மேற்கோள் பின்னடைவு மற்றும் மனதின் உள்வலிமையின் வளர்ச்சியை பற்றிப் பேசுகிறது.

இதையும் படியுங்கள்:
தூக்கம் போச்சா? அப்போ எல்லாமே போச்சு போ!
bruce lee

8. ‘ஒரு செயலைச் செய்யலாமா? வேண்டாமா- என்பதைப் பற்றி நீண்ட நேரம் யோசித்தால் நீங்கள் ஒருபோதும் அதைச் செய்ய மாட்டீர்கள். அதற்கு பதிலாக தினமும் உங்கள் இலக்கை நோக்கி ஒரு திட்டவட்டமான நகர்வை மேற்கொள்ளுங்கள்.’ இது இலக்கைப் பற்றி  வெறுமனே சிந்தித்தால் மட்டும் போதாது. அதை செயல்படுத்துவதன் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசுகிறது.

9. ‘பொருட்களைப் பற்றி அதிகமாக மதிப்பிடுகிறோம். அதே சமயத்தில் நம்மைப் பற்றி மிகக் குறைவான மதிப்பீடுகளை வைத்திருக்கிறோம்.’ இதன் மூலம் நாம் வைத்திருக்கும் பொருட்களை விட நமது சுயமதிப்பு உயர்ந்தது என்று ஊக்குவிக்கிறார்.

10. ‘என்னைச் சுற்றிலும் நரகத்தை விட கொடிய கடினமான சூழ்நிலைகள் இருந்தாலும் நான் எனக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்கிறேன்.’ இந்த மேற்கோள் கடினமான சூழ்நிலைகளில் கூட நேர்மறையாக சிந்திக்கும் ஆற்றலையும்,  உறுதியான மனோநிலையையும், தனக்கான வாய்ப்புகளை உருவாக்கும் ஆற்றலையும் குறிக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com