வீட்டு உபயோக பொருட்களின் ஆயுளை நீட்டிக்க விரும்புறீங்களா?

Household appliances
Household appliancesImg Credit: Istock

ஏசி (AC)

வருடாந்திர சேவை மற்றும் பராமரிப்பு அட்டவணை:

உங்கள் AC ஒவ்வொரு ஆண்டும் தொழில்முறை AC சேவை அல்லது உங்கள் உற்பத்தியாளரின் அங்கீகரிக்கப்பட்ட சேவை மேற்கொள்ளும். முகவர் மூலம் பரிசோதிக்கப்பட்டு மற்றும் சுத்தம் செய்யப்பட வேண்டும்.

பில்டரை தவறாமல் மாற்றவும்:

வருடாந்திர சோதனையின்போது டெக்னீசியன் பில்டர்களை கட்டாயம் சரிபார்க்க வேண்டும். பொதுவாக வீட்டு உரிமையாளர்களே பில்டரை கண்காணிக்க வேண்டும்.

அவற்றை மாற்றுவதற்கான நேரம் வரவில்லை என்றாலும், அழுக்காக இருந்தால் அவற்றை உடனே மாற்றுங்கள்.

மின் விசிறியை பயன்படுத்துங்கள்:

மின்விசிறி மற்றும் உங்கள் ஏசியை பயன்படுத்துவதன் மூலம் ஏசி பயன்பாட்டை மேம்படுத்தலாம். மின்விசிறி மற்றும் ஏசி இரண்டையும் ஒன்றாக பயன்படுத்துவது காற்றைச் சிறப்பாக சுற்றுவதற்கு உதவுகிறது. மற்றும் உங்கள் ஏசியை குறைந்த பவர் அமைப்பில் செயல்பட வைக்கும் .

கோடைக்காலத்தில் ஜன்னல்களை மூடுங்கள் :

கோடைக்காலத்தில் ஏசி ஓடிக் கொண்டிருக்கும்பொழுது ஜன்னல்களை மூடுங்கள் அதுவே மின்சாரத்தின் அளவை குறைக்கும்.

சலவை இயந்திரம் (Washing machine)

அதிக சுமைகளைத் தவிர்க்கவும்:

அதிக சுமை இயந்திரம் செயலிழக்கச் செய்யலாம்.

ஆடைகளை உடனடியாக அகற்றவும்:

சுழற்சி முடிந்ததும், ஈரப்பதம் மற்றும் அச்சுகளைத் தடுக்க துணிகளை உடனுக்குடன் அகற்றவும்.

சரியான detergent பயன்படுத்தவும்:

உங்கள் இயந்திரத்திற்கு பொருத்தமான detergent பயன்படுத்துவது முக்கியமானது.

பாக்கெட்டுகளை சரிபார்க்கவும்:

துவைக்கும் முன் எப்போதும் உங்கள் துணிகளின் பாக்கெட்டுகளை சரிபார்க்கவும்.

வழக்கமான சுத்தம்:

உங்கள் வாஷிங் மெஷினை அடிக்கடி சுத்தம் செய்து சோப்பு கறை மற்றும் பில்டப்பை அகற்றவும்.

வாஷரை நிலைப்படுத்தவும்:

அதிர்வு மற்றும் சாத்தியமான சேதத்தை குறைக்க வாஷர் ஒரு நிலை மேற்பரப்பில் நிறுவப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும். உங்கள் இயந்திர அமைப்புகளைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்குத் தேவையான அளவுக்கு பொருத்தமான சுழற்சியைப் பயன்படுத்தவும்.

கனமான பொருட்களை தவிர்க்கவும்:

தரைவிரிப்புகள் போன்ற கனமான பொருட்கள் இயந்திரத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும்.

முறையான பராமரிப்பு:

கால அட்டவணைப்படி துப்புரவு மற்றும் ஆய்வுகள் சிக்கல்கள் வரும் முன் தடுக்க உதவும்.

