அலுவலகப் பயணத்தை ஜாலியா மாற்றணுமா? இதை ஃபாலோ பண்ணுங்க!

Man in bus
Man
Published on

நவீன வாழ்க்கையில், தொழில்நுட்பம் உலகை சுருக்கிவிட்டாலும், அலுவலகத்திற்கு நீண்ட தூரம் பயணம் செய்வது என்பது லட்சக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்வின் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாகிவிட்டது.

சென்னை, பெங்களூரு, டெல்லி போன்ற பெருநகரங்களில் மட்டுமல்லாது வளர்ந்து வரும் கோவை, சேலம் போன்ற நகரங்களிலும்கூட காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனப் பெருக்கம், போக்குவரத்து நெரிசல், கால தாமதம், மன அழுத்தம் எனப் பல சவால்களை இந்த பயணத்தில் ஏராளமானோர் சந்திக்கின்றனர். அந்த வகையில், அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியாக மாறியிருக்கும் இந்த பயணத்தை அமைதியாகவும், பாதுகாப்பாகவும், பயனுள்ளதாகவும் மாற்றிக் கொள்ள சில முக்கியமான குறிப்புகளை இங்கே வாசிக்கலாம்.

1. முன்கூட்டியே திட்டமிடுங்கள்:

நீங்கள் அலுவலகத்திற்குப் புறப்படும் முன், கூகுள் மேப்ஸ் அல்லது பிற போக்குவரத்து செயலிகளைப் பயன்படுத்தி போக்குவரத்து நெரிசல் மற்றும் பயண நேரத்தை முன்னரே அறிந்து கொள்ளுங்கள்.

எதிர்பாராத போக்குவரத்து இடையூறுகளை சமாளிக்க, ஒன்று அல்லது இரண்டு மாற்றுப் பாதைகளை எப்போதும் திட்டமிட்டு வைத்திருக்க வேண்டும்.

எப்போதும் சிறிது கூடுதல் நேரம் வைத்துக்கொண்டு முன்பே புறப்பட முயற்சி செய்யுங்கள். இது அவசர நிலையை தவிர்க்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும்.

2. பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளியுங்கள்:

உங்கள் வாகனம் நல்ல நிலையில் இருப்பதை தினமும் காலையில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். டயர்களின் அழுத்தம், பிரேக்குகள், ஹெட்லைட்கள் போன்றவற்றை தவறாமல் பரிசோதிக்கவும்.

சாலை விதிகளை மதித்து, கவனமாக ஓட்ட வேண்டும். அவசரப்பட வேண்டாம். வாகனத்தில் பயணிக்கும் போது  செல்போன் பேசுவது அல்லது குறுஞ்செய்தி அனுப்புவது போன்ற கவனச்சிதறல்களைத் தவிருங்கள். இது உங்கள் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியம்.

நீண்ட தூரம் பயணம் செய்யும்போது சோர்வாக உணர்ந்தால், பாதுகாப்பான இடத்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்து பின்னர் செல்லலாம்.

3. உங்கள் நேரத்தைப் பயனுள்ளதாக்குங்கள்:

பயணத்தின்போது  உங்களுக்குப் பிடித்த பாட்காஸ்ட்களைக் கேட்கலாம். இது உங்கள் மனதை அமைதிப்படுத்துவதோடு, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் உதவும்.

மேலும், பிடித்தமான இசையைக் கேட்பதும் மனதை ரிலாக்ஸ் செய்ய உதவும். ஆனால், மிக அதிக ஒலியில் கேட்பதைத் தவிர்க்க வேண்டும்.

பொதுப் போக்குவரத்தில் பயணிப்பவர்கள் சில நேரங்களில், முக்கியமான மின்னஞ்சல்களைப் படித்து அல்லது திட்டமிடுதல் போன்ற சிறு வேலைகளை உங்கள் பயணத்தின்போதே முடித்து வைக்கலாம்.

இதையும் படியுங்கள்:
'work-life balance' - எப்படி சமாளிப்பது?ஒவ்வொரு Gen Z பெண்ணும் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்!
Man in bus

4. ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள்:

பயணத்தின் போது சத்தான ஸ்னாக்ஸ், நட்ஸ்களை எடுத்துச் செல்லுங்கள். இது உடலிற்கு ஆற்றல் அளித்து சோர்வில்லாமல் பயணிக்க உதவும்.

5. டிஜிட்டல் டீடாக்ஸ்:

சில நேரங்களில், பயணத்தின்போது செல்போன் அல்லது மற்ற டிஜிட்டல் சாதனங்களில் இருந்து விலகி வெளி உலகத்தை பார்த்து ரசிக்கலாம்.

அதோடு, நீங்கள் தினமும் பயணத்தில் சந்திக்கும் அனுபவங்களைப் பற்றி ஒரு சிறிய பயணப் பதிவை எழுதலாம். இது உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும், உங்கள் பயணத்தை ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கவும் உதவும். இது ஒருவித மன அமைதியையும் கொடுக்கும்.

இதையும் படியுங்கள்:
முகக் கணினிகள்: கையில் இருந்து முகம் நோக்கிய தொழில்நுட்பப் பயணம்!
Man in bus

இந்த எளிய அணுகுமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் தினசரி அலுவலகப் பயணத்தை பாதுகாப்பான மற்றும் உற்பத்தித்திறன் மிக்க அனுபவமாக மாற்றிக்கொள்ளலாம். போக்குவரத்து நெரிசலும், காலதாமதமும் தவிர்க்க முடியாதவை என்றாலும், அவற்றை எதிர்கொள்ளும் உங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்வதன் மூலம் பயணத்தை இனிதாக மாற்ற முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com