மற்றவர் மனதைக் கவர இந்த 5 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!

Follow these 5 tips to impress others
Follow these 5 tips to impress others
Published on

னிதர்களை சமூக விலங்குகள் என்றும் சொல்வார்கள். காரணம், நல்ல நண்பர்கள், உறவுகளுடன் வாழ விரும்புவதால். பிறர் பார்வையில் தான் உயர்ந்தவராக இருக்க வேண்டும். பிறர் தன்னை மதிக்க வேண்டும் என்று விரும்பாத மனிதர்கள் குறைவு. மற்றவர்கள் மனதைக் கவர இந்த ஐந்து டிப்ஸ்களும் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

நகைச்சுவை உணர்வு: நகைச்சுவை உணர்வு இருக்கும் மனிதர்கள் தான் மட்டும் மகிழ்ச்சியாக இல்லாமல், சுற்றி இருப்பவர்களையும் சிரிக்க வைத்து விடுவார்கள். இவர்களுக்கு நிறைய நண்பர்கள் இருப்பார்கள். மேலும், மிக எளிதில் புதியவர்கள் கூட இவர்களுக்கு நண்பர்களாகி விடுவார்கள். சிரிக்க சிரிக்க பேசுபவர்களிடம் நட்பு வைத்துக்கொள்ள பிறர் விரும்புவார்கள். மேலும், இவர்களை எல்லோருக்கும் பிடிக்கும். இவர்களுடைய வார்த்தைக்கு நல்ல மரியாதை இருக்கும். இந்த நகைச்சுவை உணர்வு சிலருக்கு இயற்கையிலேயே இருக்கும். ஆனால், முயன்றால் பயிற்சியின் மூலம் இதை அடையவும் முடியும். முதலில் வேடிக்கையான சம்பவங்களை பிறரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும். அதைக் கேட்டு பிறர் சிரிக்க வேண்டும் என்று விரும்புவதுடன், நீங்களும் அதை ரசிக்கும் வகையில் சொல்ல வேண்டும். இதனால் நீங்கள் பிறரால் விரும்பத்தக்க மனிதராக ஆகி விடுவீர்கள்.

2. புன்னகை: பிறரை கவர்ந்து விடுவதில் மிக முக்கியமான அம்சமாகத் திகழ்வது புன்னகை. ஆனால், நிறைய பேருக்கு இந்த ட்ரிக் தெரியவில்லை என்பதுதான் நிஜம். பிறருடன் பேசும்போது தாங்கள் என்ன சொல்ல வருகிறோம் என்பதில்தான் கவனம் வைக்கிறார்களே தவிர, புன்னகைக்க மறந்து விடுகிறார்கள். சிடுசிடுத்த முகத்துடனும் கடுகடுத்த பாவனையுடனும் இருப்பவர்களை யாரும் ஒருபோதும் விரும்புவது இல்லை. அந்த மாதிரி இருப்பவர்களின் அருகில் செல்லவே பயப்படுவார்கள். பேசவும் அஞ்சுவார்கள். புன்னகை முகத்திற்கு அழகை மட்டும் தருவதில்லை, பிறரை கவரும் அம்சமாகவும் இருக்கிறது. புன்னகை முகத்துடன் இருப்பவர்களிடம் பேசவும் பழகவும் பிறர் விரும்பவார்கள்.

3. பொதுப்படையான பேச்சு: ஒரே எண்ணமுடைய இருவர் மிக எளிதில் நண்பர்களாகி விடுவார்கள். மனிதர்கள் சமூக பிரஜைகள். ஒரு கூட்டமாக இருக்க விரும்புவார்கள். தன்னைப் போலவே எண்ணமும் செயல்பாடுகளும் உடைய இன்னொரு மனிதரை பார்க்கும்போது அவர்களுக்கு எளிதில் பழகப் பிடிக்கிறது. எனவே, பிறருடன் பழக ஆரம்பிக்கும்போது இருவருக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை கவனித்து அதைப் பற்றி பேச வேண்டும். அரசியல், சினிமா, விளையாட்டு, உணவு என்று ஒரு பொதுப்படையான, ஆனால் இருவருக்கும் பிடித்த தலைப்பில் பேச ஆரம்பிக்கும்போது விரைவில் நண்பர்களாகி விடுவார்கள்.

இதையும் படியுங்கள்:
வீட் கிராஸ் ஜூஸ் தரும் ஆரோக்கிய நன்மைகள்!
Follow these 5 tips to impress others

4. மனம் திறந்து பாராட்டுங்கள்: பாராட்டை விரும்பாதோர் யாரும் கிடையாது. ஆனால், நிறைய பேருக்கு பாராட்ட மனம் இருப்பதில்லை என்பதே உண்மை. பிறருடைய உடையாகட்டும் அவருடைய செயலாகட்டும், நன்றாக இருந்தாலும், நன்றாக இருக்கிறது என்று வாயை திறந்து அவ்வளவு எளிதில் சொல்லி விட மாட்டார்கள். தன்னுடைய செயலும் நடவடிக்கையும் பிறரால் பாராட்டப்படும்போது அவர், சம்பந்தப்பட்ட நபரை மிகவும் நேசிக்கத் தொடங்கி விடுவார். ஆனால், அதே சமயம் அளவுக்கு அதிகமாக புகழக் கூடாது. தேவையான அளவு உண்மையான பாராட்டு அவசியம்.

5. உண்மையாக இருங்கள்: உங்களுடைய இயல்பு எப்படியோ அதுபோலவே நடந்து கொள்வதும் அவசியம். பிறருக்காக எப்போதும் நடிக்கவே கூடாது. நாம் சொல்வது ஒன்றாகவும் செய்வது ஒன்றாகவும் இருக்கக் கூடாது. தனது உண்மையான சுபாவத்தை மறைத்து பொய்யாக நடித்துவிட்டு பிறகு சுயரூபம் தெரிய வரும்போது பிறருடைய வெறுப்புக்கும் துவேஷத்திற்கும் ஆளாக நேரிடும்.

எந்த சூழ்நிலையிலும் தனது இயல்பு மாறாமல் நடந்துகொள்ள வேண்டும். இந்த ஐந்து டிப்ஸ்களும் ஒருவர் பிறர் மனதைக் கவர மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com