குளிர்சாதனப்பெட்டி (Refrigerator)

Condenser coilலில் அடைப்பு:

Condenser coil லில் தூசி, அழுக்கு, முடி, மற்றும் பிற குப்பைகள் சேகரிக்கின்றன. அவை வெப்பத்தைச் சிதறடிக்கும் திறனைக் கட்டுப்படுத்துகின்றன. செயல்திறனையும் குறைக்கின்றன. இறுதியில் செயலிழப்பை ஏற்படுத்தும். ஆகவே ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும், மென்மையான பிரஷைப் பயன்படுத்தி மெதுவாக சுத்தம் செய்யுங்கள்.

கதவு கேஸ்கட்களை சுத்தமாக வைத்திருங்கள்:

குளிர்சாதனப் பெட்டியின் கதவுகளைச் சுற்றியுள்ள கேஸ்கட்கள் குளிர்ந்த காற்று வெளியேறுவதைத் தடுக்கின்றன. ஆனால் இவை சரியாகப் படிந்து உறுதியாக இல்லையென்றால் குளிர் வெளியேற வைக்கும்.எனவே, ஈரமான துணியால் கேஸ்கட்களை சுத்தம் செய்யவேண்டும்.

நீர் வடிகட்டியை மாற்றவும்:

உங்கள் குளிர்சாதனப் பெட்டியில் நீர் வடிகட்டி இருந்தால், அதை ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் மாற்றவும்.

அதிக நேரம் கதவுகளைத் திறந்து வைக்காதீர்கள்:

கதவைத் திறந்து வைத்திருப்பது அதன் குளிரூட்டும் திறன், ஆற்றலை வீணடிக்கிறது .

வழக்கமான சர்வீசிங்:

வழக்கமான சர்வீசிங் உங்கள் குளிர்சாதன பெட்டியை நீண்ட காலத்திற்கு சிறப்பாகச் செயல்படுவதையும், அதிகப்படியான சக்தியைப் பயன்படுத்தாமல் பயனுள்ள குளிர்ச்சியை உருவாக்குவதையும் உறுதி செய்கிறது.

Overloading தவிர்க்கவும்:

உங்கள் குளிர்சாதனப் பெட்டியை overloading செய்வது நிச்சயமாக அதன் ஒட்டுமொத்த குளிரூட்டும் திறனைக் குறைக்கும்.

இதையும் படியுங்கள்:
சம்மர் விடுமுறையில் குழந்தைகளை சமாளிக்க சில யோசனைகள்!
Household appliances

மின் புகைப்போக்கி (Chimney)

வழக்கமான சுத்தம்:

உங்கள் சிம்னி ஃபில்டர்கள் மற்றும் சிம்னி hoodடை வழக்கமான அடிப்படையில் சுத்தம் செய்யுங்கள். சிறந்த செயல்திறனுக்காக அதை வாரத்திற்கு ஒரு முறை கழுவி சுத்தம் செய்ய வேண்டும். Baffle வடிகட்டிகளை 3 மாதங்களுக்கு ஒரு முறை கழுவ வேண்டும்.

நிபுணத்துவ சேவை:

வருடத்திற்கு ஒரு முறையாவது உங்கள் chimneyயின் பராமரிப்பைக் கவனியுங்கள். சான்றளிக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் ஒரு முழுமையான ஆய்வு நடத்தலாம். இது ஒரு பாதுகாப்பான செயல்திறனுக்கு வழிவகுக்கும்..

முறையான பயன்பாடு:

Chimneyயைப் பயன்படுத்துவதற்கான சரியான வழிகளைப் புரிந்துகொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக, 200 சதுர அடி சமையலறைக்கு ஒரு தகுதியான chimney சமையல் அறையில் இருக்கும் புகையை அகற்ற குறைந்தபட்சம் 1200 m3/hr உறிஞ்சும் சக்தியைக் கொண்டிருக்க வேண்டும்.

மோட்டார் பாதுகாப்பு:

நீங்கள் ஒரு chimneyயை வாங்கும்போது அதன் மோட்டாரில் வெப்ப சுமை பாதுகாப்பு உள்ளதா, மற்றும் அதிக வெப்பமடையும் போது மோட்டாருக்கு செல்லும் மின்சாரத்தை அது துண்டிக்கிறதா, என்பதை கேட்டு உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் அப்படி இருந்தால்தான் அதன் ஆயுள் நீண்ட காலத்திற்கு அதிகரிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com